Kathir News
Begin typing your search above and press return to search.

துவாரகா வீடியோ உண்மையா... பின்னணி உள்ள வேலை என்ன?

துவாரகா வீடியோ உண்மையா... பின்னணி உள்ள வேலை என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 Nov 2023 2:49 PM GMT

திடீரென வெளியான துவாரகா வீடியோ... என்னதான் உண்மை?

இலங்கையில் 90களின் துவக்கத்தில் விடுதலை புலிகள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வந்த 2007 ஆம் ஆண்டு முற்றிலுமாக இயக்கத்தை நிறுத்தும் அளவிற்கு பல்வேறு வரலாற்று சம்பவங்கள் நடைபெற்றன, இந்தியாவில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் தமிழகத்தில் திமுக ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது.

இன்னமும் விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுதான் காரணம், அப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த இந்த இரு கட்சிகளும் இணைந்து இலங்கை அரசுக்கு செய்த உதவியின் காரணமாகத்தான் விடுதலை புலிகள் அழித்தெடுக்கப்பட்டார்கள், மத்தியில் சோனியா காந்தியும் தமிழகத்தில் கருணாநிதியும் தான் இந்த இன அழிப்புக்கு காரணம் என இன்று வரை ஈழ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இவ்வளவு ஏன் இன்று ஈழத்தை வைத்து அரசியல் கட்சி ஆரம்பித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட 'என் இனத் துரோகி காங்கிரஸ்' என்றுதான் ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார். அந்த அளவிற்கு ஈழத்தில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தியதற்கு பின்னணியில் காங்கிரஸ் தான் இருக்கிறது என இன்றளவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் கூறினார். விரைவில் வெளி வருவார், எனக்கு பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் மட்டும் வந்தது என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபாகரன் மகள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவீரர் நாளில் மறைந்த விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகள் உரையாற்ற உள்ளார் என சமூக வலைதளங்களில் திடீர் திடீரென அறிவிப்பு வெளியானது.

உடனே சமூக வலைதளம் பற்றிக் கொண்டது, சில நாட்கள் முன்பு தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றார்கள். தற்பொழுது பிரபாகரன் மகள் துவாரகா பேசுகிறார் என்றவுடன் இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது பிரபாகரன் மகள் என கூறிக்கொண்டு பேசிய பெண் ஒருவரது வீடியோ ஒளிபரப்பப்பட்டது, அந்த பெண் தன்னை பிரபாகரன் மகள் துவாரகா என அறிமுகம் செய்து கொண்டு பத்து நிமிடங்கள் வரை உரையாற்றினார். அவர் பேசுகையில் அரசியல் வழியில் தமிழ் நிலத்திற்காக தொடர்ந்து பயணிப்போம் சிங்களத்திற்கு ஒருபோதும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல நாங்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம், பல ஆபத்துகளை தாண்டி நான் உங்கள் முன் தோன்றியிருக்கிறேன். தமிழ் ஈழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிங்கள அரசு தனித்து நின்று போர் புரிய திராணியற்றது, தற்பொழுது சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, பண்பாட்டு சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்றார்கள், ஆனால் அது கிடைக்கவில்லை ஐநாவும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை பாதைகள் மாறினாலும் நமது லட்சியம் மாறாது' என அவர் பேசி இருந்தார்.

இந்த நிலையில் பேசியது பிரபாகரன் மகளா என சந்தேகம் எழுந்துள்ளது, இது குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் பிரபாகரன் மகள் சிறுவயது புகைப்படத்தையும் தற்போது புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த பெண் அவர் கிடையாது எனக்கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா இரு படங்களையும் ஒப்பிட்டு தனது எக்ஸ் பதிவில் ஒரு பதிவிட்டுள்ளார், அதில் ஒருவேளை தலைவர் மேதகுவின் மகள் தான் இவர் எனில் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. ஆனால் முகங்களின் ஒவ்வொரு பகுதியையும் கூர்ந்து ஆய்வு செய்யும் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக, ஓவியராக சொல்கிறேன் 200 சதவீதம் இரண்டு முகமும் ஒன்றல்ல' எனக் கூறியுள்ளார்.

இப்படி கார்டூன் பாலா கூறியதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது, இருப்பினும் பிரபாகரன் மரணம் குறித்த மர்மங்களும், அவர்கள் உயிருடன் உள்ளார் என்ற வதந்திகளும் இன்று வரை ஓயாமல் இருப்பது இணையத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News