Kathir News
Begin typing your search above and press return to search.

திராவிட மாடல் எனக்கூறி ஆட்டோக்காரரிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட பத்திரிகையாளர்.... மொத்தமும் போச்சா...?

திராவிட மாடல் எனக்கூறி ஆட்டோக்காரரிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட பத்திரிகையாளர்.... மொத்தமும் போச்சா...?

Mohan RajBy : Mohan Raj

  |  7 Dec 2023 12:45 PM GMT

திராவிட மாடல் என ஒரு வார்த்தை சொல்லி ஆட்டோக்காரரிடம் வாங்கி கட்டிக்கொண்ட பத்திரிக்கையாளர்...

திமுக அரசு 2021ல் அமைந்த சமயத்தில் அதிக விளம்பரங்கள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மேலும் அதிக அளவிலான செயல்திட்டங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் வாக்கு கேட்டது. அதனை தொடர்ந்து ஆட்சியில் வந்ததற்கு பிறகு இது திராவிட மாடல் அரசு என பெருமைப்படும் விதமாக முதல்வர் ஸ்டாலினும் கூறினார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்லத்தான் திமுக அரசின் நிர்வாகத்துடன் மக்களுக்கு புரிய ஆரம்பித்தது, குறிப்பாக கூற வேண்டும் என்றால் முதலில் வாக்குறுதிகள்! அடுத்தபடியாக செயல் திட்டங்களில் பின்னடைவு என பல்வேறு பின்னடைவுகளை திமுக அரசு சந்தித்த காரணத்தினால் மக்கள் மத்தியில் திராவிட மாடல் என்கின்ற வார்த்தையே மிகவும் போர் அடித்து விட்டது எனவும் அதுவும் குறிப்பாக நடுநிலையாளர்களுக்கு திராவிட மாடல் என்கின்ற வார்த்தையை கேட்டாலே கோபம் வருகிறது எனவும் வேறு இணையதளத்தில் விமர்சனங்கள் பறந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக சென்னையில் பெய்த மழை வேறு திமுக அரசுக்கு மேலும் பல பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, பல இடங்களில் தண்ணீர் தேங்கியது விடியவில்லை, மழை வெள்ள நீருடன் சேர்த்து கழிவுநீரும் தேங்கியுள்ளது, மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை உபயோகப்படுத்தும் தண்ணீரை மக்கள் டேங்குகளில் சேமித்து வைத்துக்கொள்ள மின்சாரம் இல்லை, பால் பாக்கெட் கிடைக்கவில்லை, உணவு வாங்கலாம் என்றால் கடைகள் இல்லை என பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதுவும் திமுக அரசுக்கு மேலும் பல பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் ரெட் பிக்ஸ் சேனலின் உரிமையாளர் பிலிக்ஸ் ஜெரால்டு திராவிட மாடல் என சொல்லி ஆட்டோக்காரரிடம் வசமாக சிக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

ரெட் பிக்ஸ் எனப்படும் youtube சேனலை நடத்தி நிர்வகித்தும் வருபவர் பிலிக்ஸ் ஜெரால்டு இவர் பெரும்பாலும் இடதுசாரி கருத்துக்களை முன்வைப்பவர், இவர் சமீபத்திய ஒரு யூட்யூப் சேனல் நேர்காணலில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரிடம் பேசும் பொழுது கூறிய சம்பவம் தான் தற்பொழுது வைரலாகிறது.

அந்த நேர்காணலில் பிலிக்ஸ் ஜெரால்டு கூறும்போது, 'தோழர் நான் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன்! 'திராவிட மாடல்'

என ஒரு வார்த்தையை தெரியாமல் சொல்லிவிட்டேன்! ஆட்டோக்காரன் என்னை போட்டு படுத்தி எடுத்து விட்டான், என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை' என அவர் கூறியதும் உடனே குறிப்பிட்ட சவுக்கு சங்கர் 'கெட்ட வார்த்தை எல்லாம் யூஸ் பண்ணி இருப்பானே' என்றார். உடனே அதற்க்கு பிலிக்ஸ் ஜெரால்டு 'கண்டிப்பா அதெல்லாம் யூஸ் பண்ணான்' என்ன இவரும் அதனை ஆமோதித்தார்.

மேலும் அந்த ஆட்டோக்காரரிடம் 'இல்லைங்க நான் ஒரு பத்திரிகையாளர் நான் உங்களிடம் பேச்சு கொடுக்கலாம் என திராவிட மாடல் என பேச்சை எடுத்தேன்' என பிலிக்ஸ் ஜெரால்டுக்கு ஆட்டோக்காரரை சமாதானப்படுத்தி உள்ளார்.

இப்படி இடதுசாரி பத்திரிகையாளர் 'திராவிட மாடல்' என்றால் பொதுமக்கள் கோபத்துடன் பேசுகிறார்கள் என பொதுவெளியில் கூறும் அளவிற்கு இருக்கிறது திமுக ஆட்சி என பல்வேறு விமர்சனங்கள் இணையதளத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக திமுக அரசு என்றாலே அரசின் நிர்வாகத்தை விமர்சித்தும், நிர்வாக திறன் இல்லாத அரசு எந்திரம் என திமுக அரசை விமர்சித்தும் பல்வேறு கமெண்டுகள் இணையதளத்தில் உலா வருவதை பார்க்க முடிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News