வெற்றி நடை போடும் பா.ஜ.க.. முன்னிலையில் உள்ள மாநிலங்கள்..
By : Bharathi Latha
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் மாநில சமீபத்திய முடிவுகளின் படி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆதரவுடைய இந்தியக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பல்வேறு கட்சிகளின் ஆதரவு காரணமாக தான் இந்தியா கூட்டணி இந்த ஒரு நிலைமையை அடைந்து இருப்பதாகவும் ஊடக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி காங்கிரஸ் கூட்டணி பிரிந்தால் குறைவான இடங்களை பெறும்.
BJP தலைமையிலான NDA மத்திய பிரதேசத்தின் அனைத்து 29 இடங்களிலும், கர்நாடகாவில் உள்ள 28 இடங்களில் 19 இடங்களிலும், குஜராத்தில் 26 இடங்களில் 25 இடங்களிலும், பீகாரில் 40 இடங்களில் 31 இடங்களிலும், 11 இடங்களில் முன்னணியில் உள்ளது. சத்தீஸ்கரில் மற்றும் டெல்லியில் உள்ள 7ல் 7 இடங்கள் முன்னணியில் உள்ளது.
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பா.ஜ.க சார்பில் களமிறங்கி உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இருக்கிறார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்தார். குறிப்பாக முதல் 4 சுற்று முடிவுகளிலும் பின்னடைவை சந்தித்த அவர் பின்பு எதிர்பாராத வெற்றியை பெற்று இருக்கிறார். அதைத் தொடர்ந்து அதிக ஓட்டுகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை கண்டார்.
Input & Image courtesy: News