Kathir News
Begin typing your search above and press return to search.

தொடரும் சர்ச்சை.. ஜெயலலிதா அவர்கள் சிறந்த இந்துத்துவவாதி.. அண்ணாமலை கொடுத்த நச் விளக்கம்..

தொடரும் சர்ச்சை.. ஜெயலலிதா அவர்கள் சிறந்த இந்துத்துவவாதி.. அண்ணாமலை கொடுத்த நச் விளக்கம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 May 2024 2:08 PM GMT

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஒரு சிறந்த இந்துத்துவவாதி:

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை ஒரு சிறந்த இந்துத்துவவாதி என்று நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? இந்துத்துவா என்பது மதம் சார்ந்தது அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை. இந்துத்துவா குறித்து அ.தி.மு.கவிடன் விவாதம் செய்ய பா.ஜ.க தயாராக உள்ளது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு இந்துத்துவச் சித்தாந்தத்தில் இருந்து அ.தி.மு.க விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜ.க தற்போது நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவவாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது என பேசியிருந்தார்.


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த தெளிவான விளக்கம்:

மக்களவை தேர்தலில் 6ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக டெல்லியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய அவர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை பற்றி கூறிய கருத்து தான் தற்போது தமிழக அரசியலில் பேச்சு பொருளாகி இருக்கிறது. குறிப்பாக அதிமுக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சிறந்த இந்துத்துவவாதி என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்து தான் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி இருக்கிறது. மேலும் அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்தை பல்வேறு அதிமுக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர் கூறிய அர்த்தத்தை வேறு விதமாக புரிந்து கொண்டு தங்களுடைய கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள், "நான் கூறியது இதை வைத்து தான். இந்த நோக்கத்தில் மட்டும் தான் நான் அப்படிப்பட்ட கருத்தை தெரிவித்தேன்" என்று தெளிவாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வீடியோவுடன் பதிவிட்டு இருக்கிறார்.



இது தொடர்பாக விளக்கமளித்த அண்ணாமலை,"தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களை ஒரு சிறந்த ஹிந்துத்துவவாதி என்று நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? கரசேவை குறித்து பேசிய ஜெயலலிதா அது தவறு இல்லை எனக் கூறியிருக்கிறார். மேலும் பா.ஜ.க ராமர் கோவில் கட்டுவதில் உறுதியாக இருந்தது. அம்மையார் அவர்களும் ஆதரித்ததாகவும், இங்கு இந்தியாவில் ராமர் கோயில் கட்டக்கூடாது என்றால், பாகிஸ்தானிலா கட்டுவது? என்று ஜெயலலிதா அவர்கள் கூறிய கருத்துக்களையும் முன்வைத்து இருந்தார். இந்துத்வா என்பது மதம் சார்ந்தது அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. ஜெயலலிதா இந்துத்துவாவாதி இல்லை எனக் கூறும் அதிமுகவினர் என்னுடன் விவாதம் நடத்த தயாரா?" எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.


ராமர் கோவிலை கட்ட ஆதரித்த முதல் அரசியல்வாதி:

பா.ஜ.க தலைவர்களைத் தவிர்த்து, அயோத்தியில் ராமர் கோவிலை ஆதரித்த முதல் அரசியல்வாதி அவர் எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2002-03-இல் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததைச் சுட்டிக்காட்டினார். பின் 1992-ஆம் ஆண்டு நவம்பரில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய செல்வி ஜெ. ஜெயலலிதா, "கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்தத் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு எடுக்க வேண்டியுள்ளது. கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.


பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து:

"2001- 2006 ஆம் ஆண்டுகளில் அவரது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் அவரை இந்துத்துவச் சார்புள்ளவராகவே சுட்டிக்காட்டின. ஜெயலலிதா இந்து மதத்தின் மீது பெரும் பற்று கொண்டவர் என்பதையே அண்ணாமலை சொல்லியிருக்கிறார். அதில் தவறேதும் இல்லை. ஆகவே அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு சரியான கருத்து" என்று பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி கூறி உள்ளார்.


இந்து மதத்தின் மீது மிகப் பெரிய பற்று வைத்திருந்தவர் ஜெயலலிதா:

"இந்துத்துவம் என்பது வாழும் முறை என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் ஜெயலலிதாவை இந்துத்துவவாதி எனச் சொல்கிறோம். ராமர் கோவிலை இங்கே கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும் என்று கேட்டவர். கரசேவைக்காக பல லட்சம் கையெழுத்துக்களை பெற்று அனுப்பியவர். ஜெயலலிதா அம்மையாரை பிற மதங்களுக்கு எதிரானவர் எனச் சொல்லவில்லை. இந்து மதத்தின் மீது மிகப் பெரிய பற்று வைத்திருந்தவர் என்ற அர்த்தத்தில்தான் இதைச் சொல்கிறோம். அவர் உயிரோடு இருந்திருந்தால் அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் கோவிலுக்குச் சென்றிருப்பார். ஆனால் SDPI கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் ராமர் கோவிலுக்கு சென்று வராமலும், இந்துத்துவாவிற்கு எதிராகவும் அதிமுக தலைவர்கள் பேசி வருகின்றனர்.இது செல்வி.ஜெயலலிதா அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அண்ணாமலை கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News