Kathir News
Begin typing your search above and press return to search.

போக்குவரத்து தொழிலாளர் ரூபத்தில் திமுக அரசை நெருங்கும் சுனாமி.... வாரி சுருட்டப்போகும் அந்த விபரீதம்!

போக்குவரத்து தொழிலாளர் ரூபத்தில் திமுக அரசை நெருங்கும் சுனாமி.... வாரி சுருட்டப்போகும் அந்த விபரீதம்!

SushmithaBy : Sushmitha

  |  10 Jan 2024 2:31 AM GMT

பொங்கல் நேரத்தில் அவஸ்தையில் மக்கள்


தமிழக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த ஐந்தாம் தேதி போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தரப்பில், போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலை வழங்குதல் மேலும் வேலை நேரத்தில் உயிரிழந்தவர்களின் வம்சாவளிக்கு பணிகளை வழங்குதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது.


முன்னதாக கடந்த மாதம் 19 ஆம் தேதி அன்று ஆறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நோட்டீசை அனுப்பியதை அடுத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது ஏனென்றால் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் முதலில் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை வழங்குங்கள் அதற்குப் பிறகு கூட மற்றவற்றை பேசிக் கொள்ளலாம் என்று முன்வைத்த குறைந்தபட்ச கோரிக்கை கூட தமிழக அரசு நிறைவேற்ற முடியாது என்று கூறியதால் வேலைநிறுத்தத்தையும் நிறுத்த முடியாது என்று சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என்று அரசு தரப்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கு உத்தரவு விடப்பட்டது ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்தனர்.


அதிலும் குறிப்பாக பொங்கல் விடுமுறைக்கு அதிக அளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ள தினத்தை கணக்கிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டிருப்பது தமிழக அரசை இக்கட்டான நிலைக்கு தள்ளியது! ஏனென்றால் போக்குவரத்துகள் அனைத்தும் இயங்கப்பட்டாலும் இந்த விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் ஆனால் தற்பொழுது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது போக்குவரத்து சங்கங்கள்!


இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளவர்கள் அதுவே திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக திமுக அரசு தரப்பில் "தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள் என்றும் அனைத்து பேருந்துகளை இயக்குவதற்கும் ஏதுவாக ஏற்ற முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்" கூறப்பட்டது. மேலும் ஆம்னி பேருந்துகள் மூலமும் தற்பொழுது மக்களின் போக்குவரத்து தேவையை தமிழக அரசு ஏறத்தாழ நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் திருவண்ணாமலையில் இரவு 11 மணி அளவில் கிட்டத்தட்ட 80 சதவிகித அரசு பேருந்துகளின் இயக்கம் முடங்கியதால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டனர்.



பலர் பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான பேருந்துகளை இயக்கப்படுவதும் இதனால் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளை நாடிவந்த மக்கள் பெரும் தவிப்பில் இருந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவுலே பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டதால் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய மக்கள் குவிந்து போக்குவரத்திற்காக காத்திருந்த செய்திகளும் பரபரப்பாக வெளியாகி உள்ளது. இதனால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் விரைவான முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர். மேலும் இதற்கு அடுத்ததாக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளில் போராட்டம் வாபஸ் பெறவில்லை என்றால் மேலும் விபரீதத்தை இது ஏற்படுத்தும் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் மாணவர்கள், முதியவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News