Kathir News
Begin typing your search above and press return to search.

ஒட்டுமொத்தமாக திமுகவை முடித்துக்காட்டப்போகும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு... மிஷன் ஸ்டார்ட்...

ஒட்டுமொத்தமாக திமுகவை முடித்துக்காட்டப்போகும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு... மிஷன் ஸ்டார்ட்...
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 Nov 2023 3:24 AM GMT

ஆர் எஸ் பாரதி இழுத்து வைத்த வினை... இறுதி அத்தியாயத்தை நெருங்கும் திமுக...

கருணாநிதி நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.பாரதி பேசியதுதான் தற்பொழுது திமுகவிற்கு பெரிய வினையாக வந்து முடிந்துவிட்டது. கருணாநிதி நூற்றாண்டு விழா ஒன்று சென்னையில் நடந்தது அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி நாகாலாந்து மக்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவியையும் தரக்குறைவாக பேசினார்.

நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள், அவர்களே ஆளுநர் ஆர்.என்.ரவியை விரட்டி விட்டார்கள். நாய்க்கறி உண்பவர்களுக்கே இவ்வளவு இருந்தால் உப்பு போட்டு சாப்பிடும் நமக்கு எவ்வளவு இருக்கும் என மிகவும் கீழ்த்தரமாக பேசினார்.

ஆர்.எஸ் பாரதியின் இந்த பேச்சு பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களுக்கு எழுந்தது, இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த வீடியோவை ஆங்கிலத்தில் சப்டைட்டில் போட்டு தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்டார், இந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது.

ஆர்.எஸ்.பாரதி திமுகவில் இருக்கக்கூடிய அமைப்புச் செயலாளர் நாகலாந்து மக்களை இப்படி தரக்குறைவாக பேசிவிட்டார் என்பது நாடு முழுவதும் செய்தியானது. நாகலாந்து மக்கள் நாய்கறி உண்பவர்கள் என ஒரு கட்சியை சேர்ந்த அமைப்பு செயலாளர் பேசுகிறார், அதுவும் அரசியலமைப்பு சாசனத்தின் தலைவராக இருக்கும் ஆளுநரை குறிப்பிட்டு பேசுகிறார் என இதற்கு எதிர்வினைகள் வர ஆரம்பித்தது.

இந்த விவகாரம் அண்ணாமலை வீடியோ வெளியிட்ட அன்று மாலையே தெரிய துவங்கியது. மேலும் இதுகுறித்து நாகாலாந்தில் இருந்தே எதிர்வினைகள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தன.

இது குறித்து நாகாலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் ஆர்.எஸ்.பாரதியின் இந்த வீடியோவை பதிவிட்டு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது 'பெயரிலேயே பாரதத்தை வைத்துக்கொண்டு அகில பாரதமும் பெருமைப்படும் நாகாலாந்து மக்களை காயப்படுத்தி உள்ளது முரண்பாடான செயல் நமது வாழ்க்கை முறையை பற்றி பாடம் எடுக்க அனைத்து வடகிழக்கு மக்களும் ஒன்றிணைய வேண்டும்' என திமுகவிற்கு எதிரான தனது முதல் பதிவை சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாகலாந்தின் எம்.பியம், பா.ஜ.க நாகலாந்து துணை தலைவருமான ஃபாங்னான் கொன்யாக் இதே வீடியோவை பகிர்ந்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இப்படி ஆர் எஸ் பாரதி பேசியது திமுகவிற்கு தற்பொழுது விவகாரமாக முடிந்து விட்டது, ஐந்து மாநில தேர்தல் வரும் நேரத்தில் I.N.D.I கூட்டணியில் இருக்கும் திமுக இப்படி பேசுவது வட மாநிலங்களில் காங்கிரசுக்கு வினையாக முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே சனாதன விவகாரம் ஒருபுறம் திமுக மற்றும் அது சார்ந்திருக்கும் I.N.D.Iகூட்டணிக்கு பிரச்சினையாக வெடித்திருக்கும் நிலையில் தற்பொழுது ஆர்.எஸ்.பாரதி வேறு நாகலாந்து மக்களை இப்படி அவதூறாக பேசியது மேலும் சிக்கலை தான் ஏற்படுத்துமே தவிர திமுகவிற்கு எந்தவித பயணம் ஏற்படப் போவதில்லை என விமர்சனங்கள் கூறப்படுகின்றன.

திமுக ஆளும் கட்சியாக இருந்து கொண்டு அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பல அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News