Kathir News
Begin typing your search above and press return to search.

இதுதான் பாஜக என நிரூபித்த சென்னை சம்பவம்.... களத்தில் இறங்கி இது எங்க மண் என அரவணைத்த காவிகள்

இதுதான் பாஜக என நிரூபித்த சென்னை சம்பவம்.... களத்தில் இறங்கி இது எங்க மண் என அரவணைத்த காவிகள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  5 Dec 2023 6:02 AM GMT

அண்ணாமலை போட்ட உத்தரவு.... அடுத்த நொடியே சென்னையில் நடந்த மாற்றம்...

தற்பொழுது சென்னையின் நிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்து அனைத்து இடமும் வெள்ளக்காடாக மாறி உள்ளது, நிக்ஜாம் புயலின் எதிரொலியாக தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் அதிகமாக சென்னையில் கன மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் மழை வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக முக்கியமான சாலைகள் மற்றும் தரைப்பாலங்கள் அனைத்தும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தினால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, எங்கும் மக்கள் தெருவில் இறங்கி அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது! இது மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்கள், சிறு சிறு கடைகள், உணவகங்கள் போன்ற எதுவுமே சென்னையில் இயங்கவில்லை. ஆங்காங்கே இருக்கும் தன்னார்வலர்கள் தற்பொழுது இறங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முதல் கனமழை அதிகமாக பெய்து வந்த காரணத்தினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்டு உடனடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார், அதன் காரணமாக சென்னையில் தற்பொழுது சில இடங்களில் மக்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளது.

காலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் இருக்கக்கூடிய பாஜக முக்கிய நிர்வாகிகளை அழைத்து நிக்ஜாம் புயலின் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த நேரத்தில் நாம் அரசியல் செய்வதை விட பொதுமக்களுக்கு உதவ வேண்டும் அதுவும் பாஜக சார்பில் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற வேண்டும். நாம் மக்களுக்கு இந்த நேரத்தில் களப்பணி செய்வதில் தாமதிக்கக்கூடாது, உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்!

முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து குழுவாக செயல்பட்டு பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்த படியாக களத்தில் இறங்கினார்கள் பாஜக நிர்வாகிகள், குறிப்பாக பாஜக மாநில செயலாளர்கள் வினோஜ் பி செல்வம் அவரது பகுதியில் ஐயாயிரம் பேருக்கு உணவுப் உடனடியாக சமைத்து விநியோகிக்க துவங்கினார், இது மட்டுமல்லாமல் அங்கு குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கு பிரட் மற்றும் பால் பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக சார்பில் தொலைபேசி எண்கள் அவசர உதவிக்காக அளிக்கப்பட்டது.

அந்த தொலைபேசி எண்களுக்கு வரும் அழைப்புகளை கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் தொகுத்து எங்கெங்கு உதவிகள் வேண்டுமோ அங்கு இருக்கக்கூடிய நிர்வாகிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தினார்கள். இதன் காரணமாக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது, இதன் காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள முகாமில் தி.நகர், மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் 5000 பேருக்கு உணவு தயார் செய்யும் பணியில் பாஜகவினர் உடனடியாக களத்தில் இறங்கினார்கள்.

அடுத்தபடியாக நீலாங்கரை, மடிப்பாக்கம் பகுதிகளில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் ஏற்பாட்டில் 5000 பேருக்கு உணவு தயார் செய்ய மோடி கிச்சன் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் தென் சென்னை, நீலாங்கரை பகுதியில் ஐயாயிரம் பேருக்கு இரவு உணவு வழங்கும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அறிவுரையின் பேரில் துவங்கப்பட்டது. மேலும் சென்னையில் பல பகுதிகளில் 100 முதல் 5000 பேர் வரையிலான மக்கள் பயன்படும்படி இரவு உணவு மற்றும் காலை உணவு அவர்களுக்கு தயார் செய்துதரும்படியான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்தும் குறிப்பாக நாமக்கல், திருச்சி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் சென்னை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக பொருட்களை சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது. நாளை நிவாரண பொருட்கள் கொண்ட வண்டியை அனுப்புவதற்காக இன்று முதலில் பாஜக நிர்வாகிகள் பணிகளை துவக்கி உள்ளனர், இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை மக்களுக்கு உதவியாக நிற்க வேண்டிய நேரம் என அண்ணாமலை கூறியதன் காரணமாக தற்போது சென்னையின் பல இடங்களில் பாஜக இந்த முகாம்களை அமைத்து அதன் காரணமாக பல்வேறு மக்கள் பயன்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News