Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவின் தமிழக பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட தமிழக மாவட்டங்கள் : பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்

திமுகவின் தமிழக பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட தமிழக மாவட்டங்கள் : பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்
X

SushmithaBy : Sushmitha

  |  24 July 2024 5:14 PM GMT

மத்திய பட்ஜெட்:

மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்தது. இதனை அடுத்து ஜூலை 23ஆம் தேதி (நேற்று) 2024 - 25 கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ஐந்து திட்டங்களுக்கு 2 லட்சம் கோடி தொகுப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக ரூபாய் 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கு 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம் மற்றும் வேளாண்மை துறைக்கு ரூபாய் 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு, உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடனுதவி, 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம், பீகாரில் புதிய விமான நிலையம் மற்றும் சாலைகள் அமைக்கப்படும். நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்,

பெண்களுக்கான திட்டத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, தொழில் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்காக மாதம் ரூபாய் 5,000 மற்றும் ரூபாய் 6,000 சிஎஸ்ஆர் நிதியிலிருந்து தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும், பிரதமரின் நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, முத்ரா கடன் 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ஆக உயர்வு, ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டில் விவசாயம், பெண்கள், இளைஞர்கள், சிறு தொழில் வணிகர்கள் மற்றும் தனிநபர் என ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கேலித்தனமான விமர்சனம்:

இந்த பட்ஜெட்டில் ஒரு குறை கூட சொல்ல முடியாததால் தற்போது திமுக புதிய வகையில் விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் எங்குமே குறிப்பிடப்படவில்லை! இப்படி ஓர வஞ்சகம் பார்க்கிறது மத்திய அரசு! என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதுமட்டுமின்றி திமுகவின் ஆதரவாளர்கள் ஐடியில் இருந்து சமூக வலைதளத்தில் பட்ஜெட்டின் நிகழ்ச்சி நிரலில் தமிழகம் இடம்பெறவில்லை என்று கேலியாக பதிவுகள் இடப்பட்டது. அந்த பதிவின் படியே நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களின் பெயர்களை தேடினாலும் கிடைத்திருக்காது. ஏனென்றால் மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டானது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கானதல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கானது என்று திமுக ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பாஜக தரப்பில் பதிலடிகள் கொடுக்கப்பட்டு வந்தது.

வாயடைத்து நின்ற திமுக :

இந்த நிலையில், திமுக கூறும் அதே வழியில் சென்றால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசு தமிழகத்திற்காக தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவே இல்லையே! அதனால் 27 மாவட்டங்களையும் தமிழக அரசு புறக்கணித்ததா? என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதாவது, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், திருவள்ளூர், திருவாரூர் , நீலகிரி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் ஆவணத்தில் இந்த பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதனை அடுத்து " இது கேவலமான திராவிட மாடல் ஆட்சியா?" என்று நெடிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த 2004-2014 காலகட்டத்தில் சமர்பிக்கப்பட்ட 10 பட்ஜெட்களில் 6 ல் தமிழகத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே காங்கிரஸ் திமுக கூட்டணி தமிழக விரோத கூட்டணி! என்று பாஜக மூத்த தலைவரான எச். ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் தற்போது தமிழக பட்ஜெட் குறித்து எழுந்த கேள்விக்கு தமிழக முதல்வர் பதில் கூறுவாரா? என்று கேள்விகள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News