Kathir News
Begin typing your search above and press return to search.

இனி மொத்தமும் போகப்போகுதாமே? அலறியடித்து திருமாவளவன் செய்த காரியம்...

இனி மொத்தமும் போகப்போகுதாமே? அலறியடித்து திருமாவளவன் செய்த காரியம்...
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 Nov 2023 7:14 AM GMT

ஒரேடியா எல்லாம் போக போகுதாமே.. அலறி துடித்த திருமாவளவன்!

கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுப்பதற்காக தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் பாஜக உறுதியாக உள்ளது பிற கட்சிகளுடன் கலந்து பேசி ஒரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை நடத்தும் முயற்சியை உருவாக்க பாஜக முயற்சிக்கும். இது அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினத்தை குறைக்கும் ஆதலால் இந்த நடைமுறை எதார்த்த அடிப்படையில் தேர்தல் செலவின வரம்புகளை திருத்துவது குறித்து ஆராய்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு அடுத்து பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததில் இருந்து ஒரே நாடு ஒரே தேர்தலில் தனது கவனத்தை செலுத்த அதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பும் முன் வைக்கப்பட்டது. ஆனால் இது குறித்த சாத்தியக்கூறிகளை ஆராய்வதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்று அமைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சில தரப்புகளிடமிருந்து இந்த தேர்தல் நடைமுறைகளுக்கு வரவேற்கத்தக்க கருத்துகளும் சில தரப்புகளிடமிருந்து அதிலும் குறிப்பாக I.N.D.I.A கூட்டணி கட்சிகளிடமிருந்து ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எதிர்ப்புகளும் தற்போது வரை வலுப்பெற்று உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசிற்கு அதாவது தனது கூட்டணி கட்சியான திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதாவது நவம்பர் 1இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாள்: மத்திய - மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! எனவும், மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராததோடு மாநில நிர்வாகத்தையே முடக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் இப்போது தமிழ்நாடு அரசு அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளை அதிகாரமற்றவையாக ஆக்குவதன்மூலம் 'ஒரே நாடு ஒரே ஆட்சி' என ஆக்குவதற்கு ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம்-11இல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டதற்கு மாறாக அப்போதிருந்த இந்திய ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது எனவும் மத்திய - மாநில உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களின் புதிய பரிமாணங்களை அடையாளம் காணவும், மாநிலங்களின் அதிகாரங்களை மீட்டெடுக்கவுமான பரிந்துரைகளைச் செய்வதற்கு 1969 இல் இராஜமன்னார் குழு அமைக்கப்பட்டதுபோல் தற்போதும் குழு ஒன்றை அமைத்திட தமிழக அரசு முன்வரவேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளார் திருமாவளவன்...

இதன் பின்னணியை விசாரித்த பொழுது ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால் விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் தான் அடிவாங்கும் அந்த கட்சிகளின் வாக்கு சதவிகிதம் குறைந்தால் அக்கட்சிகளின் சின்னம் மற்றும் அங்கீகாரம் போன்றவை கேள்விக்குறியாகும் அதனால் அடுத்தடுத்த தேர்தல்களில் விசிக கூட்டணி வைப்பது, போட்டியிடுவது எல்லாம் சிக்கலாகும் என்பதை உணர்ந்து கொண்ட திருமாவளவன் இது போன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News