தமிழன் பெருமை பேசும் தொழிலதிபர்லாம் எங்கப்பா? பிரக்ஞானந்தாவிற்கு உதவிக்கரம் நீட்டிய அதானி!
By : Sushmitha
பிரக்யானந்தாவை கண்டுகொள்ளாத தமிழக தொழிலதிபர்கள்! அதானி செய்த காரியம் தெரியுமா....!
சதுரங்க விளையாட்டு கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்ற இள வயது சதுரங்க வீரராக அறியப்படுபவர் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. 2013 இல் உலக இளைய சதுரங்க போட்டியில் எட்டு வயது பிரிவில் தனது முதல் செஸ் போட்டியை எதிர்கொண்ட பிரக்யானந்தா பிடே மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து 2015 10 வயது பிரிவியில் போட்டியிட்டு அதிலும் வெற்றி கண்டார். 2014 இல் வரலாற்றில் மிக இளையவராக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று அங்கிரியின் பிரபல சதுரங்க வீராங்கனை ஆன யூடித் போல்காரின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். இதற்கு அடுத்ததாக 2017 முதல் 2018 வரை உலக இலையோ சதுரங்க வாகையாளர் போட்டியில் 8 புள்ளிகள் உடன் தனது முதலாவது கிராண்ட் மாஸ்டர் ரோம் பட்டத்தையும் கிரேக்கத்தில் தனது இரண்டாவது ரோம் பட்டத்தையும், இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மெலடி லுக்காவை வென்று தனது மூன்றாவது ரோம் பட்டத்தையும் வென்று தொடர்ச்சியாக சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி செர்கே கரியாக்கினுக்கு பின்பு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்று இரண்டாவது இளையவர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தாவே அடைந்துள்ளார்.
இதற்குப் பிறகு 2018 ஜனவரியில் வட கரோலைனாவில் உள்ள சார்லட் சதுரங்க மையத்தின் குளிர்கால கிராண்ட் மாஸ்டர் ரூம் போட்டியில் விளையாடி மாஸ்டர் ஆல்பர்ட் பொரேரோ மற்றும் டென்னிஸ் செல்லும் ஆகிய இருவருடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். இவ்வனைத்தையும் தாண்டி 2023 நடைபெற்ற 2023 சதுரங்க உலகக் கோப்பை காண போட்டியில் பிரக்ஞானந்தா டேவிட் நவாரை மூன்றாவது சுற்றிலும் இகாரு நகமுராவை நான்காவது சுற்றிலும், ஐந்தாவது சுற்றில் பெரென்சு பெர்க்சையும், கால் இறுதியில் அர்ஜுன் எரிக்காய்சியையும், பபியானோ கருவானாவை அரை இறுதியிலும் தோற்கடித்து சதுரங்க உலக கோப்பையின் இறுதி சுற்றை தனது பதினெட்டாவது அகவையில் அடைந்த இந்தியாவைச் சேர்ந்த மிக இளைய வீரர் என்ற பெருமையையும் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின்னர் இறுதிச்சுற்று அடைந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் பெற்று 2024 நடைபெற உள்ள உலக வாகையாளருக்கான வேட்பாளர் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா!
சென்னையைச் சேர்ந்த இவர் இவ்வளவு பெரிய சாதனையை அடைந்தது தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பெருமையாக பேசப்பட்டது. இருப்பினும் இவர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் இவரது தந்தை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
சதுரங்க மாஸ்டர் ஆக இருக்கும் பிரக்ஞானந்தா மேலும் தனது விளையாட்டை தொடர்வதற்கு பொருளாதார உதவிகள் தேவைப்பட்டு உள்ளது அந்த நேரத்தில் தொழிலதிபர் அதானி குரூப் தலைவர் கௌதம் அதானி பிரக்ஞானந்தாவிற்கு ஸ்பான்சர் ஷிப் வழங்க முன்வந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சன் குழுமங்கள் மற்றும் பல பணக்கார குழுமங்கள் இருந்தும், தொழிலதிபர்கள் இருந்தும் பிரக்ஞானந்தாவிற்கு ஸ்பான்சர் ஷிப் வழங்க அவர்கள் யாரும் முன்வரவில்லை ஆனால் அதானி குரூப் ஸ்பான்சர்ஷிப் வழங்க முன் வந்திருப்பது தற்பொழுது இணையங்களில் விமர்சனங்களுக்கு கருப்பொருளாக அமைந்துள்ளது.
தமிழன் முன்னேறவேண்டும் என அரசியல் பேசும் கட்சிகளை சேர்ந்த தொழிலதிபர்கள் யாரும் பிரக்ஞானந்தாவிற்கு பொருளாதார உதவிகள் வழங்க முன்வரவில்லை ஆனால் அதானி குழுமம் பிரக்ஞானந்தாவிற்கு நமது நாட்டின் பெருமை என்ற உரிமையில் உதவ முன்வந்துள்ளது குறித்து இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.