Kathir News
Begin typing your search above and press return to search.

ஆரம்பிக்கலாமா.. லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ.க-வின் பிரம்மாஸ்திரம்.. பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்..

ஆரம்பிக்கலாமா.. லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ.க-வின் பிரம்மாஸ்திரம்.. பிரதமர் மோடி கொடுத்த அட்வைஸ்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Dec 2023 2:09 AM GMT

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் என்ன மாதிரியான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அனைத்து கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள அவ்வப்பொழுது அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ச்சியான வகையில் நடத்தி வருகிறது. தற்போது சுமார் 4 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்து இருக்கும் இந்த ஒரு சூழ்நிலையில், இந்தியாவின் பெரிய கட்சிகள் அனைத்தும் தற்போது லோக்சபா தேர்தலுக்கு தன்னை மும்முரமாக களத்தில் இறக்க தயார்படுத்தி வருகிறது. இந்தியாவில் தற்பொழுது இரண்டு பெரிய கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டிகள் வலுவாக எழுந்து இருக்கிறது. இருவரும் தங்களுடைய தேர்தல் பணிகளை ஆரம்பிக்க தொடங்கி இருக்கிறார்கள். லோக் சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இரு தேசிய கட்சிகளும் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளன.


ஏற்கனவே பாஜக தன்னுடைய நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. அதில் மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆலோசனைகளும் அறிவுரைகளும் கூட்டத்தில் எடுத்து வைக்கப்பட்டது. மறுபடியும் காங்கிரஸ் இந்தியா என்று பெயரில் தங்களுடைய கட்சிக் கூட்டணிகளை நடத்துகிறது. இருந்தாலும் இதில் டெல்லியில் பாஜக நடத்திய கூட்டம் ரொம்பவே முக்கியமானது. ஏனென்றால் இந்த ஒரு கூட்டத்தை தான் பாஜக தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை களத்தில் இறக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. பாஜகவின் ஆலோசனைக் கூட்டமானது சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இரண்டு நாட்கள் பாஜக தேசிய தலைவர்கள், நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்று எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? எப்படி பணிகளை ஆரம்பிக்க வேண்டும்? என்பது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறார்.


லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகுமாறு பிரதமர் மோடி பாஜக தொண்டர்களை அறிவுறுத்தி உள்ளார். மேலும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக 35 கோடி வாக்குகளைப் பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இலக்குகளை எந்த வகையில் நிறைவேற்றலாம் எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்யலாம் என்பது குறித்தான தீவிர ஆலோசனைகளும் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு இலக்குகள் குறித்து பாஜக வட்டாரங்கள் தகவல்களை தெரிவித்து இருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் அயோத்தி ராமர் கோயில் குறித்தும் அதிகம் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.


குறிப்பாக பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சியின் காரணமாக தற்பொழுது ராமர் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் தொடர்பாக தகவல்களை சமூக வலைத் தளங்களில் பகிரவும், அது குறித்த கூட்டங்களை நடத்தவும் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் கும்பாபிஷேக விழாவை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு இந்த ராமர் கோயிலுக்குப் பொதுமக்கள் சென்று வரவும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒரு பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி பாஜக மக்களிடம் தங்களை முன்னிறுத்திக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.


மேலும், பல்வேறு அரசுத் திட்டங்களால் 7 கோடி இந்தியர்கள் பயனடைந்துள்ள நிலையில், அது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் தலைமுறை வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோர் பிரதமர் மோடி அவர்களின் திட்டத்தினால் எந்த அளவிற்கு பயனை அனுபவித்து வருகிறார்கள். அந்த திட்டத்தை இவ்வாறு மெருகேற்றலாம் என்பது குறித்தான ஆலோசனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா தற்போது டிஜிட்டல் யுகத்தின் காரணமாக உலக அரங்கில் தனக்கென தனி ஒரு இடத்தை பெற்று இருக்கிறது. அது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News