Kathir News
Begin typing your search above and press return to search.

சமூகநீதி பேசும் ஸ்டாலின் ஆட்சியில் தொடரும் மாணவர்களிடையே ஜாதிய மோதல் சம்பவம்!

சமூகநீதி பேசும் ஸ்டாலின் ஆட்சியில் தொடரும் மாணவர்களிடையே ஜாதிய மோதல் சம்பவம்!
X

SushmithaBy : Sushmitha

  |  30 July 2024 5:20 PM GMT

மாணவர்களிடையே ஊன்றியுள்ள சாதிய வேறுபாடு:

தமிழகத்தில் அதிர்ச்சி தரக்கூடிய வகையிலான செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசியல் பிரமுகர்களின் படுகொலை தான் அதிகமாக நடக்கிறது என்றால், பள்ளி மாணவர்கள் தொடர்பான சம்பவங்களும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. வகுப்பறை மற்றும் பொதுவெளியில் மாணவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்வது, ஆசிரியரை தாக்குவது என மாணவர்களுக்கிடையையான சாதி ரீதியிலான பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.

அம்பாசமுத்திரம் மற்றும் மருதகுளம்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்கூடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்களால் ஒரு மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அதை திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி அருகே உள்ள மருதகுளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் இருதரப்பாக ஜாதி ரீதியில் பிரிந்து பெரும் மோதலில் ஈடுபட்டதும், அதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாங்குநேரி சின்னத்துரை:

இந்த சம்பவங்களுக்கு முன்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசித்து வந்த சின்னத்துரை வள்ளியூர் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை இவருடன் படிக்கும் சக மாணவர்களே தொடர்ந்து சாதி ரீதியில் துன்புறுத்தி வந்த காரணத்தினால் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணித்து வந்துள்ளார் சின்னத்துரை, இந்த தகவலை சின்னத்துரையின் தங்கை ஆசிரியரிடம் தெரிவிக்க ஆசிரியர் அவர்களை கண்டித்ததால் கோபம் அடைந்த அந்த மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டிற்குள் புகுந்தே அவரை அறிவாளால் சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த சின்ன துறையின் தங்கை அதை தடுக்க முயன்ற பொழுதும், அவருக்கும் அறிவாளி வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிர்ச்சியை அளித்தது.

நீதிபதி சந்துரு தலைமையில் குழு:

தமிழக பாட புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருக்கும் தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பது கூட பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படவில்லையா என சமூக ஆர்வலர்கள் அரசை நோக்கி கேள்விகளை எழுப்பினர். இதற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதி அரசர் கே.சந்துரு தலைமையில் பள்ளி கல்லூரி மாணவர்களின் ஜாதி இன மோதல் சூழலை மாற்றிட தேவையான பரிந்துரைகளை வழங்கிட ஒரு நபர் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இதனை அடுத்து, பள்ளிகளில் மாணவர்களின் ஜாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் கயிறு, பொட்டு போன்றவற்றை வைக்க தடை விதிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.

திமுகவின் கொள்கை திணிப்பு:

இதற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவியது. மாணவர்களிடையே ஜாதி வேறுபாட்டை குறைக்க இதுதான் வழியா இதன் மூலம் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் என்று விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீதிபதி சந்துரு அவர்களுக்கு அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவை இணைந்து கொள்ளலாம், அதை விட்டுவிட்டு சுயலாபத்திற்காக அரசமைக்கும் குழுக்களின் அமர்ந்து கொண்டு திமுகவின் கொள்கைகளை குழு அறிக்கை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால் அதற்கான எதிர்ப்பு நிச்சயமாக இருக்கும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

வள்ளியூர் சம்பவம்:

இந்த நிலையில் தற்போது மீண்டும் திருநெல்வேலியில் ஜாதி மோதல் சம்பவம் அரங்கேறி இருப்பது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறை சுவற்றில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு மாணவர்கள் ரத்தக்காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அலட்சியம் காட்டும் திமுக:

மாணவர்களிடையே ஜாதிய தீண்டாமை மற்றும் ஜாதி பார்த்து பேசும் பழகும் முறையை ஒழிப்பதற்கு மற்றும் மாணவர்களிடையே சுமூக உறவை ஏற்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவும் கணிசமான முடிவை கொடுக்கவில்லை, அதோடு கொடுக்கப்பட்ட முடிவும் திமுகவின் கொள்கையை விரிவுபடுத்துவது போன்ற வகையில் உள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கிடையான ஜாதி மோதல் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் திமுக அரசு அலட்சியமாகவும், அமைதி காத்தும் வருவது எதற்காக என்பதும் பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News