திமுக ஆட்சியில் தமிழகம் எங்கும் ஆறாய் ஓடும் கள்ளச்சாராயம்: திருச்சி, புதுக்கோட்டையிலும் கள்ளச்சாராயம்:
By : Sushmitha
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய சோதனைகளை தமிழக போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே கருக்காக்குறிச்சி என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனை அடுத்து அங்கு விரைந்த போலீசார் கருக்காக்குறிச்சி கிராமம் முழுவதும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏ.டி.எஸ்.பி சுப்பையா தலைமையிலான தனிப்படை போலீசார், அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் காட்டுப் பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி திருச்சி மாவட்டத்திலும் ஸ்பிரிட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதுகுறித்து நேற்று திருச்சியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமான சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மெத்தனால் தொழிற்சாலைகளில் அதிகமாக பயன்படுத்தக்கூடியது. அதனால் தொழிற்சாலைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மருத்துவமனைகள் என்.டி.ஆர்.சி மூலமே ஸ்பிரிட் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு தங்களிடம் ஸ்பிரிட் இருப்பு குறித்த தகவல்களை மேலதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், இதை தவிர ஸ்பிரிட் விற்பனை குறித்த புகார்கள் எழுந்தாலோ அல்லது ஏதேனும் தவறு இருப்பது தெரிய வந்தாலோ அந்த மருத்துவமனை மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சி மாவட்டம் பச்சைமலையில் சாராயம் விற்பனை செய்யப்படுவது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது. அதனால் அங்கு 20 பேர் கொண்ட குழு சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டத்திற்கு புறமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கை 50 -தை கடந்த பின் தான் திமுக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக ஏற்கனவே தகவல் வந்ததாக கூறும் அதிகாரிகள் ஏன் அன்றே நடவடிக்கை எடுக்கவில்லை?
இதே போல் கொங்கு பகுதியிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் உள்ளது.அதனை போன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலும்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தகவல் உள்ளது.
தேனி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மதுரைக்குள் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் உள்ளது.தேனி மலை கிராமங்களில் கஞ்சா உற்பத்தி செய்யப்பட்டு மதுரைக்குள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதாக ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். கிராமங்கள் தோறும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. புள்ளிங்கோ எனப்படும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்கப்படுகிறது.
மரணங்கள் நிகழ்ந்தால் தான் அரசு துரித நடவடிக்கை எடுக்குமா? ஏன் இதுவரை திறனற்ற திமுக அரசு தூங்கி கொண்டு இருந்ததா? திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் கொலை,கொள்ளை, ரவுடிசம், வழிப்பறி, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, போதைப்பொருள், தீவிரவாதம், கட்டப்பஞ்சாயத்து,நில அபகரிப்பு போன்றவை அதிகரித்து விடும் என்று முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் சொன்னதை இன்றைய இளைய தலைமுறையினர் நேரடியாக பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் சட்டஒழுங்கு துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் அறிக்கை விடுவதில் நியாயம் உள்ளது தானே என்று பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.