Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் வேலையை காட்டிய அறநிலையத்துறை! சத்தமில்லாமல் கப்சுப் என அடங்கிய சேகர்பாபு...

மீண்டும் வேலையை காட்டிய அறநிலையத்துறை! சத்தமில்லாமல் கப்சுப் என அடங்கிய சேகர்பாபு...

Mohan RajBy : Mohan Raj

  |  2 Nov 2023 7:25 AM GMT

அடுத்த வேலையை ஆரம்பித்த அறநிலையத்துறை...! பின்னணியில் யார்?

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததற்கு பிறகு இந்து சமயம் மற்றும் இந்து சமய அடையாளங்கள் மாற்றப்பட்டு வருவதாக வலதுசாரி அமைப்புகள் பல புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் திருவள்ளுவர் படத்தை பகிரும் பொழுது விபூதி இல்லாமல் இருப்பது அதனை தொடர்ந்து சமுதாய ரீதியிலான தலைவர்கள் படத்தை பகிரும் பொழுது நெற்றியில் விபூதி இல்லாமல் இருப்பது என பல்வேறு விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.

தேவரின் குருபூஜைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் அங்கு விபூதி அணியவில்லை என்பது வேறு சமூக வலைதளத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் அடிக்கடி அமைச்சர் சேகர்பாபு நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல எனக் கூறும் நிலையில் மற்றும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை மொபைல் செயலியில் எப்பொழுதும் கம்பீரமாக வீற்றிருக்கும் கோவில் கோபுரம் சின்னம் அகற்றப்பட்டுள்ளது எனக்கூறி தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசு சார்பில் தற்பொழுது ஒவ்வொரு துறைக்கும் பிரத்யோக செயலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

பொதுப்பணித்துறைக்கு ஒரு செயலி, அது மட்டுமல்லாமல் தமிழக அரசு ஆவணங்களை பெறுவதற்கு ஒரு செயலி, தமிழக அரசு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு செயலி என பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலை துறை சார்பில் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியில் தமிழ்நாடு அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் சின்னம் அகற்றப்பட்டது என சர்ச்சை எழுந்தது.

இந்த சர்ச்சை கிளம்பியதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் மொபைல் செயலியில் கோபுரம் சின்னம் மீண்டும் வைக்கப்பட்டது. ஆனால் கோபுரத்திற்கே அடையாளமாக விளங்கும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மொபைல் செயலியில் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் சின்னம் இடம்பெறவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து இந்து சமய அறநிலைத்துறை மீது பல்வேறு விமர்சனங்களும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரை நோக்கி பல கேள்விகளும் எழுந்துள்ளது.

இது குறித்து விமர்சித்துள்ள இந்து தமிழ் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார், இந்து சமய அறநிலைத்துறை மொபைலில் செயலியில் கோபுரச் சின்னத்துக்கு பதில் பிற மத வழிபாட்டு தல கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறும் பொழுது 'ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் சின்னத்தை தமிழக அரசு மெல்ல அழிக்கிறது என சந்தேகிக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலைத்துறை தமிழர் சமய அறநிலைத்துறையாக மாற்ற வேண்டும் என்றும் இந்து மத அடையாளங்கள் அழிப்பை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்து மத சமய அறநிலையத்துறை கோபுரம் சின்னத்தை அகற்றியதை உடனடியாக மாற்றி பழையபடி கோபுரம் அமைக்க வேண்டும் என கேட்டு கேட்டு கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் இதுபோன்ற பலரும் சமூக வலைதளத்தில் கோபுரம் அகற்றப்பட்டதற்கு தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்து சமய அறநிலைத்துறை என்பது இந்துக்களின் கோவிலை பாதுகாப்பதற்காகவும் பராமரிப்பதற்காகவும் உள்ள ஒரு துறையாகவும் அதன் செயலியிலேயே இந்து மத அடையாளங்கள் இடம்பெறாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வியையும் ஏன் இப்படி திடீரென நீக்கப்பட்டது? என்ற அதிர்ச்சியும் பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இருப்பிடம் இது குறித்து இதுவரை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? இந்த விவகாரத்தில் உடனடியாக பதில் கிடைக்குமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News