Kathir News
Begin typing your search above and press return to search.

முட்டையை தூக்கிய உதயநிதிக்கு ஒரே வாரத்தில் ஏற்பட்ட வினை... 'இனி முட்டையே வேனாம்டா' அலறிய உதைண்ணா!

முட்டையை தூக்கிய உதயநிதிக்கு ஒரே வாரத்தில் ஏற்பட்ட வினை...   இனி முட்டையே வேனாம்டா அலறிய உதைண்ணா!
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 Nov 2023 3:21 AM GMT

முட்டையே இனி வேணாம் சாமி அலறிய உதயநிதி பின்னணி என்னன்னு தெரியுமா?

தமிழகத்தில் மருத்துவம் படிப்பதற்கு தேர்ச்சி பெற வேண்டிய நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் சில நடவடிக்கைகளில் அவ்வப்போது ஈடுபட்டு கொண்டு வருகிறது இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 21 மாதங்களாக நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அவரது மேசையில் காத்திருக்கிறது. தற்கொலைகளை தடுப்பதற்காகவே இந்த இயக்கம் மேலும் தரமான மருத்துவர்கள் நீட் தேர்வு மூலம் கிடைப்பார்கள் என்கிறார்கள் பணம் வாங்கிக்கொண்டு மெடிக்கல் காலேஜில் சீட்டு கொடுக்க மாட்டோம் என்றும் கூறுகிறார்கள் ஆனால் தற்பொழுது பிஜி நீட் தேர்வில் எத்தனை பர்சன்டேஜ் எடுக்க வேண்டும் என்று தெரியுமா? என்ற கேள்வியை எழுப்பியபடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முட்டையை எடுத்து காண்பித்தார்! இது பெரிய ஏமாற்றுத்தனம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற சூழலில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகப் பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. அதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எளிதில் விடவில்லை. அவர் தனது ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த புதன்கிழமை முதல் அடுத்தடுத்த நாட்களில், மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக மாணவ மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

சுமார் 2,000 முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அமைச்சர் திருமதி கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தாலும், தவறு செய்தவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. குறைந்தபட்சம், முட்டை வழங்கும் நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கிட, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த போஷான் அபியான் திட்டம் மூலம், கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ₹2,907 கோடி ரூபாய். சராசரியாக வருடத்திற்கு ஐம்பது லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள்.

ஆனால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்தாலும், அதைக் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் இருந்து வருகிறது ஊழல் திமுக அரசு. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எத்தனை முறை மதிய உணவில் அழுகிய முட்டைகளைக் கொடுத்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டது. உடனடியாக, மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கி அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக பாஜக சார்பில் சார்பாக வலியுறுத்துகிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் வலதுசாரி அமைப்புகள் குறிப்பாக பாஜகவினர் பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியதை வைத்து விமர்சனங்களை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இதனால் இந்த முட்டை விவகாரமே வேண்டாம் என உதயநிதி முடிவெடுத்திருப்பதாக சில தகவல்கள் கசிகிறது. இனி உதயநிதி முட்டையை தூக்க மாட்டார் எனவும் வேறு சில விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News