Kathir News
Begin typing your search above and press return to search.

ஆளுநர் மீதான தாக்குதல் முதல் முறையல்ல... ராஜ்பவன் வெளியிட்ட பகீர் தகவல்! திமுக அரசை நெருங்கும் பூகம்பம்!

ஆளுநர் மீதான தாக்குதல் முதல் முறையல்ல... ராஜ்பவன் வெளியிட்ட பகீர் தகவல்! திமுக அரசை நெருங்கும் பூகம்பம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 Oct 2023 3:16 AM GMT

இது முதல் தடவை அல்ல... ஆளுநர் மாளிகை கொடுத்த அதிரடி பதிலடி...

தமிழக அரசியலில் தற்பொழுது ஆளுநர் மாளிகை தாக்கப்பட்ட விவகாரம் தான் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது, வரலாற்றில் இதுவரை தமிழக அரசியலில் இதுபோன்று நடந்ததில்லை அதுவும் அரசியல் சாசன தலைவரின் இடத்திலேயே இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டு இருப்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தேசிய அளவில் இது பேசு பொருளாக மாறி இருக்கிறது, இந்த நிலையில் தாக்குதல் நடந்தது குறித்து ஆளுநர் தரப்பிலிருந்து காவல் துறைக்கு புகார் ஒன்று பறந்துள்ளது. இந்த புகாரில் ஆளுநரின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் ஏ.டி.ஜி.பி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு அனுப்பி உள்ளார்.

அந்த புகாரில் குறிப்பிடப்பட்டபடி ஏற்கனவே இந்த போன்ற சம்பவம் நடந்துள்ளது ஆனால் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரில் 'தமிழ்நாடு அரசியல் சாசனத் தலைவர் மீது கடுமையான தாக்குதல் நேற்று மதியம் 2:45 மணிக்கு நடந்தது, ராஜபவன் மெயின் கேட்டில் நடந்த தாக்குதலில் நுழைவாயில் சேதம் அடைந்தது. ஆளுநருக்கு எதிராக தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுக்கூட்டங்களிலும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் செயல்படுகின்றனர்.

இந்த அச்சுறுத்தல்கள் ஆளுநரை மிகைப்படுத்தி அவரை கட்டுப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளன, ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை! இதே போல் ஒரு சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்துள்ளது. 2022ம் ஆண்டு ஏப்ரல் 18 தேதி அன்று ஒரு சம்பவம் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? ஆளுநர் தர்மபுரம் ஆதீனத்தில் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்றிருந்த பொழுது தடியடி மற்றும் கற்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டார். இதை தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழக அரசு, ஆளுநருக்கு வரும் கடுமையான அச்சுறுத்தல்களை காவல்துறை அலட்சியப்படுத்தியது.

இந்தியா தண்டனைச் சட்டம் ஐபிசி 124 கீழ் குறிப்பாக ஆளுநருக்கான அச்சுறுத்தல்கள் நோக்கமாகக் கொண்ட குற்றங்களை உள்ளடக்கிய இன்றைய தாக்குதல்களை நீங்கள் தீவிரமாக அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் நிழலில் ஆளுநர் பணியாற்ற முடியாது, எனவே இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு முறையான விசாரணையை உறுதி செய்து தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சதிகாரர்கள் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் தாக்குதல் நடந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து இதுபோன்ற ஒரு புகார் அதுவும் இது முதல் முறையல்ல ஏற்கனவே ஆளுநர் உயிருக்கு இதுபோன்று பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டு காவல்துறைக்கு புகார் சென்று இருப்பது இந்த விவகாரத்தை ஆளுநர் லேசில் விடப்போவதில்லை என தெரிகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ஆளுநரை திமுக அரசு விமர்சித்து வருவதும், ஆளுநர் மாளிகையை சுற்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவதும் ஆளுநர் மாளிகை மறக்கவில்லை என்ன தெரிகிறது. ஏற்கனவே ஆளுநருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என இந்த கடிதத்தின் மூலமாக குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை ஆளுநர் மாளிகை ஆணித்தரமாக கூறுகிறது என்பது இதிலிருந்து தெள்ளத்தெளிவாக தெரிவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. வரும் நாட்களில் ஆளுநர் இந்த விவகாரத்தை கண்டிப்பாக அப்படியே விட்டுச் செல்ல மாட்டார் எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News