ஓவர் பந்தா பேச்சு....! சசிகாந்த் செந்திலை பிடறியில் அடிக்க ஓடவிட்டு ராஜஸ்தான் காவிகள்...
By : Mohan Raj
அதிகப்பேச்சு...! அதிக பந்தா...! சசிகந்த் செந்திலுக்கு ராஜஸ்தானில் விழுந்த பலத்த அடி...
கடந்த கர்நாடக தேர்தல் களத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நியமித்தது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் வார்ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணி கர்நாடக தேர்தலில் வேலை செய்தது, அங்கு தேர்தல் வியூகங்களை வகுத்தது மட்டுமல்லாமல் சில ஹேஷ்டேக்குகளை அறிமுகப்படுத்தி அதனை வைத்து கர்நாடக தேர்தல் சமயத்தில் பிரச்சாரங்களை செய்து வந்தது.
மேலும் பாஜக அரசு கமிஷன் அடிக்கிறது, கரப்ஷன் அரசு பாஜக என்பது போன்ற பிரச்சார வியூகங்களை கர்நாடகத்தில் சசிகாந்த் செந்தில் தலைமையிலான அணி தான் செய்தது. கர்நாடக தேர்தல் முடிவுகள் வந்த பொழுது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, அப்பொழுது சசிகாந்த் செந்தில் தேர்தல் வியூகம் மற்றும் பணிகள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பெருமையாக பேசினார்.
பார்த்தீர்களா எங்களுக்கும் ஒரு ஆள் கிடைத்துவிட்டார்! இவர் மேற்கொண்டு யுத்தியால்தான் பாஜகவை வீழ்த்த முடிந்தது! எங்களுக்கு சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அதிகாரி செய்த பலன் தற்பொழுது கர்நாடக தேர்தல் வெற்றியை பெற்று கொடுத்தது, அடுத்தவரும் தேர்தல்களில் இவர் வேலை செய்வார் என காங்கிரஸ் தரப்பிலிருந்து பெருமையாக பேசி வந்தார்கள்! இது மட்டும் இது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை, எப்படி ஒரு ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை மாநில தலைவராக நியமித்து பாஜக முன்னேறி வருகிறதோ? அதேபோல் நாங்கள் ஐஏஎஸ் அதிகாரியை வைத்து காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் நிமிர்த்த போகிறோம் என்றெல்லாம் பேசி வந்தார்கள் காங்கிரஸ் தரப்பினர்.
அந்த சசிகாந்த் செந்தில் சாயம் தற்பொழுது ராஜஸ்தான் தேர்தலில் வெளுத்துள்ளது, கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் அதன்படி நேற்று வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, அது சாதாரண வெற்றி இல்லாமல் பெரும்பான்மையான வெற்றியை பெற்று ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக.
இந்த நிலையில் என்ன ஆயிற்று சசிகாந்த் செந்தில் வியூகம்? சசிகாந்த் செந்தில் இருந்துமா ராஜஸ்தானில் தோற்றது காங்கிரஸ்? ஏன் கர்நாடகா தேர்தலில் வேலை செய்தது ராஜஸ்தானில் வேலை செய்யவில்லையா? என்ன இப்படி ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வியூகம் எல்லாம் 3 மாதத்தில் பல் இளித்துவிட்டதே என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதுவும் குறிப்பாக வாக்குகள் எண்ணப்படும் முன் சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதுதான் ஹையிலைட்டே... 'பணம், வெறுப்பு பிரச்சாரம் மூலம் வாக்குகளை வாங்க முடியும் என்ற புனைவு ராஜஸ்தானில் தகர்க்கப்பட்டு இருக்கிறது, வரலாறு ராஜஸ்தானில் படைக்கப்படும்! இன்ப அதிர்ச்சிக்கு காத்திருங்கள்! 2024'ஆம் ஆண்டுக்கான ஆட்டத்தில் பாஜக விரட்டப்படும்' என குறிப்பிட்டு தனது கருத்தை எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் சசிகாந்த் செந்தில்.
இப்படி ஜம்பமாக 'இன்ப அதிர்ச்சிக்கு காத்திருங்கள்' என சசிகாந்த் செந்தில் பதிவிட்ட அன்று மாலையே ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடக வெற்றியால் சசிகாந்த் செந்திலை அடுத்த காங்கிரஸ் மாநில தலைவர் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து கொண்டாடிய கதர் கட்சியினர், நேற்று சசிகாந்த் செந்திலுக்கு சமூக வலைதளத்தில் கூட ஆறுதல் கூறவில்லை என்பது வேறு விஷயம்... நீங்க தேர்தலுக்கு வேலை பார்த்ததெல்லாம் போதும் என காங்கிரஸ் கட்சி சசிகாந்த் செந்திலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.