Kathir News
Begin typing your search above and press return to search.

ச்சை நிர்வாகமா இது....? தத்தளித்து கொந்தளிக்கும் தலைநகர்....!

ச்சை நிர்வாகமா இது....? தத்தளித்து கொந்தளிக்கும் தலைநகர்....!

Mohan RajBy : Mohan Raj

  |  6 Dec 2023 1:36 PM GMT

என்னையா அரசு நிர்வாகம் இது.... கொதிப்பில் சென்னை மக்கள்...

சென்னையில் கடந்த மூன்று தினங்களாக மிக்ஜம் புயலின் காரணமாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சென்னையின் பிரதான பகுதிகளில் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதனால் மக்கள் போக்குவரத்து, மின்சாரம், மொபைல் சேவைகள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரதான ஏரியாக்களை அரசு இயந்திரம் உடனடியாக இறங்கி அங்கு தேங்கி இருந்த தண்ணீரை எல்லாம் அப்புறப்படுத்தியது, ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை வெள்ளநீர் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக ஆங்காங்கே தற்பொழுது போராட்டங்கள் வெடித்து வருகிறது, சென்னை ஆர்.கே. நகரில் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மக்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை! எங்களை பார்க்க யாரும் வரவில்லை! நிவாரண வசதிகள் ஒழுங்காக கிடைக்கவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இது மட்டுமல்லாமல் அயனாவரம் வாட்டர் டேங்க் ஏரியா பகுதியில் புது ஆவடி ரோட்டில் இரவில் பொதுமக்கள் மின்சார வசதி சரி செய்யப்படவில்லை எனக் கூறி வீதிகளில் இறங்கி போராடினார்கள். இது மட்டுமல்லாமல் சென்னை பட்டினம் பாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் முற்றுகையிட்டனர், இதனால் மின்சார வாரிய அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.


மேலும் பல புறநகர் பகுதிகளில் இன்னமும் வெள்ளநீர் வடியவில்லை, சில இடங்களில் கழுத்தளவு வெள்ளநீர் தேங்கி நிற்கிறது, மின்சாரம் வரவில்லை, அத்தியாவசிய தேவைக்கு பால் பாக்கெட் கிடைக்கவில்லை, உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கூட ஏதேனும் கடைகள், உணவகங்கள் இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஆளும் திமுக அரசு சார்பில் என்னதான் அதன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இறங்கி வேலை செய்தாலும் மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் தற்பொழுது அரசு நிர்வாகம் கூட என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறது! கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் பேசிய அப்போதைய திமுக தற்போது ஆட்சியில் இருக்கும் பொழுது அதே நிலையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

என்னதான் திமுக தரப்பிலிருந்து இணையதள ஆதரவாளர்கள் தண்ணீர் வடித்துவிட்டது! திராவிட மாடல் அரசு சூப்பர்! சென்னையை காப்பாற்றிய திமுக என்றெல்லாம் கூறி சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்து வந்தாலும் ஆங்காங்கே மக்கள் போராட்டத்திலும், மறியலிலும் ஈடுபடுவது உண்மையான திமுக நிர்வாகம் இதுதான்! அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது! அரசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

மேலும் சென்னைக்கு ஒதுக்கிய 4000 கோடி எங்கே என கேள்வியும், விமர்சனங்களும் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News