மிகப்பெரும் ஆபத்தை சந்திக்கப்போகும் அறிவாலய அரசு.... நெருங்கிய முடிவு....!
By : Sushmitha
கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் போக்குவரத்து கழகங்கள்
தமிழக போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவிற்கும் இடையேயான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணியில் மரணம் அடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், என ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு, ஏ ஐ டி யு சி, ஐ என் டி யு சி மற்றும் டிடிஎஸ்எப் உள்ளிட்ட ஆறு போக்குவரத்து சங்கங்கள் ஜனவரி ஒன்பதாம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது.
அதனை அடுத்து சமரச பேச்சுவார்த்தையும் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றதும் தோல்வியில் முடிந்துள்ளது. அதாவது அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சி ஐ டி யு தலைவர் சௌந்தரராஜன், எங்கள் கோரிக்கைகள் எதையும் இந்த அரசு ஏற்கப் போவதாக இல்லை பொங்கலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்! மேலும் ஓய்வு பெற்ற 96 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது அதை மட்டுமாவது முதலில் நிறைவேற்றுங்கள் மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறினாலும் அதற்கும் திமுக அரசு முடியாது என்கிறது இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறுவதற்கு எந்த உரிமையும் திமுக அரசுக்கு கிடையாது என கூறியிருந்தார். இதனால் பகுதிகளில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோசமான நிதிநிலையை போக்குவரத்து கழகங்கள் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது போக்குவரத்து ஊழியர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமை சரியான பிறகு நிறைவேற்றி தருவதாக கூறுகிறது ஆனால் போக்குவரத்து கழகங்களில் நிதி நிலைமையை பார்க்கும் பொழுது இவை அனைத்தும் எப்பொழுது சரியாகி! எப்பொழுது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற ஒரு வியப்பும் சாத்தியமில்லா எண்ணமும் ஏழும் அளவிற்கு போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை மோசமாக உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு இருந்த வெள்ளை அறிக்கையில் மாநில போக்குவரத்து கழகங்களின் ஆண்டு நஷ்டமாக 2011 முதல் 2012 வரை ₹1,791 கோடியிலிருந்து 2020 - 21 வரை ₹7,984 கோடியாகவும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் மொத்த நஷ்டமாக 2011 முதல் 12 வரை ₹8,761 கோடியிலிருந்து 2020 முதல் 21 வரை ரூபாய் 42,143 கோடியாகவும், மாநில போக்குவரத்து கழகங்களின் கடன் சுமையும் 2020 முதல் 21 ஆம் ஆண்டில் 31,035 கோடி அதிகமாகி உள்ளதாகவும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள செலவும் 2011 முதல் 12 ரூபாய் 3757 கோடியிலிருந்து 2020 முதல் 21 ஆம் ஆண்டில் 8,235 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாகவும், 2011 முதல் 12 ஆம் ஆண்டிலிருந்து 2020 முதல் 21 ஆம் ஆண்டில் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த ஒரு நிலையில் போராட்டம் வேறு அறிவிக்கப்பட்டு தீவிரமாகி வருகிறது! அன்றே பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முப்பதாயிரம் கோடி ரூபாய்யை முதல்வரின் மகனும் மருமகனும் சேர்த்து வைத்துள்ளனர் என்று கூறியதற்காக அவரின் அமைச்சர் பதவியை மாற்றினார்கள்! அப்படி பி டி ஆரின் பதவியை மாற்றியதற்கான வினையை திமுக அரசு தற்போது அனுபவித்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.