அவரு கிடக்குறாரு நீங்க கிண்டுங்க பொங்கலை...! உதைண்ணாவிற்கு பொங்கல் வைத்த திமுக எம்.எல்.ஏ....!
By : Sushmitha
கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்திற்கு எதிராக பேசியதோடு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். அதிலும் குறிப்பாக அந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி, இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று வைத்துள்ளீர்கள் இதற்கு எனது பாராட்டுகள் ஏனென்றால் சிலவற்றை நாம் எதிர்க்கக் கூடாது ஒழித்து தான் ஆக வேண்டும் டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை நாம் எதிர்க்க கூடாது ஒழிக்கத்தான் வேண்டும் அதேபோன்றுதான் சனாதனமும் சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம் என்று பேசினார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு பலதரப்பிலிருந்து எதிர்ப்புகளை பெற்றது மேலும் இவரது பேச்சு சட்ட விரோதமானது என்றும் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பதியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து திமுக எம்பி ஆ ராசா சனாதனத்தை எச்ஐவியுடன் ஒப்பிட்டு பேசியதும் பல அமைப்புகள் மத்தியில் கண்டனங்களை பெற்றது. அதுமட்டுமின்றி உதயநிதியின் சனாதன பேச்சு IND கூட்டணி வரையிலும் எதிரொலித்தது! எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி தலைவர்கள் மத்தியிலும் உதயநிதியின் பேச்சு எதிர்ப்பை பெற்றது.
அதாவது IND கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி உதயநிதியின் சனாதனகருத்திற்கு, தமிழக மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு ஒவ்வொரு மதத்திற்கும் என உணர்வுகள் உண்டு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு ஜனநாயக நாடு அதே நேரத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம்முடைய துவக்கமாக அமைந்தது. நான் சனாதனத்தை மதிக்கிறேன் எந்த பிரிவினரையும் புண்படுத்தக் கூடிய எந்த ஒரு செயலிலும் நாம் ஈடுபடக் கூடாது. சிறிய பிரிவாக இருந்தாலும் சரி பெரிய பிரிவாக இருந்தாலும் சரி எந்த பிரிவையும் புண்படுத்தக்கூடிய எதையும் சொல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்ந்து ஐந்து மாநிலங்களின் தேர்தல் நடைபெற்றதால் பாஜக தரப்பில் உதயநிதியின் சனாதனம் பேச்சு குறித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக ஐந்து மாநிலங்களின் தேர்தலில் IND கூட்டணி தோல்வியை சந்தித்ததும் அரசியல் களத்தை சூடேற்றியது! ஏனென்றால் இந்தி கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு பார்க்கப்பட்டதோடு திமுகவை அக்கூட்டத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்கள் IND கூட்டணியின் மற்ற முக்கிய கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற IND கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் இதற்கான சமரச பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் அரசியல் விமர்சகர்களால் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சனாதன பேச்சு குறித்து திமுகவினர் பேசப்போவதில்லை என்றும் பேசினால் அது வேலைக்காகாது என தற்பொழுது திமுகவினரை முடிவெடுத்து விட்டனர். இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்திருந்த சனாதன பொங்கல் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
இது குறித்த வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தலைமை சனாதனத்தை எதிர்க்கிறேன் என்று கூறினாலும் கட்சியினர் சனாதனத்தின் விவகாரத்தில் உதயநிதியின் பேச்சை கேட்டால் வேலைக்காகாது என இனி நம் வேலையை பார்க்க வேண்டியது தான் என்ற நிலைப்பாட்டை திமுகவினர் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.