Kathir News
Begin typing your search above and press return to search.

நாளந்தாவை மீட்டெடுத்த பிரதமர் மோடி! நாளந்தாவின் முழு கதையும் சிறப்பும்!

நாளந்தாவை மீட்டெடுத்த பிரதமர் மோடி! நாளந்தாவின் முழு கதையும் சிறப்பும்!
X

SushmithaBy : Sushmitha

  |  28 Jun 2024 5:00 PM IST

கடந்த வாரம் ரூ.1749 கோடி மதிப்பீட்டில் நம் பிரதமர் நரேந்திர மோடி பிஹாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் திறந்து வைத்தார். இதில் என்ன சிறப்பம்சம் இருக்கிறது? இது ஒரு சாதாரண நிகழ்வு தானே என்று பார்க்கிறீர்களா ? இன்று தான் ஆக்ஸ்போர்ட் , கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைகழகங்கள் மிகவும் பிரசித்தி .


உலகின் முதல் பல்கலைகழகம்:

ஆனால் உலகத்தில் முதல் பல்கலைக்கழகம் எது தெரியுமா ? நம் பாரத நாட்டில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம். பீகாரில் உள்ள நாளந்தா என்ற இடத்தில் கி.பி. 427 ஆம் வருடம் குமாரகுப்தர் என்ற மன்னரால் தொடங்கப்பட்டது. ஐரோப்ப நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து மாணவர்கள் இங்கே வந்து தங்கி கல்வி பயின்றனர். மருத்துவம் , வரலாறு , வானவியல் இயற்பியல் , கணிதம் போன்ற பல துறைகளில் சிறந்த கல்வி இங்கே இலவசமாக கிடைத்தது. கணிதத்தில் சிறந்து விளங்கிய ஆரியபட்டர் மற்றும் பிரசித்தி பெற்ற மன்னர்களான ஹர்ஷவர்த்தன் தர்மபால் போன்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களே.

20 மாட்டு வண்டியில் புத்தகத்தை எடுத்துச் சென்ற சீன பயணி:

பிரசித்தி பெற்ற சீன பயணி ஹீவான் ட்ஸாங்க் தனது புத்தகத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தை பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதாவது தான் இதுவரை பார்த்ததிலேயே மிக அழகான பல்கலைக்கழகம் இது. அங்கே ஒன்பது மாடியில் 90 லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகம் இருந்தது. பத்தாயிரம் மாணவர்களுக்கு 1500 பேராசிரியர்கள் இங்கு கல்வி போதித்து வந்தனர் என்று எழுதி இருக்கிறார். மேலும் அவர் திரும்பி சீன தேசம் போகும் பொழுது 20 மாட்டு வண்டிகளில் புத்தகங்களை மட்டுமே எடுத்து சென்றார்.

நாளந்தாவை அழித்த மிருகம்:

உலகத்திற்கு ஒளிவிளக்காக திகழ்ந்த பாரதத்தின் ஒளிவிளக்கு நாளந்தா பல்கலைக்கழகம். இப்பேர்ப்பட்ட புகழ் கொண்ட இந்த பல்கலைக்கழகத்தை ஒரு மிருகம் அழித்து ஒழித்தது. முஹம்மத் பக்தியார் கில்ஜி என்று அரசன் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய நாட்டை படை எடுத்து வந்தான். மதவெறி கொண்டு ஹிந்துக்களையும் புத்தர்களையும் கொன்றொழித்து வந்தான். இதற்கு காரணம் குறித்து பார்க்கும் பொழுது, அப்பொழுது அவன் நோய்வாய்ப்பட்டான். பல பேர் முயற்சித்தும் அவனின் நோயை குணப்படுத்த முடியவில்லை. அப்பொழுது அவனின் பணியாட்கள் நாளந்தா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆச்சாரியா ராஹுல் ஸ்ரீ பத்ரா வை அணுகினர். ஆனால் பக்தியார் கில்ஜி யோ போயும் போய் ஒரு இந்தியனின் கையில் இருந்து தான் மருந்து வாங்க முடியாது என சொல்லிவிட்டார்.

அதனால் ஆச்சாரிய ராஹுல் ஸ்ரீபத்ரர் குர்ஆனை பக்தியார் கில்ஜிக்கு தந்தார். அந்தக் குர்ஆனின் பக்கங்களில் மருந்துகளை தடவி இருந்தார். அதை படிக்க படிக்க மன்னர் குணமாகினார். ஒரு நியாயமான மன்னராக இருந்தால் அவருக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் மதவெறி முற்றி பொறாமையில் இருந்த பக்தியார் கில்ஜி ஹிந்துக்களுக்கு இவ்வளவு அறிவாற்றலா என்று யோசித்து ஒரு விபரீதமான முடிவு எடுத்தார். தன்னை குணப்படுத்திய வைத்தியர் நாளந்தா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் என்று தெரிந்த உடனே அந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை 1193ம் ஆண்டு முழுவதுமாக எரித்தார்.

ஆறு மாதங்களாக கொழுந்துவிட்டு எரிந்த நாளந்தா:

அங்கே இருந்த பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரோடு எரித்தார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகத்தை எரித்த நெருப்பு 6 மாதங்களாக தொடர்ச்சியாக எரிந்து கொண்டு இருந்தது. இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அங்கு எவ்வளவு புத்தகங்கள் இருந்தன என்பதை!

புத்தகங்களை சரஸ்வதி தேவியாக மதிப்பவர்கள் நாம். தெரியாமல் புத்தகத்தை மிதித்தாலே அதை தொட்டுக் கும்பிடும் வழக்கம் நம்முடையது. ஆனால் இந்த மத வெறியன் பொறாமை கொண்டு மொத்த பல்கலைக்கழத்தையும் எரித்தான். இதோடு நிற்கவில்லை அருகில் உள்ள விக்ரமசிலா மற்றும் ஓதந்தபுரி பல்கலைக்கழத்தையும் எதிர்த்தான்.


நாளந்தாவை அழித்தவன் பெயரில் ரயில் நிலையம்:

ஒரு நாகரீகத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனின் புத்தகங்கள் மற்றும் ஞானத்தை அழிக்க வேண்டும் என்ற யுக்தியை சரியாக பயன்படுத்தினான். இதில் கொடுமை என்ன தெரியுமா நாளந்தா பல்கலைகழகத்தின் அடுத்து உள்ள ரயில்வே நிலையத்தின் பெயர் பக்தியார்பூர் ரயில் நிலையம். இன்றும் அதன் பெயர் மாற்றப்படவில்லை. யார் நாளந்தா பல்கலைக்கழகத்தை எதிர்த்தானோ அவனின் பெயராலே அந்த ஊரின் ரயில் நிலையம் உள்ளது.


அப்துல் கலாம் கனவை உண்மையாக்கிய பிரதமர் மோடி:

இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று முதன் முதலில் முழங்கியவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவரின் கனவை நிறைவேற்றியுள்ளார் நம் பிரதமர் மோடி. அன்று பக்தியார் கில்ஜி அழித்த நாளந்தாபல்கலைக்கழகத்தை பிரதமர் மோடி மீண்டும் திறந்து வைத்துள்ளார். நம் பாரத நாட்டை மீண்டும் கல்வியில் உலகத்தின் தலைசிறந்த நாடாக மாற்றி காட்டுவார் மோடி. அதன் வெளிப்பாடே 17 நாடுகளின் தூதர்கள் முன்னிலையில் நாளந்தா பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டது. ஜி20 மாநாட்டில் கூட பல உலக தலைவர்களுக்கு இதைப் பற்றி விளக்கினார் பிரதமர் மோடி.


உலக அளவில் சிறக்கும் இந்திய பல்கலைக்கழகங்கள்:

அதுமட்டுமின்றி உலக தரத்தில் இந்தியாவின் உயர்கல்வியையும் பிரதமர் நரேந்திர மோடி சிறந்து விளங்க வைத்துள்ளார். அதாவது, கடந்த 2017 இல் டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசை பட்டியலில் 42 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றது. தற்போது 133 இந்திய பல்கலைக்கழகங்கள் 2025 ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்துள்ளது. உலக அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பெற்றுள்ளது என டைம்ஸ் மேல் படிப்பு தரவரிசை நிறுவன தலைமை அதிகாரி பில் பாட்டி தெரிவித்துள்ளார்.

நீங்கள் புத்தகத்தை எரிக்கலாம். ஆனால் அறிவாற்றலை ஒரு போதும் எரிக்க முடியாது. கல்வி தான் நம் முன்னேற்றத்திற்கு முதல் படி.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News