உலகக்கோப்பை தோல்வியை வைத்து அரசியல் செய்த இடதுசாரிகளை ஒரே வீடியோவில் அடக்கிய ஷமி....
By : Mohan Raj
இடதுசாரிகள் வாயை அடைத்த ஷமி...
கடந்த வாரம் உலகக் கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது, இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்களாலும், வெளியில் பல கோடி ரசிகர்களும் பார்க்கப்பட்டது.
எப்படியும் இந்தியா இந்த முறை கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது, ஆஸ்திரேலியா அணியிடம் ஆரம்பத்தில் ரன்களை எடுத்த இந்திய அணி பிறகு போகப்போக விக்கெட்டுகளை பறிகொடுத்தது பின்னர் தோல்வியை தழுவிய காரணத்தினால் 130 கோடி ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் இறுதிப்போட்டி என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அதனை காண்பதற்காக ஸ்டேடியம் வந்திருந்தார், இறுதிப்போட்டி கோப்பையை வெல்லும் தருணங்களை பிரதமர் மோடி அங்கிருந்து கண்டு ரசித்தார். பின்னர் இறுதிப்போட்டியில் தோற்ற இந்திய அணி வீரர்கள் சோகத்துடன் டிரெஸ்ஸிங் ரூம் திரும்ப அங்கு சென்ற பிரதமர் மோடி அவர்களை அரவணைத்து கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் கூறி பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானவுடன் இதனை வைத்து இடதுசாரிகள் தரப்பில் குறிப்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியும்! பிரதமர் சென்ற காரணத்தினால்தான் இப்படி தோல்வியை தழுவி விட்டது என்றும்! பிரதமர் மோடி சென்று வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டதாகவும்! வீரர்கள் ஏற்கனவே சோகத்தில் இருக்கிறார்கள் அவர்களைச் சென்று ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் மேலும் கடுப்பாக்கி விட்டார் பிரதமர் மோடி! என்றும் பல கமெண்டுகளை முன்னணியில் வைத்தனர் இடதுசாரிகள்...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூட 'பிரதமர் மோடி சில நேரங்களில் ஒரு கிரிக்கெட் போட்டியை காண செல்கிறார், அந்தப் போட்டியில் தோல்வி கிடைத்தது என்பது வேறு விஷயம் பிரதமர் மோடி ஒரு துரதிஷ்டம்' என விமர்சனத்தை முன் வைத்தார். இப்படி பிரதமர் மோடியையும் உலகக்கோப்பை தோல்வியையும் சேர்த்து வைத்து இடதுசாரிகள் பேசி வந்த நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரே வார்த்தைகள் முகமது ஷமி கொடுத்த பதிலடிதான் தற்பொழுது இணையத்தில் வைரலாக உலா வருகிறது.
ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்காத வீரர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர் முகமது ஷமி தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேசம் திரும்பி உள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் அங்கோரா சென்றடைந்த அவரிடம் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைய காரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த முகமது ஷமி 'நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காத காரணம் நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்தால் ஆஸ்திரேலிய அணியை அந்த ரன்னுக்குள் எளிதாக கட்டுப்படுத்திருப்போம்' என்றார்.
மேலும் பிரதமர் மோடி குறித்து முகமது ஷமி பேசும்பொழுது 'தோல்வியை சந்தித்திருக்கும் போது பிரதமர் எங்களை ஊக்கப்படுத்தியது அது மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ள ஒருவர் நம்மோடு நின்று நம்மளை புரிந்து கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, நமது மன உறுதி குறையும்போது பிரதமர் ஒருவர் நம்மோடு இருந்தது பேசி நம்பிக்கை கொடுத்தது எங்கள் மன உறுதியை மீட்டெடுத்துள்ளது' எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை அண்ணாமலை தமிழில் மொழி பெயர்த்து சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், பிரதமர் மோடியை குறித்து அவதூறு பேசி வந்த இடதுசாரிகளுக்கு இது பலத்த அடியாக அமைந்து விட்டது என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.