புதை மணலில் அறிவாலயம்! திஹாருக்கு அடுத்த தல ரெடியா...?
By : Mohan Raj
திஹாருக்கு அறிவாலயத்தில் இருந்து அடுத்த ஆள் தயாரா..? வெளியான மணல் கொள்ளை பற்றிய பகீர் ரிப்போர்ட்...
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததற்கு பிறகு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்படுவதாகவும், சட்டவிரோதமாக மணல் வியாபாரம் செய்யப்படுவதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கியதில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக அமலாக்கத்துறை தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐஐடி பேராசிரியர்கள் உதவியுடன், செயற்கைக்கோள் படத்தின் உதவியுடன் ஆய்வு நடத்தியதில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டு இருக்கின்றன என ஒரு குழு அமைத்து ஆராயப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அவர்களை கடந்த நவம்பர் 20ஆம் தேதி மணல் முறைகேடு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மொத்த ரெய்டு மற்றும் அமலாக்கத்துறை சேகரிக்கும் விபரங்கள் அனைத்தும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை குறி வைத்துதான் செல்கிறது என பல அரசியல் விமர்சனங்கள் எழுந்த நிலையில் செயற்கைக்கோள் உதவியுடன் ஐஐடி குழு ஆராய்ந்து எவ்வளவு கோடி ரூபாய் மணல் அள்ளப்பட்டுள்ளது என அறிக்கை வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட Rs.4730 கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் எடுக்கப்பட்டுள்ளது என அறிக்கை வெளியாகி உள்ளது, ஆனால் அரசு கணக்குப்படி 36.45 கோடி தான் கணக்கு காட்டப்பட்டுள்ளது என இஸ்ரோ உதவியுடன் துல்லியமாக கணக்கிட்டு அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த தகவலை பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில செயலாளர் SG.சூர்யா தனது எக்ஸ் பதிவில், 'அட திமுக பகல் கொள்ளை பாவிகளா! திமுக அரசில் Rs.4730 கோடி ரூபாய் மணல் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அரசு கணக்குப்படி Rs.36.45 கோடி தான் காட்டியுள்ளீர்கள். திருட்டு திமுகவிற்கு இனி திகார் காலம் தான். வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
மணல் விவகாரம் அனைத்தும் திமுக அரசின் கழுத்தை நெரிக்கப் போகிறது, எப்படி டெல்லியில் மதுபான ஊழல் ஆம் ஆத்மி ஆட்சியை ஒரு வழி செய்தது அதுபோல் மணல் விவகாரம் நிச்சயம் திமுகவிற்கு தலைவலியாக இருக்கப்போகிறது என பல அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட Rs.4730 கோடி திமுக அரசு மணல் விவகாரத்தில் மட்டுமே ஊழல் செய்துள்ள தகவல் இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி உள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் இருந்தோ அல்லது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தரப்பில் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா அளித்த முக்கிய ஆவணங்களின்படி ஒப்பந்தக்காரர்கள் ராமச்சந்திரம், ரத்தினம் ஆகியோரை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாத காலமே இருக்கும் நிலையில் மணல் விவகாரத்தில் இப்படி திமுக அரசு வசமாக சிக்கி இருப்பது கண்டிப்பாக திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் ஏற்கனவே செந்தில்பாலாஜி விவகாரத்தில் திமுக திணறும் நிலையில் மணல் அரக்கன் வேறு திமுகவை விழுங்க காத்திருக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது....