Kathir News
Begin typing your search above and press return to search.

சிக்கி திக்கி திணறும் 'அறிவார்ந்த ஐடி விங்' - மீட்டிங் போட்டு மூன்றே நாளில் அறிவாலய நெட்டிசன்களுக்கு இறங்கிய இடி.....

சிக்கி திக்கி திணறும் அறிவார்ந்த ஐடி விங் - மீட்டிங் போட்டு மூன்றே நாளில் அறிவாலய நெட்டிசன்களுக்கு இறங்கிய இடி.....

Mohan RajBy : Mohan Raj

  |  28 Oct 2023 3:36 AM GMT

சிக்கி திக்கி திணறும் 'அறிவார்ந்த ஐடி விங்'.. ஆரம்பமே இப்படியா..?

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக ஐடி விங் நிர்வாகிகள் மற்றும் திமுக இணைய செயல்பாட்டாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டம் நடந்து முடிந்தவுடன் திமுக ஐடி விங் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது, அதில் நாங்கள் இந்த மீட்டிங்கை முடித்து விட்டோம்! இனி பாருங்கள் எப்படி எல்லாம் செயல்பட போகிறோம் என அந்த வீடியோவில் மீட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.

இது மட்டுமல்லாமல் இந்த கூட்டத்தை முடித்த பிறகு திமுக அதிகாரப்பூர்வ ஐ டி விங் பக்கத்திலிருந்து 'மீட்டிங் முடிச்சிட்டோம் இனி அடிமைகளையும், சங்கிகளையும் பொளக்குறோம்' என குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டு இருந்தனர்.

அப்பொழுது அந்த பதிவு பல விமர்சனங்களை ஏற்படுத்தியது, ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ ஐ டி விங் எப்படி நடந்து கொள்வது? என தெரியவில்லை 'அடிச்சு நவுத்த போறோம்', 'பொளக்குறோம்' இப்படியெல்லாம் சொல்றதுக்கு பேரு அறிவார்ந்த ஐடி விங்கா என பல விமர்சனத்தை முன்வைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜக அதிகாரப்பூர்வ பக்கத்தில் வேறு 'ஒரு கட்சியின் ஐடி விங் எப்படி இருக்கக் கூடாது? என்பதற்கு இதுவே உதாரணம் திமுகவின் 'பொளக்குறோம்' 'அடிச்சு நவுத்த போறோம்' என்றெல்லாம் பதிவிட்டிருக்கும் இந்த அறிவார்ந்த ஐடி விங் ஆண்டாண்டு காலமாக செய்து வரும் வேலைகள் என்னவென்று அறிவார்கள் எனக் கூறி சில வேலைகளை பட்டியலிட்டு இருந்தது.

அந்த வேலைகளில்

1) எதிர் கருத்து சொல்பவர்கள் முதலில் ஆபாசமாக பேசுவது பின்பு அவர்கள் மீது அவதூறு பரப்புவது,

2) மோடி 15 லட்சம் தருவேன்னு சொன்னார் என்பது முதல் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் உதயநிதிக்கு தெரியும் வரை என கழக பொய்களை ஓயாமல் பரப்புவது,

3) யார் என்ன செய்திருந்தாலும் அதன் மீது திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு கலைஞர் தான் காரணம் என சொல்லி கருப்பு, சிவப்பு ஹார்டின் போடுவது,

4) பெண்களை இழிவாகவும் கொச்சைப்படுத்தியும் பேசுவது, இந்து மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பது

5) எல்லாவற்றையும் விட முக்கியமான பணி விடிய விடிய விடிய வாரிசுகளுக்கு வக்காலத்து வாங்குவது

இப்படி இதையெல்லாம் செய்வதற்கு பெயர் ஐடி விங், ஒரு கேலிக்கூத்து நிகழ்ச்சியை போல் பல கோடி ரூபாய் செலவு செய்து ஐ டி விங் மீட்டிங் நடத்தி அதில் கடைசியில் 'அறிவார்ந்த அவர்கள் செய்து காட்டியதெல்லாம்' அங்கே பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணி எப்படி இருந்ததுதான் என நினைக்கும் பொழுது கொள்கை எதிரிகளான எங்களுக்கு பரிதாபமாக இருக்கிறது என திமுகவின் ஐ டி விங் மீட்டிங்கை குறி வைத்து பாஜக ஐ டி விங் அப்பொழுதே பதிலடி சிறப்பாக கொடுத்தது.

இந்த நிலையில் அடுத்தபடியாக ட்ரெண்டிங்கில் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு ஒரு ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்டானது அதில் முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக குறிப்பிட்டு அந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனதில் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். என்னடா இது மீட்டிங் போட்டு முழுசாக மூன்று தினங்கள் கூட ஆகவில்லை அதற்குள் தேசிய அளவில் முதல்வரை இப்படி அவதூறு செய்து அதுவும் தமிழில் இந்திய லெவல் ட்ரெண்டாக்குகிறார்கள் என அதிர்ந்தனர், இதற்குப் போட்டியாக அவர்களும் எதிர் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்ய அது இணையத்தில் முக்கி கொண்டிருந்தது.

ஆனால் முதல்வரை தரக்குறைவாக குறிப்பிட்டு ட்ரெண்ட் செய்த ஹேஷ்டேக்! இணையத்தில் மூன்று தினங்களாக முன்னணியில் இருந்தது. சும்மாவே திமுக என்றால் இணையத்தில் அடிப்பார்கள், இதில் வேறு அறிவார்ந்த ஐடி லிங்க் என கூறி இப்படி அடி வாங்க வைத்து விட்டீர்களே என சீனியர் உடன்பிறப்புகளே புலம்பும் அளவிற்கு அந்த ட்ரெண்டிங் இருந்தது தான் கூத்து.

இப்படி 'அறிவார்ந்த ஐடி விங் மீட்டிங் போட்டு மூன்றே நாளில் இப்படி அசிங்கப்பட்டு நிற்கிறதே' என பல விமர்சனங்கள் இணையத்தில் முன்வைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News