Kathir News
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடி மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கிய ஸ்டெர்லைட் காப்பர்.. செய்த ஏராள உதவிகள்..

தூத்துக்குடி மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கிய ஸ்டெர்லைட் காப்பர்.. செய்த ஏராள உதவிகள்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Dec 2023 1:54 AM GMT

சமீபத்தில் தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்புகளை ஒட்டி, தரமான தாமிர உற்பத்தியாளரான ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உடனே களத்தில் இறங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியமான மீட்புப் பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இது சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் ஏராளமான பாதிப்புகள், மக்கள் ஓரிடம் விட்டு இன்னொரு இடம் செல்லவேண்டிய அவசர நிலை. இந்த அவசரத்தைப் புரிந்துகொண்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உடனே தன்னிடம் உள்ள வசதி, வாய்ப்புகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் மனிதநேயப் பிரிவு, பாதிக்கப்பட்ட மக்களுடைய துயரைத் துடைப்பதற்காக உடனடியாக உதவிகளை வழங்கத் தொடங்கியது. அதன் மூலம், பாதிக்கப்பட்ட சமுதாயங்களை மீள்கட்டமைப்பு செய்யமுடியும் என்ற நம்பிக்கை இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது.


முழுமையான மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மழைவெள்ளத்தினால் மூழ்கிப் போன பகுதிகளைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் படகுகளைப் பயன்படுத்தியது. சமுதாய நலனையே தன் நலனாகக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஈடுபாட்டை நிரூபிக்கும் விதமாக, அனைத்து மீட்பு நடவடிக்கைகளிலும் தேர்ந்த பயிற்சி பெற்ற வல்லுநர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். உள்ளூர் மக்களுடைய பாதுகாப்புக்கும், நலனுக்கும் தான் இந்த மீட்புப் பணியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தச் சவாலான பேரிடர் காலத்தில் வெள்ளப் பாதிப்புகளை சமாளிப்பதற்கு அத்தியாவசியமான தேவை, உணவு. அதை உணர்ந்துகொண்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தனது அணையா சமையல்கூடத்தில் மூலம், ஒவ்வொரு நாளும் 25,000 உணவுப் பொட்டலங்களை வழங்கிவருகிறது.


இதனை ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்களாக உயர்த்தவும் திட்டமிட்டிருக்கிறது. மேலும், உடனடியாகத் தேவைப்படும் நிவாரணப் பொருட்கள் கொண்ட பெட்டகங்களை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தேர்வு செய்து ஒழுங்கு செய்துள்ளதோடு, அவற்றை 10,000 பேருக்கு வழங்கி வருகிறது. இந்தப் பெட்டகத்தில், அத்தியாவசியப் பொருட்களான பிரெட், பால் பெளடர், பிஸ்கட்டுகள், குடிநீர், மெழுகுவத்திகள், முதலுதவி மருந்துகள் ஆகியவை அடங்கியுள்ளன. இதன்மூலம், இந்த இடர்காலத்தில் உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து, வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாட்டை எடுத்துரைத்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமிகு. ஏ. சுமதி, “மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும், இடர் காலங்களில் பொறுப்புள்ள கார்ப்பரேட் நிறுவனமாக நாங்கள் நிச்சயம் செயல்படுவோம் என்பதை மீண்டும் உறுதிபடக் கூறுகிறோம். மழைவெள்ளம் பாதித்த முதல் நாளான திங்கட்கிழமை முதலே, உதவி செய்யும் பணியில் குதித்த முதல் நிறுவனங்களில் ஒன்று ஸ்டெர்லைட் காப்பர். இந்த இயற்கைப் பேரிடரின் போது, உதவி தேவைப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கும் நாங்கள் எங்களால் ஆன அனைத்து உதவிகளையும் நிச்சயம் செய்வோம்.


மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக எங்கள் நிறுவன பணியாளர்களையும் அவர் தம் குடும்பத்தினரையும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்". இப்படி ஒருங்கிணைந்து பணியாற்றினால் தான், பேரிடரினால் பாதிக்கப் பட்டோருடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். நாங்கள் தூத்துக்குடி மக்கள் மீது கொண்டுள்ள அன்பை எங்களுடைய இடையறாத பணிகளும் ஈடுபாடுமே எடுத்துக்காட்டும். கவனத்துடன் செயல்படும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், உள்ளூர் அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து அனைத்து மீட்புப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன தேவை என்பதைக் கணித்து, அவற்றை அவர்களுக்கு வழங்குவதற்கான உறுதிப்பாட்டை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News