Kathir News
Begin typing your search above and press return to search.

முட்டுக்கொடுக்கப்போய் வசமாக சிக்கிய செந்தில், சல்மா.... இந்த மழையில இதெல்லாம் தேவையா...?

முட்டுக்கொடுக்கப்போய் வசமாக சிக்கிய செந்தில், சல்மா.... இந்த மழையில இதெல்லாம் தேவையா...?

Mohan RajBy : Mohan Raj

  |  5 Dec 2023 1:57 PM GMT

மழையிலும் வழக்கம் போல் வாங்கி கட்டிக் கொண்ட செந்தில், சல்மா.... இதெல்லாம் தேவையா...?

தற்பொழுது சென்னையில் பெய்த கன மழை தான் தலைப்புச்செய்தியாக மாறி உள்ளது. தமிழகத்திலிருந்து ஆந்திரா நோக்கி சென்ற மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டு விட்டது, பல இடங்களில் சாலை வசதி தடைபட்டு, மழை நீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்த காரணத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட மூன்று தினங்கள் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி நிலையை தற்பொழுது அடித்த புயல் ஏற்படுத்தி விட்டது, இந்த நிலையில் ஆளும் திமுக அரசின் மீது மக்களின் கோபம் திரும்பி உள்ளது. குறிப்பாக ஆளும் திமுக அரசு நான்காயிரம் கோடி செலவு செய்தது எங்கே? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டன.

இதன் காரணமாக ஆளும் திமுக தரப்பு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் இருந்து வரும் நிலையில் திமுக இணைய ஆதரவாளர்களும் தற்பொழுது இணையத்தில் திமுகவிற்கு முட்டுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் எதையாவது கூறி மாட்டிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் முன்னாள் பத்திரிகையாளரும், தற்பொழுது யூடியூப் சேனல் நடத்திவருபவருமான செந்தில் ஒரு வார்த்தை எக்ஸ் பதிவில் கூறப்போக அதற்கு சரமாரியாக அவருக்கு பதிலடி கிடைத்துள்ளது.

செந்தில் முழு திமுக அபிமானி, திமுக எது செய்தாலும் பாராட்டி பேசுவதும் பாசிச அரசே! ஒன்றிய அரசே! பாசிச மோடி அரசே! என மத்திய அரசை விமர்சித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டவர்.

தற்பொழுது இந்த மழையை குறிவைத்து இவர் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார், அதில் 'அப்புறம் வழக்கம்போல் பாய்மார்கள் களத்தில் இறங்கிட்டாக! தேவாலயம், பள்ளிவாசல் எல்லாம் திறந்து விட்டாச்சு! மக்களுக்காக ஆர்.எஸ்.எஸ் யாராவது உதவி செய்து பார்த்தீர்களா?' என ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு தற்போது வலதுசாரிகள் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்து விட்டார்கள், அதிலும் குறிப்பாக மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது அது மட்டுமல்லாமல் மற்றும் தாம்பரம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் காரிய கர்த்தாக்கள் இறங்கி பணி செய்வது, சமைத்து உணவு வழங்குவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை செந்தில்வேலுக்கு பதிவிட்டு தற்பொழுது எங்கே செந்தில்? இப்பொழுது பார்க்க மாட்டீர்களா? உங்களுக்கு சர்ச் மற்றும் மசூதி உதவி செய்தால் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுமா? இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி இணையத்தில் விழுந்த பலத்த பதிலடி காரணமாக வழக்கம்போல் நேற்று இந்த பதிவிட்டதற்குப் பிறகு செந்தில் அதன் பிறகு வேறு எந்த பதிவும் விடாத அளவிற்கு அவருக்கு தற்பொழுது கமெண்ட்கள் குவித்து வருகிறதால் இணையதளத்தில் கப்சுப் என ஆகிவிட்டார்.

இது மட்டுமல்லாமல் இணையதளத்தில் திமுக அபிமானியான சல்மா வேறு குறிப்பிட்ட ஒரு பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, சினிமா விமர்சகர் பிரசாந்த் அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை! உதவி தேவை என்பது போன்ற பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்! 20 குடும்பங்களுக்கு உதவி தேவைப்படுகிறது டி.நகர் பகுதியில் என கேட்டிருந்தார்.

உடனே அதற்கு சல்மா ‘வீட்டில் அரிசி பருப்பு எல்லாம் வழித்து துடைத்து வைத்திருப்பார்களா என்ன? அரசு புயல் வருவதாக கொடுத்த அறிவிப்புகள் எல்லாம் உங்களுக்கும் சேர்த்துதான் இதை எளிய மக்கள் சொல்லலாம்... எனக் கூறி அவர் பதிவிட்டிருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது உதவி செய்கிறேன் என்ற பெயரில் பேசுவது, ஆளுங்கட்சி ஆகியதற்கு பிறகு அப்புறம் இப்படி ஆணவமாக பேசுவது இதெல்லாம் வரும் காலங்களில் மக்கள் மறக்க மாட்டார்கள் எனக் கூறி சல்மா பதிவை பல பேர் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள். இதுவும் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News