Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக அரசுக்கு எதிராக கூட்டணி சுட்டுதலை தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி : இந்திய கம்யூனிஸ்ட், விசிக, கொமதேக, காங்கிரஸ் ஆகியவை எப்பொழுது திமுகவிற்கு எதிராக கூட்டணி சுட்டுதலை தொடங்கும்?

திமுக அரசுக்கு எதிராக கூட்டணி சுட்டுதலை தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி : இந்திய கம்யூனிஸ்ட், விசிக, கொமதேக, காங்கிரஸ் ஆகியவை எப்பொழுது திமுகவிற்கு எதிராக கூட்டணி சுட்டுதலை தொடங்கும்?
X

SushmithaBy : Sushmitha

  |  18 July 2024 3:17 PM GMT

மாதா மாதம் மின் கட்டணம்:

2021 தமிழக பொது தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக திமுக தமிழகத்தில் நிச்சயம் தனது ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது. அப்படி அவர்கள் வீசிய வாக்குறுதியில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமல், வாக்குறுதிகள் அளித்தீர்களே ஏன் செய்யவில்லை? என்று கேள்விகள் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதிரொளித்து வருகிறது. அந்த வரிசையில் மின்சார கட்டணமும் அடங்கும்! அதாவது திமுக ஆட்சிக்கு வந்தால் இரு மாதத்திற்கு ஒரு முறை கட்டப்படும் மின் கட்டணம் ஒவ்வொரு மாதம் செலுத்தும் வகையில் மாற்றப்படும் என்று வாக்குறுதியை திமுக அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. அதற்கு மாறாக தொடர்ச்சியாக மின் கட்டணத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


(எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட போராட்டம்)

உயர்ந்த மின் கட்டணம்:

உதாரணமாக மாதத்திற்கு இரு முறை 500 யூனிட்டுகளை ஒரு குடும்பம் உபயோகிக்கிறது என்றால் முன்பு 2,455 ரூபாய் தான் மின்கட்டணம் வரும். ஆனால் திமுக அரசின் ஆட்சிக்கு பிறகு அமல்படுத்தப்பட்ட புதிய கட்டணங்களால் மின்கட்டணம் 2,565 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

கொந்தளித்த மக்கள் :

அதுமட்டுமின்றி திமுக அரசை நேரடியாகவே சாடி பலர் தங்களது ஆதங்கத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மின்சாரம் மட்டுமின்றி பொது விளக்கு, பத்திரப்பதிவு கட்டணம், நகராட்சி வரி, கழிவுநீர், வழிபாட்டுத் தலங்கள், குடிசை தொழில், தனியார் கல்வி நிறுவனங்கள், விடுதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற மற்ற அனைத்திற்குமே கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த திடீர் மின்சார கட்டண உயர்வால் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி கோவையில் உள்ள பல தொழில் அமைப்பினர் மின்கட்டண உயர்வை திமுக அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்:

இந்த நிலையில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்ற ஜூலை 25ஆம் தேதி தமிழக முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பலைகளை பெற்று வருகிறது.இந்நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் இடம்பெற்ற சில கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், தமிழக திமுக அரசின் கூட்டணியில் நாம் இடம்பெற்று இருந்தாலும்,திமுக அரசு கொண்டு வந்த மின்சார கட்டண உயர்வை எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.இதனை தொடர்ந்து கூட்டத்தில் திமுக அரசு கொண்டு வந்த மின்சார கட்டண உயர்வை எதிர்த்த தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

குரல் கொடுக்குமா மற்ற கூட்டணி கட்சிகள்!

இது திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் திமுகவின் கூட்டணியிலே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெறும்படி வலியுறுத்தி திமுகவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதே சமயத்தில் மக்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் மின்கட்டண உயர்வால் பெரும் பாதிப்பை சந்திக்கிறார்கள் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை போன்று திமுகவின் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்ற ஒரு கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் திமுகவின் கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட மற்றும் சில திமுக கூட்டணி கட்சிகள் திமுகவை எதிர்த்து இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுமா அல்லது கூட்டணிக்காக எதுவும் பேசாமல் வாய்மூடி இருக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என அரசியல் வட்டாரங்களில் சில பேச்சுக்கள் உலா வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News