Kathir News
Begin typing your search above and press return to search.

ஹிந்தியை எதிர்த்த சூர்யா, பொது வேண்டுகோள் விடுத்த ஜோதிகா, அம்பானி வீட்டு திருமணத்தில்! வலுக்கும் விமர்சனங்கள்!

ஹிந்தியை எதிர்த்த சூர்யா, பொது வேண்டுகோள் விடுத்த ஜோதிகா, அம்பானி வீட்டு திருமணத்தில்! வலுக்கும் விமர்சனங்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  13 July 2024 2:55 PM GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, நடிகராகவும்; பிரபல ஜோடியாகவும் அறியப்படுகின்ற சூர்யா - ஜோதிகா திரை மற்றும் விருது மேடைகளில் சிலவற்றை கூறிவிட்டு, பிறகு தங்களது அப்பட்டமான பாசாங்கு தனத்தை முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொண்டு மீண்டும் காட்டியுள்ளனர்.

ஹிந்தி திணிப்பிற்கு எதிராக குரல்:

முதலில் 2019 ஆம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி முறையை சூர்யா எதிர்த்தார். ஆனால் தனது சொந்த படமான கங்குவான் திரைப்படத்தை விளம்பரப்படுத்த இந்தி உட்பட ஆறு மொழிகளில் தனது சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பின்தங்கிய கிராமப்புற மக்கள் மீது இந்தக் கொள்கை ஹிந்தியை திணிப்பதாக சூர்யா கடுமையாக வாதிட்டார். ஆனால் சூர்யாவின் இந்த பேச்சுக்குப் பிறகு சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகா மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மும்பையில் குடியேறினர்.

ஜெய் பீம் :

முன்னதாக சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தின் தமிழ் பதிப்பில், போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த பிரகாஷ்ராஜ் வட இந்தியர் ஹிந்தியில் பேசியதற்காக அவரை அறைந்து தமிழில் பேசும் படி கூறியிருப்பார். ஆனால் இந்த காட்சி ஜெய் பீம் படத்தின் ஹிந்தி பதிப்பில் நீக்கப்பட்டு இருக்கும். தமிழகத்தில் நிலவாத ஹிந்தி திணிப்பு என்ற பெயரை பயன்படுத்தி வெறுப்புணர்வை தூண்டுவதற்காகவே செயல்பட்டு வருகின்ற திமுக அரசை திருப்திப்படுத்துவதற்காகவே இந்த காட்சி தமிழில் காட்சிப்படுத்தப்பட்டது என பலர் இதனை சுட்டிக் காட்டி இருந்தனர்.

மருத்துவமனைக்கு செலவிடுங்கள் - ஜோதிகா :

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா "பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் உதய்பூரில் உள்ள அரண்மனைகள் அனைத்தும் மிக பிரம்மாண்டத்துடன் காட்சியளிக்கிறது. ஆனால் மருத்துவமனைகள் அப்படி இல்லை, கோவிலில் உண்டியலில் பணம் போடுவதற்கு பதிலாக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மக்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டும்" என தனது பொது வேண்டுகோளாக இந்த கருத்தை முன் வைத்தார்.

அம்பானி வீட்டு திருமணம்:


இந்த நிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் சூர்யா-ஜோதிகா கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானத்தை அடுத்து, திருமணத்திற்காக பணத்தை வீணாக்காமல் அவற்றை மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் செலவிடுவது குறித்து ஜோதிகா அம்பானிக்கு அறிவுரை கூறினாரா! என நெடிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Source : The Commune


Next Story
கதிர் தொகுப்பு
Trending News