Kathir News
Begin typing your search above and press return to search.

சரியாக சுண்டிவிட்ட ஆளுநர்! நடுங்கிப்போய் இரண்டே நாளில் திமுக செய்த காரியம்!

சரியாக சுண்டிவிட்ட ஆளுநர்! நடுங்கிப்போய் இரண்டே நாளில் திமுக செய்த காரியம்!

Mohan RajBy : Mohan Raj

  |  26 Oct 2023 3:25 AM GMT

ஆளுநர் பற்றவைத்த நெருப்பு...! இரண்டே நாளில் அலறியடித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு..!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியில் மருது சகோதரர் குருபூஜை விழாவில் ஆளுநர் கலந்து கொண்ட உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் 'சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாகவும், மருது சகோதரர், முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை கொண்டாடக்கூடாது என மாநில அரசு நினைப்பதாகவும்' விமர்சித்தார்.

மேலும் பேசும்போது, தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சாதி கட்சி தலைவர்களாக சித்தரிக்கப்படுவது மன வருத்தத்தை அளிப்பதாக கூறிய அவர் பள்ளி செல்லும் மாணவர்கள் கையில் சாதி கயிறு அணிந்து செல்வதாகவும் வேதனை தெரிவித்தார். இது மட்டுமல்லாமல் புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் ஆரியம் திராவிடம் என கிடையாது, பள்ளி படிப்பை பாதியில் விட்ட ராபர்ட் கார்டுவெல் தான் திராவிடம் என பிரித்து கூறியதாக தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் முத்துராமலிங்கத் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தேவர் குருபூஜை விழாவை கொண்டாடக்கூடாது என மாநில அரசு நினைப்பதாக முன் வைத்த கருத்து பல்வேறு விதங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிலையில் தற்போது திமுக அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தேவர் பூஜைக்கு முதல்வர் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள அந்த அறிவிப்பில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அன்று குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது, இதற்காக அக்டோபர் 29ஆம் தேதி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 29ஆம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்லும் முதல்வர் ஸ்டாலின் குரு பூஜையில் கலந்து கொள்கிறார்.

பின்னர் மதுரையில் இருந்து பிற்பகல் 2:45க்கு புறப்படும் விமான மூலம் சென்னை வந்தடைகிறார் என திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் முதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலகத்திலிருந்து காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நாளில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் அந்த குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் என குறிப்பிடத்தக்கது.

சரியாக தேவர் குருபூஜை விழாவை கொண்டாடக்கூடாது என மாநில அரசு நினைப்பதாக ஆளுநர் சொன்ன அடுத்த இரண்டு தினங்களில் குருபூஜைக்கு வருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது, ஆளுநர் கூறியதன் விளைவாகத்தான் இப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் தற்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல் ஆளுநர் விவசாயத்தை திமுக மிகவும் கவனமாக உற்று நோக்குகிறது எனவும் அதன் காரணமாகத்தான் இப்படி ஆளுநர் கூறியவுடன் அடுத்த இரண்டு தினங்களில் திமுக உடனடியாக களத்தில் இறங்கி விட்டது எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தேவர் குருபூஜையை கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழக முதல்வருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, வரும் 30-10-2022 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், தமிழக முதல்வரின் சார்பில், மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள்" என அறிவித்ததும் இந்த ஆண்டு 5 தினங்களுக்கு முன்னரே முதல்வர் குருபூஜைக்கு செல்வார் என கூறியதையும் வைத்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News