Kathir News
Begin typing your search above and press return to search.

இதுதான் மோடி ஸ்டைல்...! 'ஆபரேஷன் அஜய்' மூலம் கெத்து காட்டும் பாரதம்..!

இதுதான் மோடி ஸ்டைல்...! ஆபரேஷன் அஜய் மூலம் கெத்து காட்டும் பாரதம்..!
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Oct 2023 1:31 PM GMT

மோடி சொன்னார் செய்தார்...! கெத்து காட்டும் 'ஆபரேஷன் அஜய்'

அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் முண்டது, பயங்கரவாதிகளின் தாக்குதலில் 1300'க்கும் மேற்பட்ட இஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் பெரும்பாலானோர் அப்பாவிகள். மேலும் பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட பலரை பிணை செய்திகளாக வைத்துள்ளனர் தீவிரவாதிகள். இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள பதட்ட சூழலில் இந்திய மக்களை எப்படி காப்பாற்றுவது என யோசித்த பொழுது இந்தியர்களுக்கு உதவி செய்யப்படும் என 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தை பிரதமர் மோடியின் அமைச்சகம் அறிவித்தது.

இதன்மூலம் இஸ்ரேலில் உள்ள சுமார் 18000 இந்தியர்கள் தாயகம் திரும்ப 'ஆப்ரேஷன் அஜய்' திட்டம் கடந்து வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது, இந்த 'ஆப்ரேஷன் அஜய்' மூலம் மூன்று விமானங்களில் 644 இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், 'ஆப்ரேஷன் அஜய்' திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மூன்றாவது விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டெல்லியை வந்து அடைந்தது, இஸ்ரேலில் இருந்து வந்த இந்தியர்களை டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் கௌசல் கிஷோர் வரவேற்றார்.

அப்போது மத்திய அமைச்சர் கிஷோர் கூறும் பொழுது, 'பிரதமர் மோடி வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி நாட்டின் குடிமக்களுக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார், இந்திய குடிமக்கள் இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக இங்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் தங்கள் நாடான இந்தியாவில் வந்து இறங்கியவுடன் இந்தியா தான் எங்களை காப்பாற்றியது என்ற உணர்வுடன் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர்' எனக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக சனிக்கிழமை வந்த இரண்டாவது விமானத்தில் சுமார் 28 தமிழர்கள் உட்பட 235 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கி உள்ள இந்திய நிறுவனங்களுக்கு உதவி வழங்கி வருவது மட்டுமல்லாமல் அங்கு தேவைப்படும் இந்தியர்களை அதாவது இந்தியாவிற்கு வர வேண்டும் என நினைக்கும் இந்தியர்களை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வருவதற்கு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது இந்திய அரசு, இந்த அறிவிப்பில் உதவி எண் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறை எண் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், இஸ்ரேலில் இருந்து வரும் அழைப்புகளை இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களை வைத்து உடனடியாக அவர்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து, அதற்கு உதவி செய்து அவர்கள் எங்கு வரவேண்டும்! யாரை சந்திக்க வேண்டும்! எந்த நேரத்தில் விமானம் புறப்படும்! எந்த விமான நிலையத்தில் இருந்து விமான புறப்படும்! போன்ற விவரங்களை துல்லியமாக அவர்களுக்கு தெரிவித்து இஸ்ரேலில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் இந்தியர்களை ஒரே நேரத்தில் ஒரு இடத்திற்கு வரவழைத்து அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்து இந்தியாவில் இறங்கியவுடன், அந்தந்த மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் மாற்றி விட்டு அவர்கள் வீடு சேரும் வரை அவர்களை காத்து வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இப்படி இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களை எந்த மாநிலத்தவராக இருந்தாலும் வேறுபாடு பார்க்காமல் இந்திய அரசு மீட்டு வருவது இஸ்ரேலில் சிக்கி மீண்ட இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, மேலும் எதிர்க்கட்சிகள் இஸ்ரேல் விவகாரத்தில் இந்திய அரசு நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து பொறாமைப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர், மேலும் இஸ்ரேல் விவகாரத்தில் ஏதாவது அரசியல் செய்யலாம். என நினைத்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பிரதமர் மோடி 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் மூலம் வாய் அடைத்து விட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News