தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க என்ன செய்தது? தமிழக ரயில்வேக்கு மட்டும் இவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளதா?
By : Bharathi Latha
மோடி அரசு கொடுக்கும் முக்கியத்துவம்:
ரயில்வே துறை பால் சுரக்கும் பசுவாகவே முந்தைய ஆட்சிகளில் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், ரயில்வே துறையில் ஒட்டுமொத்தமாக சீர்திருத்த மேம்பாடுகள் செய்து, அதன் வாயிலாக நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டது. கடந்த, 10 ஆண்டுகளில், ரயில்வேயில் பல புதிய திட்டங்களுடன், முந்தைய திட்டங்களை வேகப்படுத்துவது, விரிவு படுத்துவது, நவீனமயமாக்குவது போன்றவை மேற்கொள்ளப்பட்டன. தற்போது நாளொன்றுக்கு, 4 கி.மீ. துாரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 5,300 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளில், 31,000 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப் பட்டது. இது ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள மொத்த ரயில் பாதையைவிட அதிகமாகும் என்பது உங்களுக்கு தெரியமா?
கடந்த, 10 ஆண்டுகளில், 44,000 கி.மீ., துார ரயில்பாதை மின்மயமாக்கப் பட்டது. அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், 20,000 கி.மீ., துாரத்துக்கே மின்மயமாக்கப்பட்டது. விரைவில் மின்மயமாக்குவதில், 100 சதவீதத்தை எட்ட உள்ளது மோடி அரசு. ரயில் நிலையங்களை புதுப்பிப்பது, உள்நாட்டிலேயே ரயில் பெட்டிகள் தயாரிப்பது ஆகியவற்றுக்கு மோடி அரசு முக்கியத்துவம் தருகிறது. தற்போது, 300 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 'வந்தே பாரத், புல்லட் ரயில்' என, அதிகவேக ரயில் சேவைகள் சாத்தியமாகியுள்ளன.
ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு:
இந்திய ரயில்வேயை தற்சார்பு இந்தியாவின் புதிய ஊடகமாக மாற்றி வருகிறது மோடி அரசு. நமது விஸ்வகர்மா நண்பர்கள், கைவினைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உள்ளூர் தயாரிப்புகள் இப்போது ரயில் நிலையங்களில் விற்கப்படும். இதுவரை, ரயில் நிலையங்களில் "ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு" என்ற 1500 அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை சகோதர சகோதரிகள் பா.ஜ.க ஆட்சியின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
2,000 ரயில்வே திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது:
பிப்ரவரி 28, 2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடி கூறும் போது, ரயில் மற்றும் சாலைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களால் தென் தமிழகம் - கேரளா இடையேயான இணைப்பு மேலும் சிறப்பாகும். 75 கலங்கரை விளக்கங்கள் இந்தியாவின் சுற்றுலா மையங்களாக மாறும். தமிழகத்தில் 1300 கிமீ நீளத்தில் ரயில் பாதை கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. 2000 கி.மீ ரயில் பாதை மின்மயமாக்கப் பட்டுள்ளன. மக்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் படுகின்றன. சாலை கட்டமைப்பில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நேரத்தில் 2,000 ரயில்வே திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது புதிய இந்தியாவின் அடையாளம் என்றார்.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலும் திருநெல்வேலி, தருமபுரி, ராமநாதபுரம், பொள்ளாச்சி, தூத்துக்குடி, சென்னை கிண்டி, பரங்கிமலை, மாம்பலம், கடற்கரை உள்ளிட்ட 34 ரயில்நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக சென்னை பரங்கி மலையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளதாக கூறினார். இதே போன்று கோவை மேட்டுப்பாளையம் ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
ரயில்வே கோட்டம் வாரியாக நிதி ஒதுக்கீடு:
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களை மேம்படுத்த 'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ரயில் நிலையங்களில் 'ஒரு ஸ்டேஷன்; ஒரு தயாரிப்பு' திட்டத்தின் மூலம் உள்ளூா் தயாரிப்புகளை பிரபலப்படுத்தவும் விற்பனை செய்யவும் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படும். தமிழ்நாட்டின் 34 ரயில் நிலையங்களும் அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. தெற்கு ரயில்வே சாா்பில் தமிழ்நாட்டில் 32 ரயில் நிலையங்களும், தென்மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஒசூா் ஆகிய 2 ரயில் நிலையங்களும் என மேம்படுத்தப்படும். சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட இருக்கின்றன. ரூ.270 கோடியில் திருநெல்வேலி ரயில் நிலையமும், ரூ.118 கோடியில் கும்பகோணம் ரயில் நிலையமும் ஒரே கட்டமாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
சென்னை கோட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை ரூ. 14.58 கோடி, கிண்டி ரூ. 13.50 கோடி, அம்பத்தூா் ரூ. 21.57 கோடி, மாம்பலம் ரூ. 14.70 சென்னை பூங்கா ரூ. 10.68 கோடி, பரங்கிமலை ரூ. 14.15 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன. மதுரை கோட்டத்தில் பழனி ரூ. 13.88 கோடி, திருச்செந்தூா் ரூ. 17.50 கோடி, அம்பாசமுத்திரம் ரூ. 10.81 கோடி, காரைக்குடி ரூ. 13.91 கோடி, கோவில்பட்டி ரூ. 12.72 கோடி, மணப்பாறை ரூ. 10.11 கோடி, புதுக்கோட்டை ரூ. 14.48 கோடி, ராமநாதபுரம் ரூ. 11.95 கோடி, ராஜபாளையம் ரூ. 11.70 கோடி, பரமக்குடி ரூ. 10.56 கோடி, திண்டுக்கல் ரூ. 22.85 கோடி, தூத்துக்குடி ரூ. 12.37 கோடி, திருநெல்வேலி ரூ. 270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சிக்கு ரூ. 10.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி கோட்டத்தில் திருவண்ணாமலை ரூ. 8.27 கோடி, திருவாரூா் ரூ. 8.69 கோடி, விருத்தாசலம் ரூ. 9.17 கோடி, கும்பகோணம் ரூ. 118 கோடி மேம்பாட்டு நிதியைப் பெறும். சேலம் கோட்டத்தில் ஈரோடு ரூ. 38.09 கோடி, மேட்டுப்பாளையம் ரூ. 14.81 கோடி, மொரப்பூா் ரூ. 12.18 கோடி, பொம்மிடி ரூ. 11.54 கோடி, திருப்பத்தூா் ரூ. 13.88 கோடி, சின்ன சேலம் ரூ. 11.85 கோடி, நாமக்கல் ரூ. 13.28 கோடி, கோவை வடக்கு ரூ. 11.55 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.
Input & Image courtesy: News & Asianetnews