Kathir News
Begin typing your search above and press return to search.

உங்க அப்பன் வீடு காசையா தூக்கி கொடுக்குறீங்க? உதயநிதிக்கு ரிப்பீட்டு அடித்த அரசு ஊழியர்கள்.....!

உங்க அப்பன் வீடு காசையா தூக்கி கொடுக்குறீங்க? உதயநிதிக்கு ரிப்பீட்டு அடித்த அரசு ஊழியர்கள்.....!
X

SushmithaBy : Sushmitha

  |  9 Jan 2024 1:23 AM GMT

வேலை செய்ய ஆரம்பித்தது உதயநிதியின் கர்மா!


கடந்த டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து தமிழகம் முழுவதும் பரவாலான இடங்களில் மழை பொழிந்தது ஆனால் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதும் கனமழையால் பெருமழை பெய்தது. டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது சென்னை அதே போன்று அடுத்த இரண்டு வாரங்களிலே தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களும் கனமழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது சென்னையை விட அதிக மழையை தென்தமிழகமான இந்த நான்கு மாவட்டங்களும் சந்தித்துள்ளது என்றும் அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது.


இதனால் தூத்துக்குடி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி தொழில் துவங்குவதற்கான ஒரு நல்ல இடமாக மாறுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று வருடங்களாவது ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண பொருட்களும் மீட்பு நடவடிக்கைகளும் முறையாக இல்லை என்றும் மழையால் நாங்கள் பாதிக்கப்படும் போது அரசு அதிகாரி ஒருவர் கூட அப்பகுதியில் இல்லை என்றும் குற்றம் சாடினர், மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சென்னையை தொடங்கி தென் தமிழகத்திலும் நடந்ததால் திமுக அமைச்சர்களை நோக்கி பத்திரிகையாளர்கள் தரப்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டது அந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் நிவாரணத்திற்காகவே நாங்கள் ஒரு தொகையை மத்திய அரசிடம் கோரியுள்ளோம் அதற்கான பணத்தை மத்திய அரசு இன்னும் தராமல் உள்ளது என்று பேசியதோடு உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் என்ற ஒரு வார்த்தையும் இவர் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதனை தொடர்ந்து மதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பத்திரிகையாளர்களின் சந்திப்பை நடத்தி அதில் பத்திரிகையாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மத்திய அரசு தரப்பில் மழை பெய்ய உள்ளது என்ற தகவல் முன்கூட்டியே வழங்கப்பட்டு விட்டது, ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் இன்ச் இன்ச்சாக இவ்வளவு மழை வரும் என்பதை துல்லியமாக தான் கூற வேண்டும் அப்பொழுது தான் நாங்கள் மீட்பு பணிக்காக அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று மாநில அரசு கூறுகிறது!


மழை பாதிப்பின் போது அப்பகுதியை சேர்ந்த ஒரு அரசு நிர்வாகி கூட அங்கு இல்லை என்பது மக்கள் மீது தமிழக அரசு கொண்டுள்ள அலட்சியத்தை காட்டுகிறது என்றும் பேசினார். இதனைத் தொடர்ந்து அமைச்சராக உள்ள உதயநிதியின் பாசை எப்பொழுதுமே அப்படித்தான் இருக்கிறது இதே உதயநிதி தான் சனாதன தர்மத்தை அழிக்க வரவில்லை ஒழிக்க வந்திருக்கிறோம் என்று கூறியவர் அவங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிறார்!! அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்துக்கொண்டு இன்றைக்கு பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாரா என்று எங்களால் கேட்க முடியுமா அவருடைய தாத்தா எப்பேர்பட்ட தமிழறிஞர் ஆனால் பதவிகள் இருக்கும் இவர் இப்படியா பேச வேண்டும்! என்று கண்டனம் தெரிவித்ததோடு அவருக்கு அறிவுரையும் வழங்கினார்.


இந்த நிலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலயுறுத்த சென்னை எழும்பூரில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். மேலும் ஊர்வலத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் கொந்தளித்து பேசும் பொழுது திமுக அரசை நோக்கி இப்பொழுது நாங்களும் கேட்கிறோம், பழைய பென்ஷன், அகவிலைப்படி, சரண்டர் போன்ற கோரிக்கைகளை உங்க அப்பன் வீட்டு சொத்தில் இருந்தா கொடுக்கப் போகிறீர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வரும் தேர்தலை நிம்மதியாக சந்திக்க முடியாது என்று பகிரங்க சவால் விட்டார். இப்படி தொடர்ச்சியாக போராட்டங்கள் வெடித்து வருவதால் திமுக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News