Kathir News
Begin typing your search above and press return to search.

வாழ்கை ஒரு வட்டம்டா.....! அண்ணாமலையிடம் வேலையை கட்டிய ஷபீர் அஹமதுவுக்கு கர்மா அடித்த அடி....!

வாழ்கை ஒரு வட்டம்டா.....! அண்ணாமலையிடம் வேலையை கட்டிய ஷபீர் அஹமதுவுக்கு கர்மா அடித்த அடி....!

Mohan RajBy : Mohan Raj

  |  11 Dec 2023 11:27 AM GMT

சபீர் அகமதுற்கு விழுந்த அடிகள்... அன்று அண்ணாமலையிடம் நடந்தது ஞாபகம் இருக்கா?

பத்திரிக்கையாளர் சபீர் அகமது என்பவர் பிரபல பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருப்பவர். ஆனா இவர் பாஜகவை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை எதிர்த்தும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருபவர், பல நேரங்களில் இவர் திமுகவிற்கு சாதகமாக பேசியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதாவது 'அண்ணாமலை எப்பொழுதுமே பத்திரிக்கையாளர், தான் என்ன கேள்வி கேட்க விரும்புகிறாரோ அது போன்ற கேள்வியை தான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார் இதனாலே அவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது என்றும் அண்ணாமலை தனக்கு எதிராக எழும் பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக தான் மற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளில் எந்தெந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லையோ அப்பொழுது பத்திரிகையாளர்களை அவர் தாக்க ஆரம்பித்து விடுவார் என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தவர் அண்ணாமலை மீது வைத்தவர் சபீர் அஹமது.

இப்படி சபீர் அகமது தொடர்ந்து அண்ணாமலையை குறி வைத்து விமர்சனம் செய்து வருவதற்கு முக்கிய காரணமாக கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் கூறப்படுகிறது. அதாவது கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்ற அண்ணாமலைக்கும் பத்திரிகையாளர் சபீர் அகமதிற்கும் இடையே சர்ச்சை வெடித்தது.

சபீர் அகமதும் சற்று யோசிக்காமல் வார்த்தைகளை விட அண்ணாமலை அதற்கான பதிலடி கொடுத்தார். இதனால் மூத்த பத்திரிக்கையாளர் சபீர் அகமது அண்ணாமலைக்கு எதிரான போராட்டத்தையும் பத்திரிகையாளர்கள் சார்பில் நடத்தினார். அதில் அண்ணாமலை குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராடியதும், அரசியலில் அண்ணாமலை வெறும் எல்கேஜி மட்டும்தான் தொடர்ந்து அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொள்வதற்கு எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பகிரங்க கோரிக்கையும் சபீர் அகமது முன் வைத்தார் இதற்கு அண்ணாமலை சிறிதும் மனம் தராமல் நான் எந்த தவறும் செய்யவில்லை அதனால் நான் மன்னிப்பும் கேட்க முடியாது என்று தனது முடிவில் நிலைத்து நின்றார்.

இப்படி மொத்தமாக அண்ணாமலையை வெறுத்தும் திமுகவை ஆதரித்தும் பேசி வந்த சபீர் அகமதை திமுகவினரே கடுமையாக எதிர்த்து மிரட்டல் விடுத்துள்ளனர். அதாவது கடந்த வாரத்தில் சென்னை முழுவதும் மழை நீர் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் மக்கள் படும் துயரங்களையும், உள்ளாக்கப்பட்ட சிரமத்தையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டு வந்தனர். பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் கிடைக்காமல் மக்கள் வேதனை உற்ற நிகழ்வுகளை குறித்தும் அரசு தரப்பில் மீட்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என்பதையும் மக்கள் தெரிவித்ததை பத்திரிக்கையாளர் சபீர் அகமது வெளியிட்ட காரணத்திற்காக அவரை சில திமுக நிர்வாகிகள் மிரட்டி உள்ளனர், மேலும் உன்னை வாழவே விடக்கூடாது! ஒழித்தே தீரவேண்டும் என்று வெளிப்படையாக திமுக தரப்பில் சபீர் அகமதிற்கு மிரட்டல் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை உடனடியாக தமிழக முதல்வர் கவனம் எடுத்து பத்திரிக்கையாளர் சபீர் அகமதை மிரட்டியவர்களை கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இப்படி திமுகவை ஆதரித்து பாஜகவை எதிர்த்து வந்த சபீருக்கு ஒரு வருட காலத்திற்குள்ளே திமுக தனது உண்மை முகத்தை காமித்து விட்டது அன்று அண்ணாமலையை குறிவைத்து உள்நோக்கத்துடன் எதிர்த்த சபீர் அஹமதுவிற்கு இது தேவைதான் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News