Kathir News
Begin typing your search above and press return to search.

சத்தமில்லாமல் தமிழகத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த வருமான வரித்துறை.... சிக்கப்போகும் முக்கிய தல...

சத்தமில்லாமல் தமிழகத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த வருமான வரித்துறை.... சிக்கப்போகும் முக்கிய தல...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Jan 2024 1:53 AM GMT

தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய சுமார் 30 இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வருமான வரித்துறை சோதனை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று இரவு மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர வருமான வரி துறை சோதனையை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வருமான வரித்துறை சோதனையில் பல்வேறு திமுக அமைச்சர்கள் உண்மை நிலைதான் மக்கள் முன் வெளி வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் மத்திய அரசின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டாலே, எந்த திமுக அமைச்சருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள்? என்று சிந்திக்கும் அளவிற்கு திமுக தரப்பினர் செய்து விட்டார்கள். குறிப்பாக திமுக அமைச்சர்கள் ஆக இருக்கும் செந்தில் பாலாஜி , பொன்முடி போன்ற அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையை மேற்கொண்டு இருந்தார்கள் இன்னும் பல்வேறு அமைச்சர்கள் பட்டியலில் இருப்பதாகவும் தொடர்ச்சியான வகையில் தமிழகத்தில் இது போன்ற திடீரென்று வருமானவரித்துறை சோதனையை இது போன்று எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.


ஆனால் இது குறித்து அதிகாரப் பூர்வமான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இருந்தாலும் இந்த ஒரு நிகழ்வு காரணமாக திமுகவைச் சேர்ந்த முக்கிய தலைகளை இந்த ஒரு சோதனை கலக்கம் அடைய செய்து இருக்கிறது. கூடிய விரைவில் வருமானவரித்துறை யார் வீட்டில் சோதனையை மேற்கொண்டார்கள்? என்ன பொருள் சிக்கியது? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.


ஆனால் தற்போது இதன் பின்னணியில், மணல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகளில் தான் அதிகமான சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் பல்வேறு ஒப்பந்த பணிகளை தனியார் கட்டுமான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் நெருக்கமான இடங்கள் என சென்னை, கோவை, ஈரோடு, நாமக்கல் உள்பட தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.


சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர் வீடுகள், அவருடைய அலுவலகங்களில் இந்த சோதனை நடந்ததாகவும் தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் அமைந்த கரை, கீழ்ப்பாக்கம், எழும்பூர் மற்றும் கோவை உள்பட மேலும் சில பகுதிகளிலும் வருமான வரி சோதனை நடந்தது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொள்வது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது மட்டுமில்லாமல் இந்த சோதனை இத்துடன் நிற்காது என்றும் மணல் விவகாரம் போன்று நிச்சயம் நீடிக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போது நடந்து முடிந்த சோதனையின் காரணமாக அடுத்து எந்த இடத்தில் சோதனை நடக்குமோ என சில முக்கிய அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் இருப்பதாகவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே மணல் ரெய்டு அமைச்சர் துரைமுருகனை சுற்றி வளைத்துள்ளது போல் இந்த வருமானவரித்துறை ரெய்டு யாரை சுற்றிவளைக்கப்போகிறதோ எனவும் வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News