கிளம்பாக்கமா.. கோயம்பேடா.. குழப்பத்தில் சிக்கிய மக்கள்..
By : Bharathi Latha
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற் கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. குறிப்பாக தென் மாவட்டத்திலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை திமுக தரப்பு வெகு விமர்சியாக தொடங்கி வைத்தது.
தமிழ் நாட்டிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ள இங்கு, 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள், முழு குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2,285 வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி, 500 தனியார் பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும் தற்போதும் மக்கள் இந்த பேருந்து நிலையத்தின் குழப்பம் காரணமாக பெருமளவில் குழம்பி இருக்கிறார்கள். இந்நிலையில், சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சுமார் 35 கி.மீ தூரம் பயணித்து இந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதே போன்று தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வரும் மக்கள் கிளாம்பாக்கத்திலேயே இறக்கிவிடப்படும் நிலையில், அங்கிருந்து கூட்ட நெரிசல் மிக்க மாநகர பேருந்தில் மாறி சென்னை வரவேண்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர். முக்கியமாக இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் வயதானவர்களும், குழந்தைகளை அழைத்து வருபவர்களும் அசௌவுகரியங்களை தவிர்க்க தனியார் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தும் போது அதிக செலவீனம் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பயணிகளின் பயணச்சீட்டு குறையும் அவர்களுடைய பணத்தின் மிச்சப்படுத்தும் ஒரு செயலாகவே திமுக அரசு இன்று ஒரு நடவடிக்கை எடுத்து இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பயணிகளின் செலவை அதிகரிக்கும் வகையில் தான் உண்மை நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்து வருகிறார்கள் பொதுமக்கள். கிளாம்பாகத்தில் இருந்து சென்னை செல்வதற்கு அதிக அளவில் செலவு ஆகிறது. மேலும் எந்த ஒரு வசதியும் அதற்கு முறையாக இல்லை என்று பயணிகள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. திமுகவின் கூற்றுப்படி பயண சீட்டின் விலையை குறைத்தாலும் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை செல்வதற்கு அதிகம் செலவு ஆகிறது.
தொடக்கத்திலேயே அதிக அளவு பேருந்துகளை அந்தப் பகுதிகளில் ஏற்பாடு செய்துவிட்டு பிறகு புதிய பேருந்து நிலையத்தை தொடங்கி இருக்கலாம் என்று பல்வேறு பயணிகளும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் கிடையாது கிலாபாகத்தில் இருந்து கோயம்பேடு முற்றிலுமாக எடுக்கப்படும் என்பது போன்ற கருத்துக்களும் வழியாகி இருக்கிறது. சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சுமார் 35 கி.மீ தூரம் பயணித்து இந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதே போன்று தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வரும் மக்கள் கிளாம்பாக்கத்திலேயே இறக்கிவிடப்படும் நிலையில், அங்கிருந்து கூட்ட நெரிசல் மிக்க மாநகர பேருந்தில் மாறி சென்னை வரவேண்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் அரசு தரப்பில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டாலும், முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பயணிகள் அசோகர்யத்தை உணர்வதாகவும் கருத்துக்கள் வெளியாக்கி இருக்கிறது.
Input & Image courtesy:News