Kathir News
Begin typing your search above and press return to search.

அருணாச்சலேஸ்வர கோவில் ராஜகோபுரம் இனி கம்பீரமாக காட்சிதரும் - கடமையை செய்த சட்டம், சிக்கிய அறநிலையத்துறை...

அருணாச்சலேஸ்வர கோவில் ராஜகோபுரம் இனி கம்பீரமாக காட்சிதரும் - கடமையை செய்த சட்டம், சிக்கிய அறநிலையத்துறை...

Mohan RajBy : Mohan Raj

  |  11 Nov 2023 3:16 AM GMT

இந்து சமய அறநிலை துறைக்கு விழுந்த அடி... திருவண்ணாமலை ராஜகோபுரம் வழக்கில் நீதிமன்றம் கொடுத்த அதிரடி....

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட திட்டமிட்டு பொதுப்பணி துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டடத்தை வாடகைதாரர்கள் ஆக்கிரமித்து இருந்ததால் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட இடத்தில் கூடுதலான வசதிகளுடன் வணிக வளாகம் கட்டப்படும் என அறநிலையத்துறை அறிவித்து அதற்கான பணிகளை துவங்கி அஸ்திவாரத்தையும் போட்டது.

ஆனால் ராஜ கோபுரம் அதுவும் உலகப் புகழ்பெற்ற அக்னி ஸ்தலம் ஆகிய திருவண்ணாமலை ராஜகோபுரம் மறைக்கப்படும், இதனால் கட்டிடப் பணிகள் நடக்கும் பொழுது ஏற்படும் அதிர்வுகளால் அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் சேதம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது எனவே கோவிலின் பாதுகாப்புக்கு கருதியும் கோவில் பார்வையாக ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கூறி மக்கள் குரல்கள் எழுந்தது.

அது மட்டும் அல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த விவகாரத்தில் யாரும் உடன்பாடாக இல்லை எனவும் தகவல்கள் கிடைத்தது, இதனை எடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் பாதுகாப்பு கருதியும், பக்தர்களுக்காக வேண்டியும் அறநிலையத்துறை செய்து வந்த ஏற்பாடில் நடந்து வந்த அந்த கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

கோவில்கள் மற்றும் புராதான சின்னங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில் நீதிபதி ஆர் மகாதேவன் மற்றும் நீதிபதி பீடி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் டி..ரமேஷ், வழக்கறிஞர் ஜகன்நாத், ரங்கராஜன், நரசிம்மன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக அவசர முறையீடு செய்தனர்.

அப்பொழுது அறநிலையத்துறை சார்பில் அறநிலையத்துறை தரப்பில் ராஜ கோபுரம் எதிரில் ஏறத்தாழ 6 கோடி ரூபாய் செலவில் வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் 150 கடைகளை கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக இதனால் கோவிலுக்கு ஏதும் பாதிக்கப்படாது என வாதிடப்பட்டது.

ஆனால் இதனை நீதிபதிகளை அதிரடியாக ஏற்க மறுத்தனர், கோபுரத்தை மறைக்கும் வகையில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்கு உடனடியாக தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர். இந்த தடை உத்தரவு பிறப்பித்த அதே நேரமான இரண்டு மணி 40 நிமிடத்திலிருந்து எந்த விதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது எனவும் நீதிமன்றம் அதிரடியாக கூறியது, இதனால் பக்தர்கள் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகப்புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் இப்படி அறநிலையத்துறையின் அலட்சியத்தால் கோபுரம் மறைக்கப்படுவதோ, சேதம் அடைவதோ இருக்க கூடாது என எதிர்பார்த்து வந்த பக்தர்களுக்கு இந்த நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்து சமய அறநிலைத்துறை இந்த திருவண்ணாமலை கோவில் விவகாரத்தில் அலட்சியமாக இருந்தது, அதன் விளைவு தான் இந்த கட்டிடப் பணிகள் எனவும் ஒரு சில வலதுசாரிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். கோவிலின் பாதுகாப்பை இந்து சமய அறநிலைத்துறை கருதவில்லை, கோவிலை பாதுகாக்கத் தான் இந்து சமய அறநிலைத்துறை உள்ளதே தவிர சொத்துக்களை வைத்து வருமானம் பெருக்குவதற்காக அல்ல எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News