Kathir News
Begin typing your search above and press return to search.

'என்ன தைரியம் இருந்தா அதிகாரிகள் மேல கை வைப்பீங்க...?' ஜாமீன் கேட்ட 'கரூர் பத்து தல' குரூப்பை விரட்டிய நீதிபதி...

என்ன தைரியம் இருந்தா அதிகாரிகள் மேல கை வைப்பீங்க...? ஜாமீன் கேட்ட கரூர் பத்து தல குரூப்பை விரட்டிய நீதிபதி...
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Oct 2023 1:24 PM GMT

அதிகாரிகளை தாக்கிய வினையை அனுபவிக்கும் செந்தில் பாலாஜி...!

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு எட்டாவது முறையாக நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு அக்டோபர் 20 வரை புழல் சிறையில் அடைக்க சென்னை முதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அவர் ஜாமீன் வேண்டும் என தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இதனை அடுத்து செந்தில் பாலாஜி உடல்நிலையை காரணம் காண்பித்து அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் எனக்கூறி செந்தில்பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது, அந்த மனுவில் சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஸ்டாண்ட்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் தனது உடல் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் உடல்நிலை மிகவும் பலவீனம் அடைந்து விட்டது ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மீண்டும் உடல்நிலை மோசமடைந்தால் அது தனக்கு பிரச்சினையாகிவிடும் எனக் கூறி செந்தில் பாலாஜி தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கேட்டுள்ளார் எனவும் ஜாமின் மனுவில் செந்தில் பாலாஜி உடல்நிலையில் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கி உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த மனு நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி ஸ்டான்லி மருத்துவர்கள் அறிக்கையை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட அறிகுறிகள் இருப்பதாக கூறி உடல்நிலை ஆய்வு செய்யலாம் என வாதிட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின் படி வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் செந்தில் பாலாஜி தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது எனது முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில் ஸ்டான்லி மருத்துவர்கள் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அவசியம் என குறிப்பிடவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இது மட்டுமில்லாமல் அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இன்று தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறும் பொழுது, 'மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கேட்க முடியாது அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாகியுள்ளது கருத்தில் கொள்ள வேண்டியது, மேலும் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பான சம்பவங்களை கருத்தில் கொள்ள வேண்டும்' எனவும் கூறி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது செந்தில்பாலாஜி தரப்பிற்கு தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அரசியல் விமர்சகர்களிடமும், சட்ட வல்லுநர்களிடம் இது குறித்து விசாரிக்கும் பொழுது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரும் வரை, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருக்கும் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கு 100% வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News