மீண்டும் வேலையை காட்டிய நயன்தாரா! மூக்குத்தி அம்மன் போல வெடிக்கும் 'அன்னபூரணி' பட சர்ச்சை!
By : Mohan Raj
75 ஆவது படத்தில் வேலையைக் காட்டிய நயன்தாரா...! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கப் போகும் சர்ச்சை..!
மிக சமீபத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் 75 ஆவது பட முதல் கண்ணோட்டம் வெளியானது, 'அன்னபூரணி' என தலைப்பிட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். தமன் இசையமைக்கும் இப்படம் நயன்தாராவின் 75வது படம் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் 'அன்னபூரணி' என பெயரிட்டு சப்டைட்டிலாக 'உணவு படைக்கும் தாய்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு கோவில் பின்னணியில் உள்ள ஒரு வீதி காண்பிக்கப்படுகிறது, அதில் ஒரு பிராமண குடும்பம் மிகவும் பயபக்தியுடன் பூஜை செய்கிறது. அதில் இருக்கும் வீட்டு பெரியவர் நெற்றியில் திருநாமத்துடன் அமர்ந்து தியானத்தில் இருக்க அந்த வீட்டு மூத்த பெண்மணி கையில் சந்தன மாலையுடன் ஜெபத்தில் இருக்கும்படி காட்சிகள் துவங்குகின்றனர்.
அந்த நாயகியின் தாய் பயபக்தியுடன் சாமிக்கு தீபாராதனை காண்பிக்க படத்தின் நாயகியான நயன்தாரா ஒரு பாடப்புத்தகம் படித்துக் கொண்டிருப்பது போல் அதுவும் மிகவும் கவனத்துடன் படித்துக் கொண்டிருப்பது போல் காண்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த புத்தகத்தின் உள்ளே சிக்கன் போன்ற கறி வகைகள் இருப்பதாகவும் அந்தப் பெண் அந்த தாய் அருகில் வரும்பொழுது 'படித்துக் கொண்டிருக்கிறாயா அன்னபூரணி' என கேட்கும் போது 'ஆமாம் அம்மா எக்ஸாம் எழுதவேண்டும்' என கூறிவிட்டு தான் பார்த்த சிக்கன் படத்தை தாய் பார்க்காமல் மறைப்பது போன்று காட்சி அமைந்துள்ளது படத்தின் முன்னோட்ட வீடியோ.
ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் சாமி படங்களுடன் மெஸ் ஒன்றை காண்பித்து உள்ளே போதைப் பொருள்கள் கடத்துவது போன்று காட்சி அமைப்பை வைத்ததற்கு அந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது, அதேபோல் இந்த படத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பும் என தற்போது சமூக வலைதளத்தில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஏன் நயன்தாரா இப்படி எல்லாம் செய்கிறார்? ஒரு நடுத்தர வயது பெண் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாராவிற்கு குறிப்பிட்ட சமயத்தை இப்படி இழிவாக சித்தரித்து அதாவது வீட்டில் பூஜை நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த வீட்டுப் பெண் சிக்கனை மறைத்து வைத்து பார்ப்பது போல் காண்பித்து ஏன் இப்படி செய்ய வேண்டும்? என இப்பொழுதே விமர்சனங்கள் இணையதளத்தில் வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன் படங்களில் நயன்தாரா சர்ச்சை கிளப்பியது போல் இந்த படத்திலும் சர்ச்சை மூலமாக விளம்பரம் தேட யோசிக்கிறாரா என்பது போன்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் சமீபத்தில் வெளியான இந்த அன்னபூரணி படத்தின் விளம்பரம் வரும் நாட்களில் பேசு பொருளாக மாறும் என்பது சந்தேகமே இல்லை.
கோலமாவு கோகிலா படத்தில் இப்படித்தான் இந்து சமய சுவாமி படங்களை வைத்துக்கொண்டு உள்ளே அந்த மெஸ்ஸில் போதை பொருள் கடத்துவது போன்ற காட்சி அமைப்பை வைத்திருப்பார்கள், அப்பொழுது படம் வெளியான சமயத்தில் நயன்தாரா மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது ஆனால் படம் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருப்பார், அப்பொழுது மூக்குத்தி அம்மன் படத்தில் இந்து சமய சாமியார்கள் வில்லனாக சித்தரிக்கப்படுவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கும், குறிப்பாக படம் வெளிவந்த புதிதில் பிற மதத்தில் இருக்கக்கூடிய மத குருமார்கள் குற்றம் செய்பவர்களளாக சித்தரிக்கப்படும் காட்சிகள் இருந்தன பின்னர் எதிர்ப்புகள் கிளம்பியதால் பிற மத குருமார்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் கத்தரித்து எடுத்தனர்.
அப்பொழுது படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது, ஆனால் மூக்குத்தி அம்மன் படம் வெற்றி அடைந்தது. தற்பொழுது இது போன்ற யுக்தியை தான் அன்னபூரணி படத்தை நடிப்பதற்கு முன் கையாளுகிறார் நயன்தாரா, இதுவும் விளம்பரம்தான் ஏற்கனவே நயன்தாரா தனியாக நாயகியாக நடித்த சில படங்கள் ஓடவில்லை என்பதற்காக மீண்டும் இதுபோன்று சர்ச்சையை சீண்டி படம் எடுக்க துவங்கிவிட்டார் என்பது போன்ற கருத்துக்கள் இணையத்தில் முன் வைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது..