சீரழியும் தமிழக இளைஞர்கள்.. 'மெத் எனும் அரக்கன்'... விளக்கும் பாஜக பாண்டித்துரை...
By : Bharathi Latha
தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பல பேர் போதைப் பொருள் வழக்கில் கைதாகி வருகிறார்கள். சென்னை பெருநகர் காவல்துறையில் ஒரு உதவியாளர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு என புதிதாக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பொதுவாக காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் என்றவுடன் கஞ்சா, குட்கா, ஹெராயின் மீதுதான் கவனமெல்லாம் இருந்து வந்தது தற்பொழுது காலம் மாறி தற்பொழுது சிந்தடிக்டிரக் "மெத்தாம்பேட்டமைன்” வந்துவிட்டது. இதில் வாசனையே வராத முழுமையாக கெமிக்கலால் மட்டுமே தயாரிக்கப்படும் போதைப் பொருள் இது மாணவர்கள், இளைஞர்கள் கையில் மிக சரளமாக புழக்கத்தில் வந்துவிட்டது.
இந்த மெத் என்பது மெக்கான் ஃபைன் வேதியியல் இது மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களை பாதித்து செய்ய முடியாத விஷயங்களை, நமக்கு கிடைக்காத விஷயங்களை, செய்யக் கூடாது என்கிற விஷயங்களையும் அதை செய்ய தூண்டும். உதாரணத்திற்கு 20-ஆவது மாடியில் இருந்து நேரடியாக தரைத் தளத்திற்கு நாம் வர முடியாது ஒவ்வொரு தளமாக இறங்கி தான் நாம் கீழே வர வேண்டும் என்பது மூளை நமக்கு கொடுக்கும் அறிவுரை சிக்னல். ஒருவேளை இந்த இந்த மெத் என்கிற போதைப் பொருளை பயன்படுத்தினால் அது எப்படி வர முடியாது நம்மால் செய்து காட்ட முடியும் என்று நம்மளுடைய மூளைக்கு தவறான சிக்னலை கொடுத்து செய்து காட்டுகிறேன் என செய்ய தூண்டி 20-ஆவது மாடியில் இருந்து கீழே குதிக்க தூண்டும் இப்படிப்பட்ட தூண்டல்கள் தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தவறான விஷயங்களை செய்ய தூண்டும்.
மெத் என்கிற எதார்த்த பயன்படுத்தினால் சந்தேகம் வராது என்பதால் இதற்கு வேறு வேறு பெயர்களில் உள்ளது. ஃபீட், பைகஸ் காபி , பிளாக் பியூட்டி, ஐஸ், கோ ஃபாஸ்ட், அப்பர், தீராஸ் , எல்லோ பாம் என சந்தேகம் வராத தினந்தோறும் கடந்து போகும் அளவிற்கு பெயர்கள் உள்ளது.இந்த மெத் என்கிற போதைப் பொருளை அப்படியே உட்கொள்ளலாம், மூக்கின் வழியாக எடுத்துக் கொள்ளலாம், ஊசி மூலமாக நம்முடைய நரம்புகளில் ஊசி போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் இப்படி படுத்துவதால் நம்மளுடைய மூளையில் உள்ள "சென்ட்ரல் நேர்வஸ் சிஸ்டம்" முழுமையாக பாதிக்கப்படும் இயற்கைக்கு புறம்பான விஷயங்களை செய்யத் தூண்டும் நம்மளுடைய டிஎன்ஏ முழுமையாக அளிக்கப்படும், சட்டத்திற்கு தர்மத்திற்கு எதிரான செயலை செய்யத் தூண்டும்.
அப்படித்தான் கடந்த ஓரிரு ஆண்டுகளாக தமிழகத்தில் பல இடங்களில் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு நடந்த இடங்களில் ஆய்வு செய்ததில் 50 விழுக்காட்டிற்கு மேலாக போதைப் பொருள் பயன்படுத்திய பின்பு தான் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்து இருப்பதாக அதிர்ச்சி ஊட்டும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த மெத் என்கிற போதைப்பொருள் இயற்கையாக தாவரவியல் மூலம் கிடைக்காது. இதற்கு இரண்டு, மூன்று வேதியியல் பொருட்களை இணைத்தால் மட்டுமே இந்த மெத் என்கிற போதைப் பொருளை உருவாக்க முடியும். குறிப்பாக இது போன்ற சிந்தடிக் டிரக்குகள் உருவாக்குவோர் படித்த பட்டதாரி இளைஞர்கள் என்பதுதான் மிகவும் வருந்தத்தக்க செய்தியாக உள்ளது.
கடந்த வாரங்களின் சென்னையில் மட்டும் பல நபர்கள் சிந்தடிக் டிரக் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இதில் முன்னாள் டிஜிபி ரவீந்திரனின் மகன் அருண் கைதாகி உள்ளது மிகவும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சிந்தடிக் ட்ரக்கை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் போதைப்பொருள் கைமாற்றி இருப்பதாக புகார் வந்து நைஜீரியா நாட்டை சேர்ந்த ஈசி ஜான் மற்றும் சினாய் நகரை சேர்ந்த முன்னாள் டிஜிபி ரவீந்திரன் மகன் அருண், முடிச்சுறை பகுதியை சேர்ந்த மெக்கலன் எனத் தெரியவந்தது. அவர்களைக் கைதுசெய்ததுடன், 3.8 கிராம் Ambhetamine போதைப்பொருளையும், ரூ.1,02,000 பணத்தையும், போலி பாஸ்போர்ட் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
தமிழக காவல்துறையினர் இவர்களை விசாரிக்கும் பொழுது சென்னையில் மெத் தயாரித்து இலங்கை வழியாக ரஷ்யா வரையும், ஹிரான் என்கிற போதைப் பொருள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இலங்கை வந்து சென்னைக்குள் வருவதாகவும், மேலும் இதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய ராட்ச நெட்வொர்க் இருப்பதும் தெரியவந்துள்ளது. டிஜிபியின் மகன் ரவீந்திரன் என்பவர் நாவலூரில் ஒரு மிகப்பெரிய கம்பெனியில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் ஐடி ஊழியர்களிடம் இந்த சிந்தடிக்டிரக் சாதாரண விஷயமாக புலங்கி வருகிறது.அதே வாரத்தில் மெத் கடத்தியதற்காக ராமநாதபுரத்தில் காவல்துறை அதிகாரிகள் இரண்டு நபர்களை கைது செய்து உள்ளனர். அவர்களை விசாரிக்கும் பொழுது நாங்கள் ராமநாதபுரத்தில் விற்பனை செய்ததற்காக தான் சென்னையில் இருந்து கடத்தி வந்தோம் என கூறியிருக்கிறார்கள். எனவே தமிழகத்தின் கடைக்கோடி எல்லையிலும் இந்த மெத் கிடைக்கும் என்கிற அதிர்ச்சி ஊட்டும் தகவல் வெளி வந்தது.
மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்றுவரை இந்த மெத்தை தயாரிக்கும் லேப் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை குழுவாக ஒருங்கிணைக்கப்படவில்லை இதனால் இது சிரமம். ஆனால் சிறுசிறு குழுக்களாக இணைந்து சிறிய இடத்தில் இவர்கள் மெத்தை விற்பனை செய்து வருகிறார்கள். இதில் நாம் கவனம் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், ஆராய்ச்சித் துறையில், ரோபோடிக்ஸ் துறையில், அட்வான்ஸ் டெக்னாலஜியில் இயற்கைக்கு மாற்றாக சிந்திக்கக் கூடிய துறையில் இருக்கும் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களே இந்த சிந்தடிக் ட்ரக்கை தயாரிக்கவும் முடியும், பயன்படுத்தவும் முடியும் என்பது வேதனைக்குரியது.
மெத் என்கிற அரக்கனை நம்முடைய இளைஞர் சமுதாயத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்றால் மெத் தயாரிக்கும் லேபை முதலில் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மூன்று நபர்கள் மனம் வைத்தால் மட்டுமே அவர்களை விரட்ட முடியும்.
- முதலில் நண்பர்கள் ஒரு நண்பனுக்கு தெரியாமல் இன்னொரு நண்பன் எந்த செயலையும் செய்ய மாட்டான், நண்பனின் அந்தரங்கள் அனைத்தையும் இன்னொரு நண்பனுக்கு கண்டிப்பாக தெரியும். குறைந்தபட்சம் சந்தேகம் வரும். நம்முடைய தேசம், நண்பனின் குடும்பம் நலமாக இருக்க வேண்டி இது போன்ற விஷயங்கள் தெரிந்தால் செய்தால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும்.
- இரண்டாவதாக பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் நிச்சயமாக கண்டுபிடிக்க முடியும்.இவை அனைத்துமே மிகவும் அட்வான்ஸ் டெக்னாலஜியில் வேதிய பொருளையும் பயன்படுத்தி தயாரிக்கும் போதைப் பொருள்.ஆகையினால் மாணவர்கள் எதைப் பற்றியான ஆராய்ச்சி செய்கிறார்கள் சரியான வழியில் தான் சென்று கொண்டிருக்கிறார்களா ? என்பதை கல்லூரியை தாண்டி ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் மனம் வைத்து வரக்கூடிய இளைஞர் சமுதாயத்தை காப்பாற்ற முன்வரவேண்டும்.
- மூன்றாவதாக வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் மட்டுமே இதனை கண்டுபிடிக்க முடியும் இது ஒரு சிறிய இடத்தில் இந்த மெத் என்கிற போதைப் பொருளை தயாரிக்க முடியும் பெற்றோர்கள் பிள்ளைகள் படிப்பதற்கு பெரிய கல்லூரிகளிலோ, பெரிய படிப்பில மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனத்திலோ, மிகப்பெரிய ஐடி கம்பெனிகளில் வேலை செய்தாலோ தன்னுடைய பிள்ளை வழக்கத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா? அளவுக்கு அதிகமாக எப்படி பணம் வருகிறது என்பதையெல்லாம் ஆராய வேண்டியது பெற்றோரின் கடமை. ஒரு கிராம் மெத்யின் விலை ரூபாய் 8,500 /- அது வெளி சந்தையில் விற்கும் போது அதன் விலை ரூபாய் 85,000/- ஆகையினால் மெத் என்கிற போதைப் பொருளை ஒரு சின்ன ரூம்குள் தயாரித்து வியாபாரத்திற்கு விற்றால் ஒரு கிராமின் விலை 85,000. இந்தக் காலத்தில் இளைஞர்கள் குறுகிய நேரத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாக ஆக வேண்டும் என்கிற நோக்கத்தில் குறுக்கு வழியில் தவறாக சென்று இதை செய்து வருகின்றனர். திடீரென்று பணம் வந்தால் பெற்றோர்கள் எப்படி வந்தது என இருக்க கேட்க வேண்டும். அவர்கள் சம்பாத்தியத்தில் பெற்றோர்கள் வாழ்ந்தாலும் தவறான வழியில் வருகிறதா? என பெற்றோர்கள்,சகோதரர்கள், சகோதரிகள் அதை கேட்டு தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.
இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பது பல நூறு ஆண்டுகள் கனவு அதை நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் திறன்பட செய்து வருகிறார். அந்நிய நாட்டு எதிரிகள் நாம் வல்லரசு ஆக கூடாது. அப்படி வல்லரசு ஆவதற்கு முக்கிய காரணம் இளைஞர்கள் என கருதி அவர்களின் மூளையை மழுங்கடித்து அவர்கள் தவறான பாதையில் செல்ல மிகப்பெரிய ஒரு நெட்வொர்க் வேலை செய்து வருகிறது. அதனை நான் வீட்டுக்குள்ளேயே உடைத்து எறிய வேண்டும்.
இந்தியாவின் கலை, கலாச்சாரமும் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக எங்களைப் போன்று இளைய சமுதாயம் வீரத்துடனும் உட்வேகத்துடனும் வாழ வேண்டும் என்று கூறி என் இரு கண்களாக இருக்கும் ஆசிரியப் பெருமக்களிடமும், பெற்றோர்களிடமும் மற்றும் நெற்றி கண்ணாக விளங்கும் நண்பர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.காவல்துறை அதிகாரிகள் துரித நேரத்தில் போதை பொருள் விற்பவர்களையும் தயாரிப்பவர்களையும் கைது செய்து போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாங்கள் இந்தத் தேசத்தை காப்பாற்றுவதற்காக, போதைப் பொருள் இல்லா நாட்டை உருவாக்க காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட போர்படை தளபதிகளாக தயார் நிலையில் உள்ளோம்.
வாழ்க தேசம் !! வாழ்க பாரத நாடு !!!