அரசு மரியாதை...! ராஜ உபச்சாரம்....! - அரபு நாட்டில் கெத்துக்காட்டும் மோடி! அடிவயிறு எரியும் இடதுசாரிகள்...
By : Mohan Raj
கோலாகலமாக வரவேற்ற அரபு நாடுகள், வயிற்றிச்சலில் இடதுசாரிகள்.....
பிரதமர் மோடி தற்பொழுது துபாய் சென்று அங்கு அவருக்கு கோலாகல வரவேற்பு அளித்ததுதான் இடதுசாரிகள் பலரையும் தூக்கம் இல்லாமல் தவிக்க வைத்து வருகிறது. துபாயில் இன்று நடைபெறவிருக்கும் COP 28 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டு துபாய் சென்றடைந்தார், அப்பொழுது துபாய் விமான நிலையத்தில் அந்த நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பிரதமர் மோடியை கோலாகலமாக வரவேற்றனர்.
அது மட்டும் அல்லாமல் அந்த நாட்டின் அரசு முறை வரவேற்பும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது, மேலும் அங்கிருந்தபடியே துபாயில் உள்ள பிரபல தனியார் உணவகத்திற்குச் சென்றார் பிரதமர் மோடி. அப்போது செல்லும் வழிகள் எல்லாம் இந்தியாவில் இருந்து துபாயில் தற்பொழுது புலம்பெயர்ந்த இந்திய பிரஜைகள் அனைவரும் பிரதமர் மோடியை திரண்டு நின்று வழிநெடுக நின்று வரவேற்றனர்.
இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அவர்கள் மோடி மோடி என்ற கோஷமும், பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்தையும் முழக்கமிட்டு பிரதமர் மோடியை பார்த்ததும் ஆரவாரமாக கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து ஹோட்டலுக்கு சென்று இருந்த மோடிக்கு அங்கு வெளியே புலம்பெயர்ந்த இந்தியர்களின் கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று நடைபெறவிருக்கும் COP 28 சர்வதேச காலநிலை மாற்ற மாநாட்டில் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர், இதில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாட்டின் பிரதமரும் பங்கேற்கின்றனர். இதில் இங்கிலாந்தில் இருந்து ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் தொழில் நிறுவன பிரதிநிதிகள், மாணவப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் இன்று கலந்து கொள்ளவிருக்கிறார், இந்த மாநாட்டில் தற்பொழுது புவி அடைந்துவரும் வரும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டும் உலக நாடுகளின் கூட்டு முயற்சியும் பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த மாநாடு மட்டுமின்றி இரண்டு உயர் மட்ட கருத்து அரங்கிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார், இந்த வீடியோ காட்சிகள் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிறது. குறிப்பாக பிரதமர் மோடி அரபு நாடான துபாய் சென்றடைந்த உடன் அங்கு பிரதமர் மோடிக்கு அழைக்கப்பட்ட வரவேற்பும், அங்கு கூடியிருந்தவர்கள் பிரதமர் மோடிக்கு அளித்த உற்சாக வரவேற்பையும் வீடியோவாக இணையத்தில் அதிகமாக உலா வருகிறது.
பிரதமர் மோடிக்கு அரபு நாடுகள் அனைத்தும் எதிரி என்பது போன்ற மாயத் தோற்றத்தை சித்தரிக்க முயன்ற சில இடதுசாரிகள் இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளனர், இது மட்டுமல்லாமல் அரபு நாட்டிலேயே பிரதமர் மோடிக்கு இந்த அளவிற்கு வரவேற்பு மற்றும் புலம்பெயர்ந்து இந்தியர்களின் வரவேற்பு இருப்பது இங்குள்ள பலருக்கு வயிற்று எரிச்சலை கிளப்பி உள்ளது என வலதுசாரிகள் தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.