Kathir News
Begin typing your search above and press return to search.

ஜீயரே போராட்டத்துல இறங்கிட்டாரே....! என்ன நடக்கிறது தமிழகத்தில்...?

ஜீயரே போராட்டத்துல இறங்கிட்டாரே....! என்ன நடக்கிறது தமிழகத்தில்...?

SushmithaBy : Sushmitha

  |  12 Jan 2024 1:11 PM GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள கோயில்களுக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பொதுவாக கோவிலுக்கு கட்டணம் வசூலிப்பது இந்த சமய அறநிலையத்துறையாக இருக்கும் அல்லது கோவில் நிர்வாகமாக இருக்கும் இதற்கிடையில் வனத்துறை தற்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் மலை கோவிலுக்கு கட்டணம் வசூலித்தது இதுவரை எங்கும் நடைபெறாத போன்ற செய்தியாக பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜர் வனத்துறை கட்டணம் வசூலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ சடகோப ராமானுஜ ஐயர், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூலித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எந்த அடிப்படையில் வனத்துறை இந்த கோவில்களுக்கு செல்லும் பக்தர்களிடம் கட்டணம் வசூலித்தது என்று தெரியவில்லை இதுவரை எத்தனை பக்தர்களிடம் எவ்வளவு ரூபாய் வசூலித்தது என்றும் தெரியவில்லை! ஆனால் இதுவரை பக்தர்களிடம் வசூலித்த பணம் எவ்வளவு அது என்ன ஆனது என்பது குறித்த முழு தகவலையும் அரசுக்கு வனத்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.


மேலும் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு பகுதியில் அமைந்திருக்கும் கோவில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமானது. கிட்டத்தட்ட 250 ஏக்கருக்கு அதிகமாக நிலம் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூலித்தது தவறாக இருக்கும் நிலையில் அந்த இடத்தில் வாகனம் நிறுத்துவதற்கு அறநிலைத்துறை வசூலிக்கும் கட்டணத்தையும் தங்களுக்கு தர வேண்டும் என்று வனத்துறை கேட்கிறது! முதல்வரால் கூட அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒன்றை கேட்க முடியாதபடி சட்டம் உள்ளது, ஆனால் அறநிலையத்துறை பணத்தை வனத்துறை கேட்பது எந்த விதத்தில் நியாயம் மாபெரும் குற்றச் செயலாகும்! வனத்துறைக்காகவே சுற்றுச்சூழலை பராமரிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நிதி வழங்கி வருகின்றனர் அந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை.


பெரும்பாலான மக்கள் தங்கள் குலதெய்வங்களை வனப்பகுதியிலே வழங்கி வருகின்றனர் அவர்களே முன் காலங்களில் வனங்களை பாதுகாத்து வந்தனர் ஆனால் அவர்கள் தற்போது அந்த வனப்பகுதிக்கு செல்வதற்கு கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் எந்த ஒரு பால வசதி சாலை வசதி என எதுவும் இல்லாமல் கட்டணம் செலுத்தும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இது இந்து மக்களை கோவிலில் வழிபாடு செய்யவிடாமல் வனத்துறை செய்யும் சதி திட்டம் போல் தெரிகிறது என்றும் தெரிவித்தார், அதோடு இனி செண்பகத் தோப்பு செல்லும் பக்தர்களிடம் வனத்துறை கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பணவசூலில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மக்களை திரட்டி வனத்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்பு வரை ஜீயர்கள் போராட்டத்தில் இறங்கியதே இல்லை ஆனால் தற்பொழுது ஜீயரே போராட்டத்தில் இறங்கி இருப்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News