Kathir News
Begin typing your search above and press return to search.

பில்லியனர் அந்தஸ்தை கைப்பற்றிய இந்திய பெண்- சுந்தர் பிச்சை , சத்யா நாத்தல்லா பின்னுக்கு போயாச்சு!

சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவை பின்னுக்கு தள்ளி ஜெயஸ்ரீ உல்லால் என்ற இந்திய வம்சாவளி பெண்மணி முதலிடத்திற்கு வந்துள்ளார்.

பில்லியனர் அந்தஸ்தை   கைப்பற்றிய இந்திய பெண்- சுந்தர் பிச்சை , சத்யா நாத்தல்லா பின்னுக்கு போயாச்சு!

KarthigaBy : Karthiga

  |  13 Oct 2023 6:15 AM GMT

கடந்த 2022ல் இந்திய பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 221 என கூறப்பட்ட நிலையில், 2023ல் அந்த எண்ணிக்கை 259 என அதிகரித்துள்ளது. தொழில் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இடம் பிடித்துள்ளவர்களும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அந்த வரிசையில் தற்போது சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவை பின்னுக்கு தள்ளி ஜெயஸ்ரீ உல்லால் என்ற இந்திய வம்சாவளி பெண்மணி முதலிடத்திற்கு வந்துள்ளார்.

2008ல் இருந்தே Arista Networks நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார் ஜெயஸ்ரீ உல்லால். Arista Networks நிறுவனத்தில் இவர் இணையும் போது, அந்த நிறுவனத்தில் 50க்கும் குறைவான ஊழியர்களும் சொல்லும்படி வருவாயும் ஈட்டாத நிறுவனமாக இருந்துள்ளது.


ஆனால் 2022ல் Arista Networks நிறுவனத்தின் வருவாய் என்பது 438.13 கோடி அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,612 எனவும் தகவல் வெளியாகியுள்ளது.லண்டனில் பிறந்த ஜெயஸ்ரீ உல்லால் இந்தியாவில் தான் பாடசாலை கல்வியை முடித்துள்ளார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பும் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ.18,199 கோடி என்றே கூறப்படுகிறது.


SOURCE :news.lankasri.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News