தமிழகத்தில் இருந்து ராம ஜென்ம பூமிக்கு செல்லும் அந்த முக்கிய புண்ணிய பொருள்.... இப்படி ஒரு விஷயம் நடக்கபோகுதா....?
By : Sushmitha
ராமருக்காக ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அந்த முக்கிய பொருள்!
உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கொசல நாட்டின் மன்னராக இருந்த தசரதனின் மகனாக ராமர் பிறந்த புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. இதனால் நீண்ட காலமாகவே ராமஜென்ம பூமியில் ராம கோவில் கட்ட வேண்டும் என்றது பக்தர்களின் கோரிக்கையாக இருந்தது இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி அயோத்தியில் ரூபாய் 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிகளை கடந்த 2020 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டி தொடங்கி வைத்தார். இக்கோவிலின் கட்டுமான பணிகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த கோஷ்த்ரா என்று அறக்கட்டளை செய்து வருகிறது இந்த அறக்கட்டளையின் சார்பிலே ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்காக அழைப்பிதழ்கள் தற்பொழுது அமிதாபச்சன், சூப்பர் ஸ்டார் போன்ற சினிமா பிரபலங்களுக்கும், அதானி போன்ற தொழிலதிபர்களுக்கும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற விளையாட்டு வீரர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அயோத்தி ராமர் கோவிலில் தற்போது வரை தரைதளமும் முதல் தள பணிகளும் நிறைவு பெற்றுள்ளதாகவும் இரண்டாம் தளம் கோவிலை சுற்றி கட்டப்படும் உள்ளதாகவும் மேலும் பல இதர சன்னதிகள் மற்றும் 161 அடி உயர கோபுரங்களும் இங்கு கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது தரைத்தளத்தில் உள்ள கோவில் கருவறையிலே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் வைபவம் பிரதம நரேந்திர மோடியின் முன்னிலையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கோவிலின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வர நிலையில் உலகம் முழுவதும் ராமர் கோவிலுக்கான எதிர்பார்ப்புகள் மேலோங்கி உள்ளது மக்களிடையே ராமர் கோவிலுக்கான வரவேற்பும் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அயோத்தி கோவிலுக்கு ஆயிரம் லட்டுக்களை வழங்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை போலவே அயோத்தி ராமர் கோவில் குறித்த மற்றுமொரு சுவாரசியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் சேர்ந்த வருமானவரித்துறையாக பணியாற்றி ஓய்வு பெற்ற 64 வயதான சல்லா ஸ்ரீ நிவாசா சாஸ்திரி என்பவர் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு காணிக்கையாக ஒரு கிலோ தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளியில் தங்க பாதுகையை தயார் செய்து ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்கு பாதயாத்திரை மூலம் கொண்டு சென்று காணிக்கையாக செலுத்த உள்ளார்.
அதுவும் வனவாசத்தின் போது ராமர் உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் இருந்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கு வந்த வழியை ஆராய்ச்சி செய்து அந்த பாதை வழியாகவே ராமருக்கு தங்க பாதுகையை தலையில் சுமந்து கொண்டு சென்று ராமர் கோவிலுக்கு கொடுக்க முடிவு செய்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரை தொடங்கியவர் ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் வழியாக தற்பொழுது உத்தர பிரதேச மாநிலம் சித்திரக்கூட மாவட்டத்தைச் சென்றடைந்துள்ளார். இம்மாவட்டத்திலிருந்து அயோத்தி நகரத்திற்கு செல்வதற்கு இன்னும் 272 கிலோ மீட்டர் இருப்பதாகவும் இதனை அடுத்து இரண்டு வாரங்களில் கடந்து அயோத்தியை சென்றடைந்து தங்கபாதகையை காணிக்கையாக சல்லா வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படி நாளுக்கு நாள் ராமர் கோவிலின் கும்பாபிஷேக் பணிகள் நெருங்கி வருவதால் ராமர் கோவிலில் திறப்பு குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.