இலங்கைக்கு கடத்தப்படும் மாத்திரைகள்..! மூளைச்சலவைக்கு உட்படுத்தப்படும் இஸ்லாமிய இளைஞர்கள்! வெளியான பரபரப்பு தகவல்!
By : Sushmitha
கடந்த மாதத்தில் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த போதைப் பொருட்கள் டெல்லியில் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதோடு அந்த போதை பொருள் கடத்தல் கும்பலும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஜாஃபர் சாதிக்கும் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இருப்பினும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் போதைப் பொருட்கள் அதிகமாக போலீசார் சோதனையில் பிடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்து பொருட்கள் அதிகமாக கடத்தப்படுவதாக போதை தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பிடிபட்ட 5 லட்ச மாத்திரைகள்:
கடந்த 23ஆம் தேதி ராமேஸ்வரத்தில் என்.ஐ.பி., என்ற போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது கார் ஒன்றில் நரம்பு கோளாறுக்கு பயன்படுத்தப்படும்,10 பெட்டிகளில் 5 லட்சம் பிரகபாலின் என்ற மாத்திரைகள் இருந்துள்ளது. மேலும் இந்த மாத்திரைகளை எடுத்து வந்த காரானது வேதாளை பகுதியைச் சேர்ந்த ஜெய்னுதீன் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி இந்த மாதத்தின் ஐந்தாம் தேதி அன்றே 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததனையும், 32 லட்சம் ரூபாய் மதிப்பில்லான மருந்து மாத்திரைகளையும் தூத்துக்குடியில் என்.ஐ.பி., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காயல்பட்டினம் வழியாக நடக்கும் கடத்தல்:
கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சென்னையில் மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி காயல்பட்டிணம் கடற்கரை வழியாக இலங்கைக்கு அவர்கள் கடத்த முயன்றதும் தெரியவந்துள்ளது. இதைத் தவிர, ஹெராயின், கஞ்சா மற்றும் பீடி இலைகள் தான் அதிகமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வந்துள்ளது ஆனால் தற்பொழுது மருந்து மாத்திரைகள் அதிக எண்ணிக்கையில் பிடிபடுவது அதிர்ச்சி அளிக்கிறதாக என்.ஐ.பி., அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தல்:
இதனைத் தொடர்ந்து, இலங்கையின் நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து படகுகள் மூலம் ஏராளமான பொருட்கள் கடத்தப்படுகிறது. சமீபத்தில் பிடிபட்ட பிரகபாலின் மாத்திரைகள் நரம்பு ஊட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும் வேறு சில மருந்துகளுடன் இதனை எடுத்துக் கொள்ளும் போது மயக்க நிலை அல்லது மூளையின் செயல் திறனில் மாற்றம் ஏற்படும் என்றும், இங்கு முப்பது ரூபாய்க்கு ஒரு மாத்திரை விற்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் இந்த விலையை பல மடங்கு உயர்த்தி விற்று அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள் என்றும் என்.ஐ.பி., அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இது போன்ற மாத்திரைகள் அடுத்தடுத்து பிடிபட்டது. ஆனால் ராமேஸ்வரத்தில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு இதுபோன்று கடத்தல் நடப்பதில்லை. அதே சமயத்தில் பெரிய பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு குறைவாக இருப்பதால் அங்கு அதிகமாக கடத்தல் நடக்கிறது என்றும் அங்கும் ரோந்து பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டு வருகிறது என்றும் என்.ஐ.பி., தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளான காயல்பட்டிணம், கீழக்கரை, இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து தான் சில இஸ்லாமிய இளைஞர்கள் பணத்திற்காக மூளைசலவை செய்யப்பட்டு அதிகமாக போதை பொருள் கடத்தல், தடைச்செய்யப்பட்ட மற்ற பொருட்களை இலங்கைக்கு கடத்துவதாகவும் சில தகவல்கள் கிடைத்திருப்பது என்.ஐ.பி., அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.