வேர்ல்ட் கப் இந்தியா வெற்றி அனைத்தும் செட்டப்பா? எல்லாம் ஜெய்ஷா வேலையா?
By : Mohan Raj
வேர்ல்ட் கப்பில் முறைகேடுகள் நடக்கிறதா? ஜெய்ஷா தலையீடு இருக்கிறதா?
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சென்னை, பெங்களூர், குஜராத், மும்பை போன்ற இடங்களில் எல்லாம் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஒரு கிரிக்கெட்டின் ஜாம்பவான் நாடுகளும், நெதர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளும் கூட இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கெடுத்து வருகின்றன.
இந்த போட்டியில் இந்தியா முழுவதும் நடத்தப்படுவதால் இந்த போட்டி தற்பொழுது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது, அதுவும் குறிப்பாக தற்பொழுது BCCI தலைவராக இருக்கும் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இருக்கின்ற காரணத்தினால் இந்த உலகக்கோப்பை போட்டி எதிர்க்கட்சி தரப்பினரிடையே குறிப்பாக இடதுசாரிகள் மத்தியில் பலவாறு விமர்சிக்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த லீக் ஆட்டங்களில் ஒன்பது போட்டிகளில் ஒரு போட்டிகளில் கூட இந்திய அணி தோற்காமல் அதுவும் அபார வெற்றி அடைந்துள்ளது, தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இந்தியா தான் ஒன்பது ஆட்டங்களிலும் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்திய அபாரமாக வென்றது, அதற்கடுத்த ஆப்கானிஸ்தான், அதனை தொடர்ந்து பாகிஸ்தான், கடைசியாக வங்கதேசம் என தொடர்ச்சியாக நான்கு போட்டிகளை இந்தியா வென்றது. அதன் பிறகு நியூசிலாந்து, இங்கிலாந்து எதிராக நடந்த போட்டியிலும் இந்திய அபார வெற்றி பெற்றது.
இதன்பின் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இப்படி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வரிசையாக களம் கண்ட இந்திய அணி தீபாவளி அன்று நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு அதிலும் இறுதியாக வென்று தற்பொழுது செமி பைனல் சென்றுள்ளது.
செமி பைனலில் நியூசிலாந்து அணியை 2019 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா எதிர்கொள்ள தயாராக உள்ளது. இப்படி இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெறுவது, அதிலும் முதல் பேட்டிங் எடுத்தால் அதிக ரன்கள் அடித்து இரண்டாவது பேட் செய்யும் அணியை சொற்ப ரண்களுக்கு ஆட்டம் இழக்க செய்து அபார வெற்றி அடைவது, அது மட்டுமல்லாமல் முதலில் பவுலிங் தேர்வு செய்தால் எதிர் அணியை குறைந்தபட்ச ரண்களில் சுருட்டி விட்டு இரண்டாவதாக சேஸ் செய்து அதனை குறைந்த விக்கெட் வித்தியாசத்திலேயே அடித்து வெற்றி பெறுவது என்ற அபார வெற்றி இந்திய அணி பெறுவது குறித்து பலரும் குறிப்பாக இடதுசாரிகள் விமர்சித்து வருகின்றனர்.
எல்லாம் சரியாக இருக்கிறது! இந்தியா இப்படியெல்லாம் அபார வெற்றி பெறுகிறது! இதற்கெல்லாம் பின்னணி என்ன? பிரதமர் மோடி ஆட்சி நடக்கிறது, இந்த நிலையில் உலக கோப்பையை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடக்கும்போது இந்திய அணி வாங்க வேண்டும் என்பதற்காகவா? அனைத்து நாட்டு கிரிக்கெட் அணியினர் கூட சமரசம் செய்து விட்டார்களா? எந்த ஒரு போட்டியிலும் இந்தியா தடுமாறாமல் தோல்வியை தழுவாமல் சிறப்பாக விளையாடுகிறது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? ஒருவேளை இந்திய அணியை வைத்து வரும் தேர்தலில் அதுவும் ஒரு பிரச்சார யுக்தியாக கையாள பாஜக முடிவு செய்துவிட்டதா? அப்ப எல்லாம் அமைச்சர் மகன் ஜெய்ஷாவின் வேலையா? என்றெல்லாம் பல விமர்சனங்கள் இணையத்தில் கொடி கட்டி பறக்கிறது.
ஆனால் இது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வல்லுனர்கள் பல விஷயங்களை முன் வைக்கின்றனர், குறிப்பாக இந்தியா ஜெயிப்பதற்கு
5 முக்கிய காரணங்களை முன்வைக்கின்றனர்.
முதல் காரணமாக பேட்டிங் ஆர்டர்.. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நல்ல பார்மில் உள்ளார்கள், அவர்கள் உள்ளே இறங்கிவிட்டால் அதிகம் ரன் எடுக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள், இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங்கில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது, அடுத்தபடியாக மிடில் ஆடர் தற்பொழுது மிகவும் வலுவாக உள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார் யாதவ் இருவரும் நல்ல பார்மில் உள்ளார்கள். இது மட்டுமல்லாமல் கே.எல் ராகுல் நல்ல பார்மில் உள்ளார், அதுமட்டுமின்றி ஜடேஜாவின் பேட்டிங் மிடில் ஆர்டர் நல்ல ஃபார்மில் உள்ளது. இப்படி துவக்க ஆட்டக்காரர்கள் மட்டுமல்லாமல் மிடில் ஆடர் ஆட்டக்காரர்களும் நல்ல வலுவாக ஆடுவதால் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது என கூறுகின்றனர்.
மேலும் பவுலிங் ஷமி, குல்தீப், ஜடேஜா, பும்ரா இவர்கள் எல்லாம் பவுலிங் தற்பொழுது உச்சகட்ட நிலையில் பார்மில் உள்ளார்கள். அதிலும் பும்ரா குறைந்தபட்சம் இரண்டு விக்கெட் எடுத்து விடுகிறார், அவர் 10 ஓவர் வீசினால் கொடுக்கும் ரன்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதனால் எதிரணிக்கு பிரஷர் அதிகமாகிறது, முன்னணி வீரர்களே பும்ராவின் பந்துவீச்சில் கவனத்தை சிதற விடுகின்றனர்.
இது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை கொடுக்கிறது எனவும் கூறுகிறார்கள், இப்படி இந்திய அணி பேட்டிங் துவக்கம் மற்றும் மிடில் ஆர்டர் வலுவாக இருப்பதும், நான்கு பந்துவீச்சாளர்கள் மிகவும் வலுவாக இருப்பதும் தான் இந்திய அணி வெற்றிக்கு காரணம்! இதன் காரணமாகத்தான் உலககோப்பை லீக் அனைத்து மேட்சுகளிலும் இந்தியா வெற்றி பெறுகிறது எனவும் அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அதிகம் ஆடிய அனுபவம் வேறு இந்திய அணி வீரர்களுக்கு அதிகம் கை கொடுக்கிறது இவைதான் இந்திய அணி முன்னணியில் இருப்பதற்கு காரணமே தவிர இவையெல்லாம் செட்டப் என சொல்வது கிடையவே கிடையாது என்கின்றனர்.
ஆனாலும் விமர்சனம் செய்து பழக்கப்பட்ட இடதுசாரிகள் விமர்சனத்தை வைக்கத்தான் செய்கின்றனர்.