Kathir News
Begin typing your search above and press return to search.

அடித்தட்டு மக்களும் வளரணும்: பட்டியல் வகுப்பினருக்கான பிரதமரின் பாதுகாப்பு திட்டம்!

அடித்தட்டு மக்களும் வளரணும்: பட்டியல் வகுப்பினருக்கான பிரதமரின் பாதுகாப்பு திட்டம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2023 2:18 AM GMT

பிரதமரின் ஆதர்ஷ் கிராம திட்டம், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கான சிறப்பு மத்திய உதவி திட்டம், பாபு ஜெகஜீவன் ராம் தங்கும் விடுதி திட்டம் ஆகிய மத்திய அரசு நிதியுதவியுடன் இணைக்கப்பட்ட மூன்று திட்டங்களாகும்.

இவை பட்டியல் வகுப்பினருக்கான பிரதமரின் பாதுகாப்பு திட்டம் எனப்படுகிறது. ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் போதுமான உள்கட்டமைப்பு மற்றும் தேவையான சேவைகளை உறுதி செய்வதன் மூலம் வருமானத்தை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் சமூகப் பொருளாதார வளர்ச்சி குறியீடுகளை மேம்படுத்துவது இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

திட்டம் மூன்று கூறுகளை கொண்டுள்ளது:

1. ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களை "ஆதர்ஷ் கிராமமாக" மேம்படுத்தப்படும்

2. ஆதிதிராவிடர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு மாநில அளவிலான திட்டங்களுக்கு மானியம் வழங்குதல்

ஆதர்ஷ் கிராம திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் கிராமங்களில் உள்கட்டமைப்பை உருவாக்குதல்

விடுதிகள், உறைவிடப் பள்ளிகள் கட்டுதல், திறன் மேம்பாடு, தொடர்புடைய உள்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதாரத்திற்குத் தேவையான சொத்துக்களை வாங்குவதற்கு பயனாளிகள் பெறும் கடன்களுக்கான நிதி உதவி வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

3. மத்திய அரசின் தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் படி முன்னணி இடத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் விடுதிகள் கட்டுதல்.

கல்வி அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பள்ளிகளில் விடுதிகள் கட்டுதல் திட்டத்தின் இலக்காகும்.

ஆதிதிராவிடர் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதை மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலம், போதுமான உள்கட்டமைப்பு, சமூக-பொருளாதார மேம்பாட்டுத் தேவைகளுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கும் உணவு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு இருக்க வேண்டும், அனைத்து ஆதிதிராவிடக் குழந்தைகளும் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வி வரையாவது கல்வியை முடிக்க வேண்டும், தாய் சேய் இறப்புக்கு வழிவகுக்கும் அனைத்து காரணிகளும் சரி செய்யப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களிடையே, நீக்கப்பட வேண்டும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பு 2022-23 நிதியாண்டின் சாதனைகள்:-

ஆதர்ஷ் கிராம் கூறுகளின் கீழ், நடப்பு நிதியாண்டின் 2023-24 இல் மொத்தம் 1260 கிராமங்கள் ஆதர்ஷ் கிராமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 9 புதிய விடுதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 7 மாநிலங்களுக்கான முன்னோக்கு திட்டம் மானிய உதவி கூறுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News