ஜெய் ஸ்ரீராம்! அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடித்த அந்தர் பல்டி!
By : Sushmitha
ராமர் கோவில் திறப்பு விழா! அமைச்சர் சேகர் பாபு சொன்ன வார்த்தை தெரியுமா!
கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாடு என்று மாநாட்டிற்கு வைக்கப்பட்ட பெயரே அருமையாக உள்ளது இதற்கு எனது பாராட்டுக்கள் என்று மாநாட்டின் தலைப்பையும் பாராட்டியதோடு சனாதனத்தை மலேரியா டெங்கு போன்ற நோய்களோடு ஒப்பிட்டு ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டார். இதனால் நாடு முழுவதும் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எதிர்ப்புகள் வெடித்தது மேலும் பல தரப்பிடமிருந்து அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்குகளும் பதியப்பட்டது. அதே சமயத்தில் சனாதனத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதிக் கூறிய அதே மேடையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு இருந்ததும் பல விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றது. அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் இது குறித்து வழக்குகளையும் அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார்.
அதாவது, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில், செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி இந்து மதமும் சனாதன மாதமும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் என்று கூறினார், இவரை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று பேசி இருந்தார் இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆனால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில் இந்த சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும் அவர்களது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சி அளிக்கிறது இதனால் அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்றும் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றும் தனது கண்டனத்தை பதிவிட்டு இருந்தார்.
மேலும் இந்து முன்னணி தரப்பிலும் அமைச்சர் சேகர் பாபு அம்மாநாட்டில் கலந்து கொண்டது தவறு என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்து முன்னணி மற்றும் பலரால் உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு தொடரப்பட்டு அமைச்சர் சேகர்பாபு தனது பதவி பறிபோகும் அளவிற்கு வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் அயோத்தியில் திறக்கப்படும் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா தேதி குறிக்கப்பட்டு விறுவிறுப்பாக இறுதிக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அழைப்பிதழ் தமிழகத்தில் கருணாநிதி அவர்களின் வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திறப்பு விழாவிற்கு பல முன்னணி அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் அழைப்புகள் விடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கு பெருகும் ஆதரவை பார்த்த அமைச்சர் சேகர் பாபு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதாவது அயோத்தி ராமர் கோவில் செல்ல வேண்டும் என்று விரும்புகிற பக்தர்களிடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றால் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அவர்கள் செல்வதற்கு உதவி செய்ய இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது என்று அறிவிப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாளுக்கு நாள் ராமர் கோவிலுக்கு பெருகும் ஆதரவை பார்த்து இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது இணையத்தில் பல விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.