Kathir News
Begin typing your search above and press return to search.

நம் நாடு பாரத் என அழைக்கப்படுவதன் காரணமும், அதன் பின் உள்ள வரலாற்று பின்னணியும்

நம் நாடு பாரத் என அழைக்கப்படுவதன் காரணமும், அதன் பின் உள்ள வரலாற்று பின்னணியும்
X

SushmithaBy : Sushmitha

  |  10 July 2024 12:30 PM GMT

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜி 20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று நடத்தியதை ஒட்டி இந்திய குடியரசு தலைவர் அளித்த இரவு விருந்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ் கடிதத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற வார்த்தையை நாட்டின் பெயராக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு பாரத் என்று மட்டுமே அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. உண்மையில் பாரதம் என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து விரிவாக காணலாம்.

நமது நிலம் ஏன் பாரதம் என்று அழைக்கப்படுகிறது?

புராண காலத்தில் துஷ்யன் மன்னனின் மகனைத் தவிர தசரதனின் ஒரு மகனும் பரதன் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவர் நான்கு திசைகளிலும் நிலத்தை கைப்பற்றி ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். மேலும் இவர் கைப்பற்றிய அனைத்து நிலங்களுக்கும் பாரத் என்றே பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாரத் என்பது சொற்பிறப்பியல், இலக்கியம், உருவகம், இயற்பியல் மற்றும் உண்மை கண்ணோட்டங்களில் இருந்து பல அர்த்தங்களை குறிக்கிறது. அதாவது,

பா என்பது ஒளியைக் குறிக்கும் ஒரு எழுத்து, ஒளி அறிவு மற்றும் அறிவொளியுடன் இவை இணைக்கப்படுகிறது. மேலும் இந்த ஒளியானது அறிவு அல்லது அறிவோளியின் உள்ளார்ந்த பொருளையும் விளக்க, ரா என்ற எழுத்து வசீகரமானது, இனிமையானது என்பதை குறிக்கிறது. ஆகவே பாரதம் அல்லது பாரதி என்பது அறிவை ரசிப்பவர், அறிவை விரும்புபவர், அறிவை தேடுபவர் என்பதை விளக்குகிறது.


அதன் காரணமாகவே காலங்காலமாக இந்திய நாட்டில் உள்ள மக்கள் அறிவை தேடுபவர்களாகவும், ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அதனால்தான் பல பெரிய ஆளுமைகள் மற்றும் மன்னர்கள் இந்த நிலத்தை பாரதம் என்று அழைத்துள்ளனர்.

இயற்பியல் வழியிலான பாரதம்:

அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது பா என்பது சூரிய ஒளியை குறிக்கும். எனவே பாரதம் என்பது உலகில் சூரிய ஒளியை அனுபவிக்கும் நிலத்தையும் சூரியன் அளிக்கின்ற வரத்தையும் குறிக்கிறது. அதாவது பூமத்திய ரேகைக்கு அருகில் பல நிலங்கள் இருந்தாலும் நம் பாரத பூமிக்கு மட்டுமே சூரிய ஒளியால் அதிக நன்மைகள் கிடைத்து வருகிறது. நிலத்தின் குறுக்கே ஆறுகள், நல்ல மழைக்கு உதவும் கால நிலைகள், கோடை காலத்திற்குப் பிறகு போதுமான தண்ணீர் மற்றும் குளிர்ந்த வானிலை ஆகிய இரண்டால் நல்ல அறுவடைகளையும் நம் நிலத்தில் பயிரிட முடிகிறது.

நீண்ட காலம் அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ இல்லாமல் ஆண்டின் பெரும்பகுதிக்கு ஏற்றதாகவே இரண்டும் சமமான விகிதத்தில் நம் பாரத பூமியில் மட்டும் தான் கிடைக்கிறது. மேலும் உலகின் சூரிய சக்தியை பயன்படுத்துவதில் நாம் தற்பொழுது முன்னிலையும் வகித்து வருகிறோம்.

உலோக வழியில் பாரதம்:

உலகின் சிறந்த தரமான இரும்பு மற்றும் உயர் கார்பன் எஃகு, உலோகங்கள் மற்றும் உலோக கலவைகளை வார்ப்பதற்கும், செதுக்குவதற்கும் மற்றும் உருவாக்குவதற்கும், அழகான கலைப் பொருட்கள், கருவிகள், பாத்திரங்கள் போன்றவற்றின் வர்த்தகத்தில் நம் நிலம் பெரும் புகழையும், செல்வத்தையும் ஈட்டி வருகிறது. முன்னதாக இந்த நிலத்தில் உள்ள உலோகம் மற்றும் மண்பாண்டங்களை ப்ருகு என்ற ரிஷி ஒருவரால் கண்டறியப்பட்டிருக்கலாம். அதோடு அவரது பெயரின் bhr என்ற எழுத்துகள் நெருப்பின் பிரகாசத்தை குறிக்கிறது. இது மறுபடியும் பாரதத்தின் முதல் எழுத்தை பிரதிபலிக்கிறது.

பாரசீக மற்றும் அரபு உறுதிப்படுத்துதல்:

பல பாரசீக மற்றும் அரபு அறிஞர்களின் எழுத்துக்களிலும் அறிவியல், தத்துவம், மருத்துவம், வானியல், கணிதம், நுண்கலைகள், சிற்பம், உலோகங்கள், இசைக்கருவிகள் மற்றும் பலவற்றின் பூமியாக நம் நிலத்தை பாரதம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் பாரதம் என்ற இந்தப் பெயரை வேதம் மற்றும் புராணங்களில் காணலாம்.

ரிஷி விஸ்வாமித்திரர் தனது காலத்தின் நாகரீகத்தைப் பற்றி ருக் வேதத்தில், நம் நிலத்தில் வாழும் மக்களை எண். 3.53.12 இல் “ பாரதம் ஜனம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.


அதுமட்டுமின்றி பெரும்பாலான நாடுகள் அவர்களின் புவியியல் மற்றும் இடவியல் அம்சங்களை அடிப்படையாக வைத்து தனது நாட்டிற்கு பெயரை சூட்டுகிறார்கள். எனவே சூரிய ஒளியின் பிரகாசம் மற்றும் அவை எந்த அளவிற்கு நம் நாட்டிற்கு உதவுகிறது என்பதை வைத்து பார்க்கும் பொழுது பாரத் என்ற பெயரை தான் பண்டைய காலங்களில் நம் நாட்டிற்கு சூட்டி கொண்டுள்ளனர்.

அதன் வகையிலே நம் நாட்டின் பெயராக பாரத் இருந்ததையும், இருந்ததற்கான உள்ளார்ந்த அர்த்தத்தையும் உணர்ந்து தற்பொழுது இந்தியா எனவும், அதே சமயத்தில் பாரத் என்ற பெயரையும் பயன்படுத்தலாம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News