Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டு உபயோக பொருள்கள் இன்ஸூரன்ஸ் - சாத்தியமா? இல்லையா?

வீட்டு உபயோக பொருள்கள் இன்ஸூரன்ஸ் - சாத்தியமா? இல்லையா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2023 2:55 PM GMT

கடந்த மூன்று நாட்களாக செய்தித்தாள்களின் தலைப்பு செய்தியாக பார்க்கப்படுவது சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருப்பது! வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜம் புயல் சென்னை நோக்கி நகர்ந்து வந்து சூறாவளியுடன் கூடிய பலத்த மழையை பொழிய வைத்து சென்னை பகுதி முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றது. அதற்குப் பிறகு அப்பகுதி மக்கள் பெரும் அவதிகளை கண்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மழைநீர் தேக்கம் வீட்டிற்குள்ளும் மழை நீர் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை பால் உணவு என ஒரு பொருளும் கிடைக்காமல் மீட்பு நடவடிக்கைகளுக்கு யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நிலை மட்டுமே சென்னை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்குள்ளும் பெருமளவிலான மழை நீர் புகுந்ததால் வீட்டிற்குள் இருந்த வீட்டு உபகரண பொருட்கள் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி பெட்டி மற்றும் மொபைல் போன், கணினி, மடிக்கணினி, மின் அடுப்பு என்ன வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்திருக்கும். அதுமட்டுமின்றி சில பகுதிகளில் வீசிய புயல் காற்றால் பெருமளவில் வீடு சேதம் அடைந்திருக்கும். இவை அனைத்திலிருந்தும் எப்படி மீள்வது வீட்டை எப்படி மீட்பது பொருட்களுக்கு என்ன நிலை அவை அனைத்தையும் மீண்டும் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என சென்னை மக்கள் தங்களது அத்தியாவசிய தேவையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் அந்த சிந்தனைக்கு தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அருமையான ஒரு தகவல்... வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதே! வீடுகளில் பாதிப்புகள் மிக மோசமாக உள்ளது இதனால் காப்பீடு கிடைக்குமா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கும், அந்தக் கேள்விக்கான விடையையும் கூற உள்ளோம். அதாவது ஒரு வீட்டை இன்சூரன்ஸ் செய்யும் பொழுது வீட்டில் உள்ள உபகரங்கள் அனைத்தையும் சேர்த்து இன்சூரன்ஸ் செய்யும் பல திட்டங்கள் காப்பீடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது நடைபெறும் இயற்கை பேரிடர்கள் என்பது அதிக அளவிலும் அடிக்கடியும் எதிர்பாராத சமயத்திலும் நடைபெற்று வருகிறது இதனால் வீட்டில் உள்ள அப்ளைன்ஸ்களையும் சேர்த்து ஒட்டுமொத்த வீட்டிற்கும் ஒரு காப்பீடு பொதுவாக எடுத்து வைப்பது மிகவும் நல்லது. ஆனால் இந்தியாவில் பொதுவாக வீடு காப்பீடு என்றாலே கட்டிடத்தையும் வீட்டில் இருக்கும் பொருள்களையும் சேர்த்து தான் எடுக்கப்படுகிறது.

இந்த காப்பீடானது வீட்டு உரிமையாளர்களால் எடுக்கப்படுகிறது அவர்களின் வாடகைக்கு வீட்டிற்கும் எடுக்கலாம். எந்த ஒரு இயற்கை பேரழிவு அல்லது எதிர்பாராத பேரழிவு ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் சேதங்கள் வீட்டையும் வீட்டில் உள்ளே இருக்கும் பொருட்களையும் சேதப்படுத்தினாலும் நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்றால் அதுவே ஒரு சிறந்த வீட்டு காப்பீடு எனப்படுகிறது. அதாவது நாம் எடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் வீட்டில் உள்ள பொருட்கள் இதர வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நகைகள் கூட கவராகும் வகையில் இருக்க வேண்டும். திடீரென தீ விபத்துக்கள் ஏற்பட்டாலும் அவையும் இதில் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

முன்னதாக காப்பீடு எடுப்பதற்கு முன்பாக வீட்டின் மதிப்பையும் வீட்டில் உள்ள பொருட்களின் மதிப்பையும் மதிப்பிட்டு அதற்கு ஏற்றார் போல் காப்பீடு தொகையை திட்டமிட வேண்டும். குறைவான காப்பீட்டுத் தொகையை திட்டமிட்டு அதில் காப்பீடு எடுப்பதன் மூலம் நமக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை, ஏனென்றால் இயற்கை பேரழிவு காலங்களில் நமக்கு சிறிய தொகையே கிடைக்கும்.

மேலும் பிரீமியத்தின் தொகையை நிர்ணயிக்கும் முன் வீட்டின் வயதையும் வீடை கட்டுவதற்கான செலவையும் கட்டமைப்பின் வகையையும் மையப்படுத்தி நிர்ணயிக்க வேண்டும். எனவே ஏதோ ஒரு பாலிசி கிடைக்கிறது என்று ஏதோ ஒரு பிரிமியம் தொகைக்கு இன்சூரன்ஸ் எடுக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு நம் தேவைக்கு ஏற்றார் போல் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News