'அண்ணாமலை ஆட்டுகுட்டிதான்! அதுக்கு என்ன இப்ப..?' அண்ணாமலைக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயி மகன்கள்...களம் மாறியது...!
By : Mohan Raj
'அவர் ஆட்டுக்குட்டி தான் மேய்கிறார் என்ன இப்ப' அண்ணாமலைக்கு ஆதரவாக திரண்ட கூட்டம்...! களம் மாறியது...!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில தலைவர் பொறுப்பை ஏற்று அதிலிருந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார், குறிப்பாக அவர் குடும்பம் மற்றும் அவரது குடும்பம் சார்ந்த தொழிலை வைத்து அண்ணாமலையை பலர் அதுவும் குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.
அண்ணாமலை ஆடு மேய்க்கிறார்! ஆட்டுக்குட்டிகள் வளர்க்கிறார்! ஆடு மேய்ப்பதே தொழிலாக வைத்திருக்கிறார்! என்றெல்லாம் கூறி ஆடு படத்தையும், அண்ணாமலை படத்தையும் சித்தரித்து இணையதளத்தில் பல கிண்டல் கேலிகளை திமுக கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.
என்னதான் அண்ணாமலை ஐபிஎஸ் படித்து இருந்தாலும், ஒன்பது ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றினாலும், அவரை குறிப்பிடும் பொழுது எதிர்க்கட்சியினர் குறிப்பாக திமுக கூட்டணி கட்சியினர் திமுக ஆதரவு முகாமில் இருப்பவர்கள், ஆட்டுக்குட்டி என குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வளவு ஏன் திமுக அமைப்பை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூட ஒருமுறை பேசும்பொழுது 'ஆட்டை பிரியாணி போட்டு விடுவோம்' என கூறினார்.
இணையதளங்களில் கூட அண்ணாமலையை விமர்சிப்பதற்கு அண்ணாமலை பிடிக்காதவர்கள் பிரயோகப்படுத்தும் வார்த்தை ஆட்டுக்குட்டி தான்! இப்படி அவரை ஆட்டுக்குட்டி, ஆடு என கூறி கூறி அண்ணாமலையை கிண்டல் செய்வது வழக்கமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'ஆமாங்க அவர் ஆடுதாங்க மேய்கிறார்! அவர் குடும்பம் ஆடும் மேய்த்த குடும்பம் தாங்க! என்ன இப்ப அதுக்கு' என அவருக்கு ஆதரவாக விவசாய குடும்பத்தினர் களமிறங்கியுள்ளனர்.
தற்பொழுது கொங்கு மண்டலத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்று வருகிறது, அந்த யாத்திரையில் பல தரப்பினரும் கலந்து கொண்டு வருகின்றனர்! இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற கும்மி பாட்டு குழுவினரான வள்ளி கும்மி குழுவினரின் நிகழ்ச்சி ஒன்று 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வள்ளி கும்மி குழுவினரின் ஒரு பகுதி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. அப்பொழுது இளைஞர் ஒருவர் மைக்கை பிடித்து கூறும் பொழுது 'அண்ணாமலை ஆட்டுக்குட்டி தாங்க! அவர் ஆடுதாங்க மேய்கிறார்! அவர் குடும்பம் ஆடு வளர்த்த குடும்பம் தாங்க! நாங்களும் அதே மாதிரிதாங்க! நாங்களும் ஆடு வளர்த்து தான் முன்னுக்கு வந்து இருக்கோம்! நாங்களும் ஆட்டுக்குட்டி வளர்த்திருக்கிறோம்! எங்க குடும்பமும் ஆடு வளர்த்த குடும்பம்தான்! அண்ணாமலை, நாங்க மட்டும் கிடையாதுங்க தமிழ்நாட்டில இன்னைக்கு பல விவசாய குடும்பம் ஆடு வளர்த்துத்தாங்க முன்னணிக்கு வந்திருக்கு! அதனால என்னங்க தப்பு? அதுக்காகத்தாங்க இன்னைக்கு நாங்க விவசாயி மகன்கள், விவசாய குடும்பத்துடன் அண்ணாமலைக்கு ஆதரவா நிக்கிறோம்' என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவர்கள் அண்ணாமலை ஆடு மேய்த்தது, அண்ணாமலை குடும்பத்தினர் ஆட்டை பராமரிப்பதை வைத்து குறிப்பிட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது யாத்திரைக்கு வந்திருந்த அனைவரையும் பரவசப்படுத்தியது, எதிர் முகாமில் இருப்பவர்கள் அண்ணாமலையை ஆடு எனக்கு கிண்டல் செய்து இன்று அந்த ஆடு என்கின்ற பெயரே அண்ணாமலைக்கு ஆதரவாக பல விவசாய குடும்பத்தினரை ஒன்று சேர்த்து இருப்பது எதிர் முகாமை திகைக்க வைத்துள்ளது...!